Home
News

மார்ச்.1 முதல் புது விதிகள்.. ஜிஎஸ்டி பில்.. கிரெடிட் கார்டு.. கேஒய்சி அப்டேட்.. RBI விதிகள்.. என்னென்ன வரும்?

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவிட்ட வேளையில் ஜிஎஸ்டி பில் (GST Bill), எஸ்பிஐ கிரெடிட் கார்டு (SBI Credit Card), பாஸ்டேக் கேஒய்சி (FASTags KYC) மற்றும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா ஆகியவற்றில் மார்ச் முதல் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன.

ஒவ்வொரு மாதமும் புதுப்புது விதிகள் அமலுக்கு வருகின்றன. கடந்த பிப்ரவரியில் ஐஎம்பிஎஸ் பணப்பரிமாற்றம், எஸ்பிஐ வீட்டுக்கடன், என்பிஎஸ் பெறுதல் போன்றவற்றில் புதிய விதிகள் அமலுக்கு வந்தன. ஆனால், இந்த மாதம் ஜிஎஸ்டி, கிரெடிட் கார்டு போன்ற அத்தியாவசிய தேவைகளில் புது விதிகள் வருகின்றன.

மார்ச்.1 முதல் புதுரூல்ஸ்.. GST பில்.. கிரெடிட் கார்டு.. KYC அப்டேட்!

ஜிஎஸ்டி கட்டண ரூல்ஸ் (GST Bill Rules): மார்ச் 1ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி விதிகளில் மாற்றங்கள் வருகின்றன. ரூ.5 கோடிக்கும் மேல் வருமானம் ஈட்டும் நிறுவனங்கள் தங்களது பி2பி பரிவர்த்தனைகளுக்கு (B2B Transactions) இ-இன்வாய்ஸ் (E-invoice) விவரங்களை கட்டாயமாக சேர்க்க வேண்டும்.

இந்த விவரங்களை சேர்க்கவில்லை என்றால், இ-வே பில் (E-way Bill) உருவாக்க முடியாது. அதுமட்டுமல்லாமல், இந்த சரக்கு மற்றும் சேவை வரி விதிமுறைகளின் கீழ் ரூ.50,000க்கு மேல் மதிப்புள்ள சரக்குகளை மாநிலங்களுக்கு இடையே கொண்டு செல்வதற்கும் இ-வே பில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ கிரெடிட் கார்டு ரூல்ஸ் (SBI Credit Card Rules): எஸ்பிஐ பேங்க் கஸ்டமர்களுக்கும் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளுக்கான மினிமம் டே பில் சர்குலேஷன் ( Minimum Day Bill Calculation) செயல்முறையில் மாற்றங்கள் வருகிறது. இந்த விதிகள் மார்ச் 15ஆம் தேதி முதல் வருகின்றன. இது குறித்து கஸ்டமர்களுக்கு இமெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச்.1 முதல் புதுரூல்ஸ்.. GST பில்.. கிரெடிட் கார்டு.. KYC அப்டேட்!

பாஸ்டேக் கேஒய்சி ரூல்ஸ் (FASTags KYC Rules): டோல்கேட் கட்டணங்களுக்காக பயன்படுத்தப்படும் பாஸ்டேக் கார்டுகளில் கேஒய்சி அப்டேட் செய்ய வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. முன்னதாக ஜனவரி 31ஆம் தேதி வரையில் கால அவகாசம் வழங்கிய நிலையில், பிப்ரவரி 29ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டது.

மார்ச்.1 முதல் புதுரூல்ஸ்.. GST பில்.. கிரெடிட் கார்டு.. KYC அப்டேட்!

இந்த நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் பிப்ரவரி 29ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஆகவே, பாஸ்டேக் கேஒய்சி அப்டேட் (FASTags KYC Update) செய்யப்படாத கார்டுகளை உடனே அப்டேட் செய்துவிடுங்கள். இல்லையென்றால், அந்தந்த வங்கிகளால் உங்களது பாஸ்டேக் கார்டு டிஆக்டிவேட் (FASTag Card Deactivate) செய்யப்பட்டுவிடும்.

ஆர்பிஐ விதிகள் (RBI Rules): ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா (Reserve Bank of India) விதிகளை மீறிய பேடிஎம் பேமெண்ட் பேங்க் (Paytm Payments Bank) நிறுவனத்துக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த விதிகளின் படி பேடிஎம் பேமெண்ட் வங்கிக்கு புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க தடை விதிக்கப்பட்டது.

அதேபோல டெபாசிட் முதல் பரிவர்த்தனைகள் வரையில் நிறுத்தவும், அதன் கஸ்டமர்கள் வேறு வங்கிகளுக்கு மாறவும் ஆர்பிஐ அறிவுறுத்தி இருந்தது. இதற்காக மார்ச் 15ஆம் தேதி வரையில் கால அவசாகம் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, மார்ச் மாதத்தில் பேடிஎம் கஸ்டமர்கள் இந்த புதிய விதிகளை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
New Rules For GST Bill, SBI Credit Card, FASTags KYC Update And Other Changes Effect On March 1 2024
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X