Online Gaming New Rules: புதிய சட்டம்.. ஆன்லைன் சூதாட்ட கேம்களுக்கு ஆப்பு.. எதெல்லாம் எஸ்கேப் ஆகும்?
நீங்களொரு ஆன்லைன் கேமிங் (Online Gaming) பிரியராக இருந்தால், இந்த கட்டுரை முழுக்க முழுக்க உங்களுக்கானது தான். இந்திய அரசாங்கத்தின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (Ministry of Electronics and IT - Meity) ஆன்லைன் கேமிங்கிற்கான புதிய விதிகளை (New Online Gaming Rues) அறிவித்துள்ளது.
ஆன்லைன் கேமிங் என்கிற பெயரில் நடக்கும் சட்ட விரோதமான பெட்டிங்கில் (பந்தயம்) இருந்து குடிமக்களை பாதுகாப்பதற்காக கொண்டு வரப்பட்டுள்ள புதிய விதிகளின்படி இனிமேல் ஆன்லைன் கேமிங் என்றால் என்ன? எந்தெந்த கேம்கள் தடை செய்யப்படும்? எந்த வகை கேம்களுக்கெல்லாம் எந்த சிக்கலும் இருக்காது? போன்ற விவரங்கள் இதோ:

புதிய விதிகளின்படி "ஆன்லைன் கேம்" என்றால் என்ன? இந்திய அரசாங்கத்தின் புதிய விதிகளின்படி, 'ஆன்லைன் கேம்' என்பது "இணையத்தின் வழியாக - மற்றும் கம்ப்யூட்டர் ரீசோரஸ் (Computer resource) அல்லது இடைத்தரகர் (Intermediary) - ஒரு பயனர் அணுகக்கூடிய ஒரு கேம் ஆகும்."
எந்தெந்த கேம்கள் தடை செய்யப்படும்? "உண்மையான" பணத்தை உள்ளடக்கிய பந்தய விளையாட்டுகளை (Betting games) தடை செய்வதற்கான விதிமுறைகளை அரசாங்கம் அறிவித்தது. இந்த புதிய விதிகள், ஆன்லைன் கேம்கள் அல்லது விளம்பரம் உட்பட பந்தயத்துடன் சம்பந்தப்பட்ட இணையதளங்களை முற்றிலும் தடை செய்கிறது.
எந்த வகை கேம்களுக்கு சிக்கலே இருக்காது? புதிய ஆன்லைன் கேமிங் விதிகளானது ட்ரீம் 11 போன்ற ஃபேன்டஸி கேம்களை அனுமதிக்கின்றன. இந்திய அரசாங்கத்தின் கூற்றுப்படி, பயனர்களுக்கு தீங்கு விளைவிக்காத மற்றும் குழந்தைகளுக்கு எந்தவிதமான போதை விளைவுகளையும் ஏற்படுத்தாத கேம்கள் எந்த சிக்கலையும் சந்திக்காது.
நேரடி கடன் அல்லது மூன்றாம் தரப்பு நிதியுதவிக்கு வேட்டு! மேலும் இந்திய அரசாங்கத்தின் புதிய ஆன்லைன் கெய்ம்ஜி சட்டங்களின்படி, ஃபேண்டஸி கேம்களை உருவாக்கும் நிறுவனங்களால் கேமர்களுக்கு நேரடி கடனோ (Direct credit) அல்லது மூன்றாம் தரப்பினர் வழியிலான நிதியுதவியையோ (Third-party financing) வழங்க முடியாது.
மேலும் ஃபேண்டஸி கேம்களை உருவாக்கும் நிறுவனங்கள் வித்ட்ராவல் அல்லது ரீஃபண்ட் ஆஃப் டெபாசிஸ்ட்டிற்கான கொள்கையை, தங்கள் பயனர்களுக்கு மிகவும் தெளிவாக தெரிவிக்க வேண்டும். மேலும் பணம் தொடர்பான ஆன்லைன் கேமகளில் விளையாடும் பயனர்கள் கேஒய்சி (KYC) விவரங்களை கொடுக்க வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கடைசியாக கேமர்களை அடிமையாக்குதல், நிதி இழப்பு ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பதற்கான கட்டமைப்பை உருவாக்க எஸ்ஆர்ஓ-க்கள் (Self-regulatory organisations) அதாவது சுய ஒழுங்குமுறை நிறுவனங்கள் உதவி செய்யும். இந்த எஸ்ஆர்ஓ-க்களில் அரசாங்கம் இடம்பெறாது மாறாக ஆன்லைன் கேமிங் தொழில்துறையில் உள்ள பிரதிநிதிகள், கேமர்கள் மற்றும் பிற பங்குதாரர்களே இடம்பெறுவர்.


Click it and Unblock the Notifications