புது UPI ரூல்ஸ்.. ரூ.1,000 இல்ல.. ரூ.2,000 இல்ல.. ரூ.10,000-க்கு போகுது.. பணம் எடுக்க இதுதான்.. என்ன மாறுது?
என்பிசிஐ (NPCI) என்று அழைக்கப்படும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India) ஆனது யுபிஐ மூலம் பணம் எடுப்பதில் புதிய விதிகளை அமல்படுத்த இருக்கிறது. இந்த புதிய விதிகளால் ரூ.1,000 மற்றும் ரூ.2,000 லிமிட்டில் இருந்து ரூ.10,000 லிமிட்டுக்கு பணம் எடுத்தல் அதிகரிக்கப் போகிறது. இந்த புதிய விதிகளால் என்னென்ன மாறப்போகிறது. முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்த விதிகள் கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற ஆப்கள் மூலம் டிஜிட்டலாக பணம் அனுப்பவோ அல்லது பெறவோ பொருந்தாது. யுபிஐ மூலமாக பணத்தை கையில் எடுக்கும் கஸ்டமர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஏடிஎம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மெர்ச்சண்ட்களில் மட்டுமே யுபிஐ மூலம் பணத்தை ரொக்கமாக எடுக்க முடிகிறது.

ஆனால், இதற்கு லிமிட் இருக்கிறது. அதாவது, சிட்டிகள் மற்றும் டவுன்களில் இருக்கும் யுபிஐ கஸ்டமர்கள் அங்குள்ள ஏடிஎம் அல்லது மெர்ச்சண்ட்கள் மூலமாக ரூ.2,000 பணத்தை எடுத்து கொள்ளலாம். அதேபோல கிராப்புறங்களில் இருக்கும் கஸ்டமர்கள் ரூ.1,000 பணத்தை எடுத்து கொள்ளலாம். இதுவே இப்போது ஒரு பரிவர்த்தனைக்கான வரம்பாக இருக்கிறது.
இந்த வரம்பு அதிகரிக்கப்பட இருக்கிறது. இதற்காக இந்திய தேசிய கொடுப்பனவு கழகமானது, ஆர்பிஐ (RBI) என்று அழைக்கப்படும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவிடம் (Reserve Bank of India) அப்ரூவல் கேட்டுள்ளது. இந்த அப்ரூவல் கிடைத்தவிட்டால், யுபிஐ மூலமாக ரூ.10,000 வரையில் யுபிஐ மூலமாக பணத்தை எடுத்து கொள்ள முடியும்.
வணிக நிருபர்களாக (Business Correspondents) இருக்கும் ஏஜென்ட்களிடம் முதலில் பணத்தை பெறும்படி சேவை கொண்டுவரப்பட இருக்கிறது. இந்த வணிக நிருபர்கள் ஏற்கனவே ஏடிஎம் கார்டுகள் அல்லது ஆதார் கார்டு பேஸ்டு பயோமெட்ரிக் மூலம் பணத்தை எடுத்து கொடுப்பார்கள். அதேபோல யுபிஐ மூலமும் பணத்தை எடுத்து கொடுப்பார்கள்.
இந்த வணிக நிருபர்கள் மட்டுமல்லாமல், ஏடிஎம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மெர்ச்சண்ட்கள் மூலமும் புதிய வரம்பில் பணத்தை எடுக்க அனுமதி கொடுக்கப்பட இருக்கிறது. ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் அப்ரூவல் கிடைத்த பிறகு, சேவைகளை தொடங்கும். மேலும், இன்று முதல் குறிப்பிட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு புதிய வரம்புகள் அமலுக்கு வந்துவிட்டன.
இதில் பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்காக யுபிஐ பரிவர்த்தனையை பயன்படுத்தினால், ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.5 லட்சம் வரையில் அனுப்பி கொள்ளலாம். அதேபோல 24 மணிநேரத்திற்குள் ரூ.10 லட்சம் வரையில் பணத்தை யுபிஐ மூலம் பரிமாற்றம் செய்யலாம். இன்சூரன்ஸ் செலுத்துவதற்கு ரூ.5 லட்சமாக ஒரு பரிவர்த்தனை வரம்பு அதிகரித்துள்ளது.
அதேபோல 24 மணி நேரத்தில் அதிகபட்சம் ரூ.10 லட்சம் பணத்தை யுபிஐ மூலம் பரிமாற்றம் செய்யலாம். பயணத்துக்காக செலவு செய்யும்போது, ஹோட்டல் புக்கிங், டிக்கெட் புக்கிங் போன்றவற்றில் யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்தால்,ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.5 லட்சம் வரை வரம்பு அதிகரித்துள்ளது. அதுவே 24 மணிநேரத்திற்கு ரூ.10 லட்சம் பரிமாற்றம் செய்யலாம்.
யுபிஐ மூலம் கிரெடிட் கார்டு பில் செலுத்தும் வரம்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆகவே, ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.5 லட்சம் வரையில் அனுப்பலாம். அதேபோல 24 மணிநேரத்திற்கு அதிகபட்சம் ரூ.6 லட்சம் வரையில் பரிமாற்றம் செய்து கொள்ளலாம். தங்கம், வெள்ளி உள்ளிட்ட நகைகள் வாங்கும்போது, ரூ.2 லட்சம் வரையில் யுபிஐ பயன்படுத்தலாம்.
அதிகபட்சம் ஒரு நாளில் ரூ.6 லட்சம் யுபிஐ மூலம் பரிமாற்றம் செய்து கொள்ளலாம். டிஜிட்டல் பேங்க் அக்கவுண்ட் ஓப்பன் செய்யும்போது, அதில் டெபாசிட் செய்வதற்கு யுபிஐ பயன்படுத்தினால், ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.5 லட்சம் அனுப்ப முடியும். ஆரம்ப நிதிக்கு ரூ.2 லட்சம் பரிமாற்றம் செய்து கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications