பேங்க் அக்கவுண்ட்.. இனி ரூ.15000 லிமிட்.. Google Pay, PhonePe, Paytm கதையை முடித்த BHIM.. இதுதான் புது லிமிட்!
பேங்க் அக்கவுண்ட் வைத்திருக்கும் கஸ்டமர்கள் கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ ஆப்களைவிட்டு இந்திய அரசின் கீழ் செயல்படும் பீம் (BHIM) ஆப்புக்கு மாறும்படி ரூ.15,000 லிமிட் கொடுக்கப்பட்டுள்ளது. மாதத்துக்கு இந்த லிமிட்டின்படி பேங்க் கஸ்டமர்கள் பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம். அதற்கு மேல் பணத்தை அனுப்ப முடியாது. இந்த புதிய லிமிட் குறித்த முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இது ஒட்டுமொத்த பேங்க் கஸ்டமர்களுக்கும் பொருந்தாது. யுபிஐ சர்க்கிள் (UPI Circle) மூலம் பரிவர்த்தனைகளை செய்யும் பேங்க் கஸ்டமர்களுக்கு மட்டுமே பொருந்தும். அதாவது, கூகுள் பே, போன்பே, பேடிஎம் மற்றும் பீம் போன்ற யுபிஐ ஆப்களில் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (என்பிசிஐ) ஆனது யுபிஐ சர்க்கிள் விருப்பத்தை கொண்டுவந்துள்ளது.

இந்த யுபிஐ சர்க்கிள் வழியாக ஒரு யுபிஐ ஐடியில் இருந்து 5 செகண்டரி யுபிஐ ஐடிகளுக்கு பரிவர்த்தனையை செய்ய அனுமதி கொடுக்க முடியும். பிரைமரி யுபிஐ ஐடி மட்டுமே பேங்க் அக்கவுண்ட்டுடன் இணைக்கப்பட்டு இருக்கும். செகண்டரி ஐடிகளானது, பிரைமரி ஐடியுடன் மட்டுமே இணைக்கப்பட்டு இருக்கும். ஆகவே, செகண்டரி ஐடிகளுக்கு லிமிட்கள் இருக்கின்றன.
அதாவது, 5 செகண்டரி ஐடிகளுக்கு மட்டுமே பரிவர்த்தனை செய்ய அனுமதி கொடுக்கப்படும். ஒரு ஐடி மூலமாக ஒரு நாளுக்கு அதிகபட்சம் ரூ.5,000 மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும். அதேபோல மாதத்துக்கு ரூ.15,000 மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும். குறிப்பாக பிரைமரி ஐடியை வைத்திருக்கும் கஸ்டமர்கள் அனுமதி கொடுத்தால் மட்டுமே ஒரு பரிவர்த்தனையை செகண்டரி யூசர்கள் முடிக்க முடியும்.
இது ஒட்டுமொத்த யுபிஐ கஸ்டமர்களுக்கும் கிடைக்கும் விருப்பமாக இருக்கிறது. ஆனால், மாதத்துக்கு ரூ.15,000 லிமிட் என்னும் ஃபுல் டெலிகேஷன் (Full Delegation) இன்னும் கூகுள் பே, போன்பே மற்றும் பேடிஎம் போன்ற ஆப்களில் அமலுக்கு வரவில்லை. ஆனால், இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் கீழ் செயல்படும் பீம் (BHIM) ஆப்பில் அந்த லிமிட் அமலுக்கு வந்துவிட்டது.
இதனால், கூகுள் பே, போன்பே, பேடிஎம் ஆப்களை பின்னுக்கு தள்ளி இருக்கிறது. ஏனென்றால், இந்த யுபிஐ சர்க்கிள் மூலமாக பேங்க் அக்கவுண்ட் இல்லாத 5 பேருக்கு யுபிஐ பரிவர்த்தனை செய்ய அனுமதி கொடுக்க முடியும் என்றாலும், மாதத்துக்கு ரூ.15,000 வரையில் பரிவர்த்தனை செய்யலாம் என்னும் அதிகபட்ச லிமிட் பீம் ஆப்பில் மட்டுமே இருக்கிறது. இதனால் தனி கவனம் பெறுகிறது.
யுபஐ சர்க்கிளை பயன்படுத்துவது எப்படி?
1. BHIM பேமெண்ட் ஆப்பை திறந்து ஹோம் பேஜில் இருக்கும் யுபிஐ சர்க்கிள் பிரிவுக்கு செல்ல வேண்டும்.
2. சர்க்கிளுக்கு அழைக்கவும் (Invite to circle) என்ற டேப் இடம்பெற்றிருக்கும். இதில் உங்களது கான்டாக்ட் நம்பரை கொடுக்க வேண்டும்.
3. பிறகு அவர்களது யுபிஐ ஐடியை கொடுக்கலாம் அல்லது அந்த ஐடியின் கியூஆர் கோடை ஸ்கேன் செய்து இணைக்கலாம்.
4. மாதாந்திர வரம்பை அங்கீகரித்தல் (Approve a Monthly Limit) விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். பிறகு, ஃபுல் டெலிகேஷன் (Full Delegation) என்பதை தேர்ந்தெடுக்கவும்.
5. உங்களது உறவை தேர்வுசெய்க (Choose your relationship) விருப்பும் தோன்றும். (குழந்தை, மனைவி) உள்ளிட்டவை.
6. இவர்களது ஆதார் கார்டை பயன்படுத்தி அவர்களின் அடையாளத்தை சரிபார்க்க வேண்டும்.
7. மாதாந்திர லிமிட் (ரூ.15,000 வரை) மற்றும் வேலிடிட்டி காலத்தை (அதிகபட்சம் 5 ஆண்டுகள், குறைந்தபட்சம் 1 மாதம்) கொடுக்க வேண்டும்.
8. இப்பேது பேங்க் அக்கவுண்ட்டை தேர்ந்தெடுத்து, யுபிஐ பின் கொடுத்து அங்கீகரிக்க வேண்டும்.
9. செகண்டரி யூசர்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, உடனடியாக யுபிஐ பேமெண்ட்களை செய்யத் தொடங்கலாம்.


Click it and Unblock the Notifications








