Home
News

புது ரூல்ஸ்.. UPI-க்கு இனி ரூ.5000 இல்ல.. ரூ.10000.. 2 பேங்க் அக்கவுண்ட்.. RBI வெச்சாச்சு.. என்னென்ன வருது?

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா - ஆர்பிஐ (Reserve Bank of India - RBI) ஆனது பேங்க் அக்கவுண்ட் மூலம் யுபிஐ (UPI) பரிவர்த்தனைகளை செய்யும் ஒட்டுமொத்த கஸ்டமர்களுக்கும் புது விதிகளை கொண்டுவந்திருக்கிறது. இந்த விதிகள் மூலம் 2 பேங்க் அக்கவுண்ட்கள், ஆதார் கார்டு மூலம் ஓடிபி, ரூ.5,000-இல் இருந்து ரூ.10,000 பரிவர்த்தனை வரம்பு உள்ளிட்ட பல்வேறு விதிகள் வந்து இருக்கின்றன. இந்த விதிகள் எந்தெந்த கஸ்டமர்களுக்கு பொருந்தும்? இதனால் என்னென்ன மாற்றங்கள் வரப் போகிறது? உள்ளிட்ட விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.

பேங்க் அக்கவுண்ட் வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு யுபிஐ பரிவர்த்தனைகள் பற்றி சொல்ல தெரிய வேண்டியது கிடையாது. ஆனால், யுபிஐ 123பே (UPI 123Pay) பற்றி தெரிந்திருக்காது. இந்த யுபிஐ 123பே மூலம் இன்டர்நெட் இல்லாமேயே பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம். இதற்கு ஸ்மார்ட்போன் மட்டுமல்ல, பீச்சர் போன் இருந்தாலே போதும் யுபிஐ பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்.

புது ரூல்ஸ்.. UPI-க்கு இனி ரூ.5000 இல்ல.. ரூ.10000.. 2 அக்கவுண்ட்கள்!

இந்த யுபிஐ 123பே விதிகளிலேயே இப்போது ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா மாற்றம் செய்துள்ளது. முதலாவது யுபிஐ 123பே பரிவர்த்தனை வரம்பு (UPI 123Pay Transaction Limit) அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. யுபிஐ 123பே வைத்திருக்கும் கஸ்டமர்கள் ரூ.5000 வரை பரிவர்த்தனை செய்து கொள்ள முடிந்தது. ஆனால், இப்போது, இந்த வரம்பு ரூ.10,000ஆக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த பரிவர்த்தனை செய்வதற்கு கட்டணம் கிடையாது. ஆனால், யுபிஐ 123பே பரிவர்த்தனை செய்ய 4 முறைகள் மட்டுமே இருக்கின்றன. இதற்கு இன்டர்நெட் தேவையில்லை. ஐவிஆர் நம்பர் (IVR Number), சவுண்ட் பேஸ்டு பேமெண்ட் (Sound Based Payment), மிஸ்டு கால் பேமெண்ட் (Missed Call Payment) மற்றும் ஓஇஎம் பரிவர்த்தனை (OEM Payment) ஆகியவை இருக்கின்றன.

இதற்கு ஆதார் ஓடிபி (Aadhaar OTP), யுபிஐ பின் நம்பர் (UPI PIN Number) போன்றவை கொடுக்க வேண்டி இருக்கும். ஐவிஆர் மூலம் எப்படி பரிவர்தனை செய்யவது என்பதை பார்ப்போம். இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகம் - என்சிபிஐ (National Payments Corporation of India - NCPI) இதற்காக முன்கூட்டி-வரையாறுக்கப்பட்ட நம்பர்களை கொடுத்துள்ளது. இந்த நம்பரை டைப் செய்து பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம்.

அதேபோல மிஸ்டு கால் மூலம் உங்களால் பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும். அதாவது, நீங்கள் பணம் அனுப்ப வேண்டிய நபருக்கு அவரது யுபிஐ ஐடியுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பருக்கு மிஸ்ட் கால் கொடுக்க வேண்டும். இதை செய்த பிறகு உங்களுக்கு யுபிஐ சேவைக்கான இன்கம்மிங் கால் வரும். இதில் உங்களது யுபிஐ பின், எவ்வளவு பணம் அனுப்ப வேண்டும் உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்படும்.

இதை கொடுத்து பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். இதற்கு அடுத்து சவுண்ட் பேஸ்டு பரிவர்த்தனை இருக்கிறது. இந்த பரிவர்த்தனை டோன்டேக் (Tonetag) என்எஸ்டிஎல் பேமெண்ட் பேங்க் (NSDL Payments Bank) மூலம் வழங்கப்படுகிறது. இந்த டோன்டேக் மூலம் யுபிஐ 123பே கஸ்டமர்களுக்கு பிரத்யேக டோன் ஒதுக்கப்படும். நீங்கள் பணம் அனுப்ப வேண்டியவரின் டிவைஸில் என்சிபிஐ குறிப்பிட்ட ஐவிஆர் நம்பருக்கு கால் செய்ய வேண்டும்.

அப்போது, உங்களுக்கு ஒதுக்கப்பட்ட டோனை உறுதி செய்து கொள்ளலாம். அதன்பிறகு யுபிஐ பின்நம்பர் கொடுத்து, அந்த பரிவர்த்தனையை செய்து கொள்ளலாம். இந்த டோன் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் மாறுபடுவதால். பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. இறுதியாக ஓஇஎம் பரிவர்த்தனை இருக்கிறது. இது ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் ஆப் போலவே பீச்சர்கள் போன்களுக்கும் கிடைக்கும்.

ஆனால், இன்டர்நெட் இல்லாமல் பயன்படுத்தலாம். இதற்கு கியூஆர் கோட் ஸ்கேனிங் இருக்கும். ஆனால், இதற்கும் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ஒருவேளை யுபிஐ 123பே கஸ்டமர்கள் 2 பேங்க் அக்கவுண்ட்கள் வைத்திருந்தால், கரண்ட் பேங்க் அக்கவுண்ட்டை டீ-ரிஜிஸ்டர் செய்துவிட்டு 2ஆவது பேங்க் அக்கவுண்ட் மூலம் பணம் அனுப்பி கொள்ளலாம். ஒரே நேரத்தில் முடியாது.

Best Mobiles in India

English summary
New Rules For UPI 123Pay Per Transaction Limit Changes From RBI Check Increased Transaction Limit
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X