புது PAN ரூல்ஸ்.. ஜன.1 முதல் அமல்.. உடனே இதை முடிச்சுடுங்க.. அப்புறம் செலவாகும்.. ஆதார் இருக்குல.. இனிமே என்ன?
டிசம்பர் மாதத்தில் அமலுக்கு வரும் பல்வேறு புது விதிகளுக்கு மத்தியில் ஒட்டுமொத்த பேங்க் கஸ்டமர்களுக்கும் முக்கியமானதாக பான் கார்டு விதிகள் (PAN Card Ruels) மாறிவிட்டன. இந்த விதிகள் டிசம்பர் 31ஆம் தேதி வரையில் கஸ்டமர்களுக்கு ஒரு தொல்லையும் கொடுக்காது. ஆனால், அதற்குள் ஆன்லைனில் முக்கியமான ஒரு வேலையை செய்யாவிட்டால், செயலிழப்பு செய்யப்பட்டு நீங்கள் பரிவர்த்தனைகளை செய்ய முடியாமல் போகலாம். இப்போது, என்ன செய்ய வேண்டும்? ஆதார் கார்டு மூலம் எளிதாக அந்த வேலையை முடிப்பது எப்படி?
ஒட்டுமொத்த பேங்க் கஸ்டமர்களுக்கும் ஆதார் கார்டு எவ்வளவு முக்கியமோ, அதைவிட பான் கார்டு முக்கியமாக மாறிவிட்டது. பான் கார்டு வைத்திருக்கும் அளவுக்கு பேங்க் அக்கவுண்ட்டில் அவ்வளவு பணம் இல்லை, என்றாலும், உங்களது பான் கார்டுடன் ஆதார் கார்டை லிங்க் செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை ஆன்லைன் மூலம் செய்து முடிக்க அவகாசம் கொடுக்கப்பட்டது.

இந்த அவகாசத்துக்குள் செய்து முடிக்காமல் போனால், அபராதம் செலுத்தி ஆதார் கார்டு இணைப்பு செய்யப்பட வேண்டி இருக்கிறது. ஆனால், இப்போது உங்களது பான் கார்டே செயலிழப்பு செய்யப்பட இருக்கிறது. இதனால், உங்களது பான் ஆதார் லிங்க் (PAN Aadhaar Link) முடிக்கப்படும் வரையில் அதன் மூலம் பேங்க் பரிவர்த்தனைகளை கஸ்டமர்களால் செய்ய முடியாமல் போக வாய்ப்புள்ளது.
ஆகவே, வருமான வரி செலுத்துதல் மட்டுமல்லாமல், லோன் பெறுவதற்கு விண்ணப்பிப்பது, ரூ.2 லட்சத்துக்கு மேல் பணம் அனுப்புவது போன்றவற்றை செய்து முடிக்க முடியாது. இது அவசர நேரத்தில் சிக்கலில் போய் முடியும். இப்போது, பான் கார்டை இதுவரையில் ஆதாருடன் இணைக்காத பேங்க் கஸ்டமர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஆன்லைனிலேயே முடிக்கலாம்.
ஆன்லைன் மூலம் நீங்கள் பான் மற்றும் ஆதார் இணைப்பு செய்யும் முன்பாக, உங்களது ஆதார் கார்டுடன் மொபைல் நம்பர் இணைக்கப்பட்டிருப்பதை உறுது செய்து கொள்ளுங்கள். அதேபோல உங்களது பான் கார்டில் இருக்கும் பெயரும், ஆதார் கார்டில் இருக்கும் பெயரும் ஒரே மாதிரியாக இருப்பதையும் பார்த்து கொள்ளுங்கள். இல்லையென்றால், உங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம்.
ஆகவே, பெயர் மாறி இருந்தாலும் அல்லது மொபைல் நம்பர் இணைக்கப்படவில்லை என்றாலும் அதை முதலில் செய்து முடித்துவிட்டு, அதற்கு பிறகு பான் மற்றும் ஆதார் கார்டு இணைப்புக்கு செல்லுங்கள். ஆன்லைனில் லிங்க் செய்வது மிகப்பெரிய காரியமல்ல, எளிதாக நீங்களே முடிக்கலாம். மொபைல் அல்லது லேப்டாப் இருக்க வேண்டும். லேப்டாப்பில் கூடுதல் எளிதாக இருக்கும்.
மொபைலில் நீங்கள் செய்தால், டெஸ்க்டாப் மோடில் மாற்றி கொள்ளுங்கள். முதலில் வருமான வரித்துறையின் www.incometax.gov.in இணைய பக்கத்துக்கு செல்ல வேண்டும். இப்போது, வலது பக்கம் இருக்கும் குயிக் லிங்க்கை ஸ்ரோல் செய்யுங்கள். கீழே கடைசியாக லிங்க் ஆதார் (Link Aadhaar) டேப் இடம்பெற்றிருக்கும். இதை கிளிக் செய்து உள்ளே நுழைந்து கொள்ளுங்கள்.
இப்போது, மூன்று படி நிலைகளை நீங்கள் செய்ய வேண்டும். முதலில் உங்களது விவரங்களை கொடுக்க வேண்டும். அதன்பின் அதை வெரிபிகேஷன் செய்ய வேண்டும். இறுதியாக ஸ்டேட்டஸ் தெரிந்து கொள்ள வேண்டும். லிங்க் ஆதார் டேப்பை கிளிக் செய்வுடன் கீழே ஸ்க்ரோல் செய்தால், பான் மற்றும் ஆதார் எண்கள் கேட்கப்படும். இதை சரியாக டைப் செய்து கொள்ளுங்கள்.
இப்போது, வலது பக்கத்தின் கீழே இருக்கும் வேலிடேட் (Validate) டேப்பை கிளிக் செய்ய வேண்டும். இதை செய்தால், வெரிபிகேஷன் செய்யப்படும். அதாவது, உங்களது ஆதார் கார்டுடன் லிங்க் செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு ஓடிபி அனுப்ப வெரிபிகேஷன் செய்யப்படும். இந்த ஓடிபி நம்பரை அங்கு தோன்றும் பாக்ஸில் டைப் செய்தால், பான் ஆதார் இணைப்பு முடிந்துவிட்டது.


Click it and Unblock the Notifications








