புது ரூல்ஸ்.. டிச.1 முதல் அமல்.. பேங்க் அக்கவுண்ட் இருக்கா.. இனி பணம் வர இத பண்ணுங்க.. UAN-க்கு வருது மாற்றம்!
டிசம்பர் மாதம் தொடங்கிவிட்டால் போதும் ஆதார் கார்டு, பான் கார்டு, யுபிஐ போன்வற்றில் புது விதிகளுக்கு கட்டுப்பட வேண்டி வருகிறது. இதில் ஆதார் கார்டு மற்றும் பேங்க் அக்கவுண்ட் வைத்திருக்கும் கஸ்டமர்கள் ஆன்லைனில் சீடிங் (Bank Account Aadhaar Seeding) செய்ய வேண்டி இருக்கிறது.
இல்லையென்றால், பலருக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதை எப்படி செய்வது? யாருக்கெல்லாம் இது பொருந்தும்? உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். இது ஆதார் கார்டு அப்டேட் போல இருக்காது. எளிதாக செய்து முடிக்கலாம். நவம்பர் 30ஆம் தேதிக்குள் இதை செய்ய காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆகவே, டிசம்பர் 1ஆம் தேதி முதல் புது விதிகள் அமலுக்கு வந்துவிடும். ஈபிஎப்ஓ தொழிலாளர்கள் (EPFO Employees) இந்த விதிகளை பின்பற்ற வேண்டி இருக்கிறது. அவர்கள் வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை - ஈஎல்ஐ (Employment Linked Incentive- ELI) திட்டத்தை பெறுவதற்கு யுஏஎன் ஆக்டிவேட் (UAN Activate) செய்ய வேண்டும்.
ஈபிஎப்ஓ தொழிலாளர்களுக்கு யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் - யுஏஎன் (Universal Account Number - UAN) மூலம் மட்டுமே திட்டங்கள் மற்றும் சலுகைகள் வழங்கப்படுகிறது. ஆகவே, நடப்பாண்டில் பணிக்கு சேர்ந்த் தொழிலாளர்கள் அவர்களின் வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை பெறுவதற்கு அதை ஆக்டிவேட் செய்ய வேண்டும்.
மேலும், பேங்க் அக்கவுண்ட்டுடன் ஆதார் சீடிங் செய்ய வேண்டும். அப்போதுதான் நேரடியாக பேங்க் அக்கவுண்ட் மூலம் தொகையை பெற்று கொள்ள முடியும். ஆகவே, இந்த யுஏஎன் ஆக்டிவேட் மற்றும் ஆதார் சீடிங் இரண்டையும் 2024 நவம்பர் 30ஆம் தேதிக்குள் முடித்துவிடுங்கள். இப்போது அதை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
யுஏஎன் ஆக்டிவேட் செய்வது எப்படி? (How to Activate UAN): பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு - ஈபிஎப்ஓ (Employees'Provident Fund Organisation - EPFO) வெப்சைட்டுக்கு செல்லுங்கள். இப்போது, முக்கியமான லிங்குகள் (Important Links) பக்கத்தின் கீழ் இருக்கும் ஆக்டிவேட் யுஏஎன் (Activate UAN) டேப்பை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
இப்போது, உங்களது ஈபிஎப்ஓ விவரங்கள் கேட்கப்படும். இதில் யுஏஎன் நம்பர், ஆதார் நம்பர், உங்களது பெயர் மற்றும் பிறந்த தேதி கொடுக்கப்பட வேண்டும். அதேபோல உங்களது ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரும் கொடுக்க வேண்டி இருக்கும். இதை கொடுத்த பிறகு ஆதார் ஓடிபி (Aadhaar OTP) மூலம் வெரிபிகேஷன் இருக்கும்.
ஆகவே, ஓடிபி அனுப்புவதற்கான அனுமதியை கொடுத்து விடுங்கள். இப்போது, உங்களது மொபைல் நம்பருக்கு ஓடிபி வந்து சேரும். அதை கேட்கப்பட்டுள்ள டேப்பில் டைப் செய்து ஓகே கொடுங்கள். அவ்வளவுதான் உங்களது யுஏஎன் ஆக்டிவேட் செய்யப்பட்டுவிட்டது. இதற்கான பாஸ்வேர்டு உங்களது மொபைல் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
அதையும், ஏற்கனவே இருக்கும் யுஏஎன் நம்பரையும் வைத்து ஈபிஎப்ஓ வெப்சைட்டுக்கு சென்று உங்களது அக்கவுண்ட்டை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை ஆனது நேரடி பலன் பரிமாற்றம் டிபிடி (Direct Benefit Transfer - DBT) எனபிள் மூலமாக பேங்க் அக்கவுண்ட்டில் கொடுக்கப்படும்.
ஆகவே, உங்களது பேங்க் அக்கவுண்ட்டுடன் டிபிடி எனபிள் செய்யப்பட வேண்டும். இதை ஆதார் கார்டை பேங்க் அக்கவுண்ட்டுடன் இணைக்கும்பட்சத்தில் செய்து கொள்ளலாம். ஆதார் கார்டில் ஒரு பேங்க் அக்கவுண்ட் இருந்தால், ஏதும் செய்ய வேண்டியதில்லை. பல அக்கவுண்ட்கள் இருந்தால், டிபிடி எனபிள் செய்ய வேண்டிருக்கும்.
மேலும், பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு உங்களிடம் இருந்தால், டிசம்பர் 31ஆம் தேதியை மறந்து விடாதீர்கள். இந்த தேதிக்குள் பான் கார்டுடன் உங்களது ஆதார் கார்டை இணைத்து விடுங்கள். அப்படி செய்ய தவறினால், உங்களது பான் கார்டு செயல்படாமல் போக வாய்ப்புள்ளது. ஆகவே, முக்கியமான பரிவர்த்தனைகளை செய்ய முடியாது.


Click it and Unblock the Notifications








