பேங்க் அக்கவுண்ட்.. இனி ரூ.100 சார்ஜ்.. மே.1 முதல் புது ரூல்ஸ்.. ஒரே நேரத்தில் 3 மாற்றங்கள்.. என்னென்ன வருது?
மே 1ஆம் தேதி முதல் பேங்க் கஸ்டமர்களுக்கு மூன்று முக்கிய விதிகள் அமலுக்கு வருகின்றன. இதில் பான் கார்டு வைத்திருக்கும் பேங்க் கஸ்டமர்கள் முதல் டிஜிட்டல் பேமெண்ட்கள் மற்றும் ஏடிஎம் பரிவர்த்தனைகளை செய்யும் கஸ்டமர்கள் வரையில் புதிய விதிகளுக்கு (New Rules) கட்டுப்பட வேண்டியிருக்கிறது.
எஸ்பிஐ பேங்க் பேமெண்ட் விதிகள்: எஸ்பிஐ பேங்கில் ரூ.500 வரையிலான நிலுவை தொகைக்கு தாமதக் கட்டணம் வசூலிக்கப்படாமல் இருந்தது. ஆனால், மே 1ஆம் தேதி முதல் வசூலிக்கப்பட உள்ளது. ஆகவே, ரூ.100 முதல் ரூ.500 வரையிலான நிலுவைத் தொகைக்கு ரூ.100 தாமத கட்டணம் வசூலிக்கப்படும். ரூ.500 முதல் ரூ.1,000 வரையில் ரூ.500 கட்டணம் வசூலிக்கப்படும்.

இப்போது, ரூ.400 ஆக இருக்கிறது. மேலும், ரூ.1,000 முதல் ரூ.50,000 வரையில் எந்த மாற்றமும் செய்யப்படாது. ஏற்கனவே, அமலில் இருக்கும் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். ஆகவே, ரூ.1,000 முதல் ரூ.10,000 வரையில் ரூ.750 தாமதக் கட்டணம் வசூலிக்கப்படும். ரூ.10,000 முதல் ரூ.25,000 வரையில் ரூ.950 தாமதக் கட்டணம் வசூலிக்கப்படும்.
ரூ.25,000 முதல் ரூ.50,000 வரையிலான நிலுவை தொகைக்கு ரூ.1,100 தாமதக் கட்டணம் வசூலிக்கப்படும். ரூ.50,000 மேல் நிலுவை தொகை இருந்தால், ரூ.1300 தாமதக் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். மேலும், பிபிசிஎல் எஸ்பிஐ கிரெடிட் கார்டிற்கான (BPCL SBI Credit Cart) ரூ.499 வருடாந்திரக் கட்டணம், மே 1ஆம் முதல் ரூ.1 லட்சம் வரம்புக்கு மாறுகிறது.
ஆகவே, இந்த வரம்பை எட்டிய பிறகு அந்த தொகை திரும்பப் பெறப்படும். இப்போது, வருடாந்திரக் கட்டணத்தை திரும்பப் பெறுவதற்கான வரம்பு ரூ.50,000 ஆக உள்ளது. இந்த புதிய கட்டண விதிகள் மே 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துவிடும். பேங்க் கஸ்டமர்களுக்கு இந்த கட்டணங்களின்படி பரிவர்த்தனைக்கு அனுமதி கொடுக்கப்படும்.
எச்டிஎப்சி பேங்க் எஸ்எம்எஸ் சார்ஜ் விதிகள்: எச்டிஎப்சி பேங்கில் அக்கவுண்ட் வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு பரிவர்த்தனைகளை செய்யும்போது எஸ்எம்எஸ் வழியாக உடனடியாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதற்காக ஒரு எஸ்எம்எஸ்க்கு 20 பைசா + ஜிஎஸ்டி கட்டணம் செலுத்த வேண்டி இருக்கிறது. இது மே 1ஆம் தேதி முதல் மாறுகிறது.
ஆகவே, ஒரு எஸ்எம்எஸ்க்கு 15 பைசா + ஜிஎஸ்டி செலுத்தினால் போதும். இது அதிகமாக பேங்க் பரிவர்த்தனைகளை செய்யும் கஸ்டமர்களுக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படுவதை மிச்சப்படுத்தும். இந்த கட்டணம் ஈ-மெயில் வழியாக அனுப்பி வைக்கப்பட்டால் பொருந்தாது. அதாவது, எஸ்எம்எஸ் போலவே பரிவர்த்தனை விவரங்கள் ஈ-மெயில் வழியாக கொடுக்கப்படும்.
இதற்கு எந்த கட்டணமும் கிடையாது. மே 1ஆம் தேதி முதல் வழக்கம்போல இதுவோ தொடர இருக்கிறது. இந்த விதிகள் எஸ்பிஐ மற்றும் எச்டிஎப்சி கஸ்டமர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஆனால், பான் கார்டு விதிகள் ஒட்டுமொத்த கஸ்டமர்களுக்கும் பொருந்த இருக்கிறது. ஆகவே, எந்த பேங்கில் அக்கவுண்ட் வைத்திருந்தாலும் இந்த விதிகள் பொருந்தும்
பான் கார்டு விதிகள்: மே 1ஆம் தேதியில் முதல் ரூ.10 லட்சம் வரையில் பான் விவரங்கள் தேவையில்லை. அதாவது, ரூ.10 லட்சத்துக்குள் பணத்தை டெபாசிட் செய்தாலோ அல்லது எடுத்தாலோ பான் கார்டு விவரங்களை கொடுக்க வேண்டியது கிடையாது. ஆனால், அதற்கு மேல் பணத்தை டெபாசிட் செய்தாலோ அல்லது எடுத்தாலோ பான் கார்டு விவரங்களை கொடுக்க வேண்டும்.
இதேபோல கேஸ் சிலிண்டர் புக்கிங், நெட்பேங்கிங், மொபைல் பேங்கிங் போன்ற டிஜிட்டல் பேமெண்ட்களுக்கான 2 காரணி அங்கீராரம், யுபிஐ மற்றும் டெபிட் கார்டு வழியாக நடைபெறும் ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் உள்ளிட்ட பல்வேறு புதிய நடைமுறைகள் மே 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கின்றன.


Click it and Unblock the Notifications