இனி 10 செக்கென்ட் தான் லிமிட்.. புது UPI ரூல் அமல்.. Google Pay, PhonePe, Paytm ஆப்களுக்கு செக்!
யுபிஐ (UPI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (Unified Payments Interface) சேவைக்கான "10 செக்கென்ட ரூல்" அமலுக்கு வந்துள்ளது. இது கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) உள்ளிட்ட யுபிஐ ஆப்களின் வழியாக நடக்கும் பணப்பரிவர்தனையில் 3 முக்கியமான மாற்றங்களை கொண்டு வந்துள்ளது
முதல் மற்றும் முக்கியமான மாற்றம் - யுபிஐ பரிவர்த்தனைகள் மற்றும் அவற்றின் ஏபிஐ ரெஸ்பான்ஸ் ஆனது முன்னதாக இருந்த 30 வினாடிகள் என்கிற தரநிலையிலிருந்து 10 வினாடியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் - பணம் செலுத்துதல்களை மிகவும் நம்பகமானதாகவும், விரைவாகவும் மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, குறிப்பாக உச்சக்கட்ட பயன்பாட்டு காலங்களில்!

யுபிஐ சேவையில் ஏபிஐ என்றால் என்ன (What is API in UPI)? ஏபிஐ என்கிற அப்ளிகேஷன் புரோகிராமிங் இன்டர்பேஸ் (Application Programming Interface) என்பது ஒரு டிஜிட்டல் பாலமாகும், இது இரண்டு ஆப்கள் அல்லது அமைப்புகள் ஒன்றுக்கொன்று தானாகவே "பேச" அனுமதிக்கிறது.
நீங்கள் யுபிஐ வழியாக கட்டணம் செலுத்தும் போது உங்கள் யுபிஐ ஆப் (கூகுள் பே அல்லது போன்பே அல்லது பேடிஎம்) ஆனது பணம் கிடைக்கிறதா என்று உங்கள் வங்கியிடம் "கேட்க" வேண்டும், பின்னர் அதை ஏற்குமாறு பெறுநரின் வங்கியிடம் "சொல்ல" வேண்டும். இந்த உரையாடல் ஏ பிஐ-கள் மூலம் நிகழ்கிறது.
யுபிஐ சேவையும் அதன் அமைப்புகளும் - ஒவ்வொரு மாதமும் சாதனை செய்யும் அளவிலான தினசரி பரிவர்த்தனை அளவை எட்டி வரும் நிலையில், இந்தியாவில் டிஜிட்டல் வழியிலான பேமண்ட்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் யுபிஐ சேவையின் கீழ் வேகம் தொடர்பான நிகழ்நேர மேம்பாடுகளை கொண்டுவருவது மிகவும் முக்கியமாகும்
இந்த மேம்பாடுகள் கூகுள் பே, போன்பே மற்றும் பேடிஎம் போன்ற தளங்களில் அதிக டிராஃபிக் (ஒரே நேரத்தில் பல பேர் பயன்படுத்தும்) நேரங்களில் ஏற்படக்கூடிய செயலாக்க தடைகளைக் குறைப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளன. இந்த விரைவான செயலாக்கம் - தாமதங்களை குறைக்கவும், நுகர்வோர் மற்றும் வணிகர்களுக்கு ஒட்டுமொத்த அனுபவத்தை மேம்படுத்தவும் உதவும் என்பதில் சந்தேகமே வேண்டாம்
வலுவான பாதுகாப்பு & கட்டுப்பாடுகளும் சேர்க்கப்பட்டுள்ளன: யுபிஐ சேவையில் "பாதுகாப்பு" தொடர்பான விஷயங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. பணப்பரிவர்த்தனைகள், குறிப்பாக அதிக மதிப்புள்ளவை, பாதுகாப்பாகவும் வெளிப்படையாகவும் அங்கீகரிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக மேம்படுத்தப்பட்ட சரிபார்ப்பு தேவைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
இதில் பணம் செலுத்துவதற்கு முன் தெளிவான உறுதிப்படுத்தல் ப்ராம்ப்ட்கள் (confirmation prompts) மற்றும் தொடர்ச்சியான அல்லது தானியங்கி டிடெக்ஷன்கள்களுக்கான (Automated deductions) மேம்பட்ட பாதுகாப்புகள் ஆகியவைகள் அடங்கும். இது பயனர்கள் - சந்தாக்கள் மற்றும் சேவைகளில் உள்ள கட்டாயங்களை (Mandate) நிர்வகிப்பதையும், ரத்து செய்வதையும் எளிதாக்குகிறது.
மேலும் நீண்ட காலமாக பயன்படுத்தப்படாத செயலற்ற யுபிஐ ஐடிகள், பயனர் தங்கள் கணக்கை மீண்டும் சரிபார்க்கும் வரை தற்காலிக கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளக்கூடும். இந்த நடவடிக்கை - மோசடி நடவடிக்கைக்காக பழைய அல்லது மறந்துபோன கணக்குகள் தவறாக பயன்படுத்தப்படும் அபாயத்தை குறைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது
மற்றொரு முக்கியமான மாற்றம் தோல்வியுற்ற பேமண்ட்களை மேம்படுத்துவதாகும். புதிய விதிகளின் கீழ், வங்கிகள் மற்றும் யுபிஐ ஆப்கள் நிலுவையில் உள்ள அல்லது சிக்கிய பரிவர்த்தனைகளை விரைவாக, பெரும்பாலும் சில மணிநேரங்களுக்குள் தீர்க்க வேண்டும். மேலும் பயனர்கள் என்ன நடந்தது, ஏன் நடந்தது என்பதை புரிந்துகொள்ள தெளிவான ஸ்டேட்டஸ் அப்டேட்களையும் வழங்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








