Home
News

புது ரூல்ஸ்.. அக்.1 முதல் அமல்.. சிம் கார்டுனு இருந்தாவே இதை செய்யனும்.. விட்டு வைக்காத டிராய்.. என்ன மாறுது!

ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் மட்டுமல்லாமல், மத்திய அரசின் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் - டிராய் (Telecom Regulatory Authority of India - TRAI) புதிய விதிமுறைகளை அக்டோபர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டுவருகிறது. சிம் கார்டுகள் மூலம் வரும் வாய்ஸ் கால்கள் மற்றும் பேங்க் ஓடிபிக்கு முக்கியமாக பார்க்கப்படும் எஸ்எம்எஸ்களில் புதிய மாற்றங்கள் வருகின்றன. ஆகவே, முன்கூட்டியே இதை தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.

சிம் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொரு கஸ்டமர்களுக்கும் வாய்ஸ் கால்கள் (Voice Call) மற்றும் எஸ்எம்எஸ்களின் (SMS) தேவையை பற்றி நன்றாக தெரிந்திருக்கும். இன்டர்நெட் இல்லாமல் கூட இந்த 2 சேவைகளை மட்டும் பயன்படுத்தும் டெலிகாம் (Telecom) கஸ்டமர்கள் கோடிக்கணக்கில் இருக்கின்றனர். இப்படி ஒட்டுமொத்த சிம் கார்டு கஸ்டமர்களுக்கும் புதிய விதிகள் (New Rules) அமலுக்கு வருகின்றன.

புது ரூல்ஸ்.. அக்.1 முதல் அமல்.. சிம் கார்டுனு இருந்தா இதை செய்யனும்!

ஆகவே, ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற ஒட்டுமொத்த நிறுவன கஸ்டமர்களுக்கும் இந்த விதிகள் பொருந்துகிறது. இந்த விதிகள் காரணமாக பேங்க் மற்றும் இதர சேவைகளின் ஓடிபிகள் வருவதில் தாமதம் அல்லது சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது உண்மையா என்பதை தெரிந்துகொள்ளவதற்கு முதலில் இந்த புது விதிகளை பற்றி பார்ப்போம்.

புது சிம் கார்டு விதிகள் (New SIM Card Rules): இந்த விதிகள் மூலம் அக்டோபர் 1ஆம் தேதி முதல் யுஐஆர்எல் (URL), ஏபிகே (APK) மற்றும் ஓடிடி (OTT) லிங்குகளுடன் வரும் எஸ்எம்எஸ்கள் அல்லது கால்பேக் நம்பர்கள் அனைத்தும் அனுமதிப்பட்டியலில் சேர்க்கப்படாமல் இருந்தால் அதற்கு தடை விதிக்கப்படும். அதாவது, அனுப்புனர் தங்களது நம்பர் மற்றும் விவரங்களை தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் பதிவு செய்திருக்க வேண்டும்.

இல்லையென்றால், அந்த எஸ்எம்எஸ்கள் கஸ்டமர்களுக்கு சென்று சேராது. இது வங்கிகள் மற்றும் ஆப் போன்ற அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தத்கூடியது. ஆகவே, இந்த நிறுவனங்கள் தங்களது கஸ்டமர்களுக்கு ஓடிபிகளை அனுப்பு விரும்பினால் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் தங்களது விவரங்களை பதிவுசெய்து ஏற்புப்பட்டியலில் (Whitelist) சேர்ந்து கொள்ள வேண்டும்.

இப்படி சேர்ந்துவிட்டால், அந்த எஸ்எம்எஸ்களுக்கு அவர்களே பொறுப்பாகி விடுகின்றனர். இதனால், தெரியாத நம்பர்களில் இருந்து வரும் எஸ்எம்எஸ்கள் தவிர்க்கப்படும். அதேபோல கால்கள், எஸ்எம்எஸ்கள் மூலம் ஏற்படும் ஆன்லைன் திருட்டு சம்பவங்கள் தடுக்கப்படும். இது மிகவும் வரவேற்கத்தக்க விதிகளாகும். ஆனால், வங்கிகள் தங்களது நம்பர்களை ஏற்புப்பட்டியலில் காலக்கெடுவுக்குள் சேர்க்க வேண்டியது அவசியம்.

இல்லையென்றால், அந்த நம்பர்கள் சேர்க்கப்படும் வரையில், கஸ்டமர்களுக்கு ஓடிபி வருவவதில் சிக்கல் ஏற்படலாம். இருப்பினும், பெரும்பாலான வங்கிகள் இதை செய்து முடித்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால், வங்கி சார்ந்த நிறுவனங்களுக்கு முன்கூட்டியே இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமானது இந்த விதிகள் குறித்த தெரிவித்திருக்க வாய்ப்புள்ளது.

அதேபோல ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற நிறுவனங்களுக்கும் பதிவு செய்யப்படாத எண்களில் இருந்து வரும் எஸ்எம்எஸ்களை தடுக்க உத்தரவிட்டுள்ளதால், ஓடிபி சார்ந்த வங்கிகள் மற்றும் இதர ஓடிபி சேவைகளை கொடுக்கும் நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் விதிகளை பற்றி தெரியப்படுத்தி இருக்கும். ஆகவே, இதில் சிக்கல் ஏற்படுவதற்கு சாத்தியமில்லை.

அதே நேரத்தில், சிம் கார்டு வாடிக்கையாளர்கள் வழக்கம் போல அனுப்பும் எஸ்எம்எஸ்களுக்கு எந்தவொரு தடையும் இருக்காது. ஏனென்றால், அவர்களது மொபைல் நம்பர் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருக்கும். ஆகவே, இந்த புதிய விதிகளால் வங்கி கஸ்டமர்களுக்கு எந்தவொரு இடையூறும் இருக்கப்போவதில்லை என்பதுதான் உண்மை. ஒருவேளை ஏற்புப்பட்டியலில் சேர்க்கபடாத வங்கிகளின் கஸ்டமர்களுக்கு ஓடிபியில் சிக்கல் ஏற்பட்டாலும் விரைவில் முடிந்துவிடும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Rules For Messages From September 1 Banks To Register Whitelist Their Number For Send OTPs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X