Home
News

PhonePe-யின் புதிய ரூ.100 விதி.. 3 மாதங்களுக்கு 1 ஒருமுறை கட்டணம்.. ஏன் செலுத்த வேண்டும்.. முதல்ல இதை பாருங்க!

யுபிஐ (UPI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (Unified Payments Interface) வழியாக பரிவர்த்தனை செய்வதில் யுபிஐ வாலெட் (Wallet) பரிவர்த்தனைகளும் அடங்கும். இதில் முன்கூட்டியே பணத்தை கிரெடிட் செய்து வைத்து, தேவைப்படும்போது பயன்படுத்தி கொள்ளலாம். இது நேரடியாக பேங்க் அக்கவுண்ட்டுடன் இணைக்கப்படாது.

வாலெட்டில் இருந்து மட்டுமே பணம் டெபிட் செய்யப்படும். இதனால், டிராவல் செய்யும்போது, தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்ப இந்த யுபிஐ வாலெட் பயன்படுத்தப்படுகிறது. கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) உள்ளிட்ட யுபிஐ ஆப்களில் இந்த வாலெட் பரிவர்த்தனைகளை செய்து கொள்ள முடியும். இதுவரை எந்த கட்டணமும் இதற்கு விதிக்கப்படாமல் இருந்தது.

PhonePe-யின் புதிய ரூ.100 விதி.. 3 மாதங்களுக்கு 1 ஒருமுறை கட்டணம்!

ஆனால், போன்பே நிறுவனமானது, வாலெட் சேவைக்காக புதிய பராமரிப்பு கட்டண விதிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் போன்பே வாலெட்களுக்கு (PhonePe Wallet) பராமரிப்பு கட்டணம் (Maintenance Fee) வசூலிக்கப்பட இருக்கிறது. காலாண்டுக்கு ரூ.100 வரையில் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.

புதிய விதிமுறையின்படி, போன்பே வாலெட்டில் இருந்து தொடர்ந்து 12 மாதங்களுக்கு எந்தவித பரிவர்த்தனையும் நடைபெறவில்லை என்றால், அது செயலற்ற (Inactive) வாலெட்டாக கணக்காக எடுத்து கொள்ளப்படும். இப்படிப்பட்ட வாலெட்களுக்கு மட்டுமே காலாண்டுக்கு ரூ.100 வரையில் பராமரிப்பு கட்டணம் விதிக்கப்படும். ஆகவே, 3 மாதங்களுக்கு ஒரு முறை கட்டணம் இருக்கும்.

யுபிஐ பரிவர்த்தனைகள் செய்தால் போதும் என்று நினைக்க வேண்டாம். போன்பே வாலெட் பரிவர்த்தனைக்கு மட்டுமே இது பொருந்தும். ஆகவே, வாலெட்டில் இருந்து, எந்த பரிவர்த்தனையும் செய்யாமல் இருந்தால், கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். 12 மாதங்களில் ஒரு முறை போன்பே வாலெட்டை பயன்படுத்தினால் கட்டணம் விதிக்கப்படாது.

ஆகவே, இந்த கட்டணத்தை தவிர்க்க ஆண்டுக்கு குறைந்தது ஒரு முறையானது போன்பே வாலெட்களில் இருந்து பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். இல்லாதபட்சத்தில் போன்பே வாலெட்டில் இருக்கும் பேலன்ஸ் தொகையில் இருந்து பராமரிப்பு கட்டணம் வசூலிக்கப்படும். மற்றொரு வழியும் இருக்கிறது. போன்பே பேலன்ஸை முழுமையாக பயன்படுத்திவிடுங்கள்.

பிறகு, போன்பே வாலெட்டை டிஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள். பிறகு தேவைப்படும்போது, மீண்டும் ரீஆக்டிவேட் செய்துவிடுங்கள். இதில் ஏதாவது ஒன்றை செய்து பாரமரிப்பு கட்டணத்தை தவிர்த்துவிடுங்கள். பேலன்ஸை அதில் வைத்துவிட்டு, எந்த பரிவர்த்தனைகளையும் செய்யாமல் போனால், அதை போன்பே நிறுவனம் பராமரிக்க வேண்டி இருக்கிறது.

இதனால், கட்டணம் விதித்து இருக்கிறது. இருப்பினும், உடனடியாக போன்பே வாலெட்டில் இருந்து பாரமரிப்பு கட்டணம் வசூலிக்கப்படாது. 15 நாட்களுக்கு முன்னதாகவே போன்பே பயனர்களுக்கு அறிவிக்கப்படும். இந்த அறிவிப்பு வந்தவுடன், உடனடியாக போன்பே வாலெட்டில் இருந்து பரிவர்த்தனை செய்தால், எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது.

ஆகவே, எளிதில் கட்டணத்தில் இருந்து தப்பிக்க முடியும். சொல்லப் போனால், போன்பேவில் செயலற்று கிடைக்கும் வாலெட்களை வாடிக்கையாளர்கள் மீண்டும் பயன்படுத்தவும். செயலற்ற வாலெட்களை பராமரிப்பத்தில் இருக்கும் செலவை குறைக்கவும் போன்பே நிறுவனமானது, இந்த பராமரிப்பு கட்டணத்தை கொண்டுவந்து இருப்பது தெரிகிறது.

கூகுள் பே, பேடிஎம், பீம் உள்ளிட்ட யுபிஐ ஆப்களிலும் (UPI Apps) வாலெட் பரிவர்த்தனைகளுக்கு அனுமதி கொடுக்கப்படுகிறது. ஆனால், எந்தவித கட்டணமும் இதுவரையில் விதிக்கப்படவில்லை. வருட கணக்கில் பயன்படுத்தாமல் போனாலும் கட்டணம் இருக்கவில்லை. ஆனால், போன்பே நிறுவனம், இப்போது தொடங்கி இருப்பதால், மற்ற யுபிஐ பேமெண்ட் நிறுவனங்களும் பராமரிப்பு கட்டணத்தை வசூலிக்க வாய்ப்புள்ளது. இதனாலேயே யுபிஐ கஸ்டமர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

Best Mobiles in India

English summary
New Rules For PhonePe Wallets Charging Rs 100 Quarterly Maintenance Fee For Inactive For 365 Days
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X