Home
News

புது ரூல்ஸ்.. உங்க பேங்க் அக்கவுண்ட்ல பணம் அனுப்ப படாதபாடு.. டிஜிட்டல் பேமெண்ட்ல ஆர்பிஐ ஆப்பு.. என்ன வருது?

பேங்க் அக்கவுண்ட் மூலம் டிஜிட்டல் பேமெண்ட்களை (Digital Payments) செய்யும் கஸ்டமர்களுக்கு ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் - ஆர்பிஐ (Reserve Bank of India - RBI) புது டிஜிட்டல் பேமெண்ட் விதிகள் (New Digital Payments Rules) அமலுக்கு வர இருக்கிறது. இந்த விதிகளால் டிஜிட்டல் பேமெண்ட்களை இனி எளிதாக செய்துவிட முடியாது. இனிமேல் என்னென்ன மாறப்போகிறது? எப்போது அமலுக்கு வருகிறது? விவரங்கள் இதோ.

ஒவ்வொரு மாதமும் வந்தால் போதும், ஏதாவது புதிய விதிகள் அமலுக்கு வந்துவிடுகின்றன. அதிலும் டிஜிட்டல் பேமெண்ட்களை செய்துவரும் பேங்க் கஸ்டமர்களுக்கு கட்டாயமாக விதிகள் இருக்கின்றன. ஏற்கனவே, நவம்பர் 1ஆம் தேதி முதல் பேங்க் கஸ்டமர்களுக்கு புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. இப்போது, டிஜிட்டல் பேமெண்ட்களுக்கு புதிய விதிகள் வர இருக்கிறது.

புது ரூல்ஸ்.. உங்க பேங்க் அக்கவுண்ட்ல பணம் அனுப்ப படாதபாடு.. என்னென்ன?

இந்த விதிகள் நேரடியாக டிஜிட்டல் முறையில் பணம் அனுப்பும் ஒட்டுமொத்த கஸ்டமர்களை படாதபாடுபடுத்த இருக்கிறது. இருப்பினும், இது கூடுதல் பாதுக்காப்பை வழங்க இருக்கிறது. முதலில் விதிகளை பற்றி தெரிந்து கொள்வோம். இந்த விதிகள் டிஜிட்டல் பேமெண்ட்களை செய்யும் அனைவருக்கும் பொருந்தக்கூடியது. பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து பணம் அனுப்பும்போது இருக்கும்.

அதாவது, பேங்க் அக்கவுண்ட் வைத்திருக்கும் கஸ்டமர்கள் பேங்க் ஆப்கள், மொபைல் பேங்கிங் அல்லது நெட் பேங்கிங் மூலம் பணம் அனுப்பும்போது, எஸ்எம்எஸ் மூலம் ஓடிபி வெரிபிகேஷன் (OTP Verfication) செய்யப்படும். இதை கொடுத்தால் மட்டுமே அந்த பணத்தை அனுப்ப முடியும். இந்த ஓடிபி வெரிபிகேஷனிலேயே கூடுதல் அங்கீகரிப்பு காரணி (Additional Factor of Authentication) வருகிறது.

ஓடிபி மட்டுமல்லாமல் வேறு என்ன இருக்கும்? மூன்று அங்கீகார காரணிகள் இருக்கின்றன. இவை பணம் அனுப்பும்போது கேட்கப்படும். முதலாவதாக ஓடிபிக்கு அடுத்தப்படியாக, பாஸ்வேர்ட்கள் (Passwords), பாஸ்ப்ர்ஸெஸ் (Passphrases) அல்லது பின் (PIN) கேட்கப்படும். இதை கூடுதலாக பணம் அனுப்பம் அனுப்போது பேங்க் கஸ்டமர்கள் கொடுத்தால் மட்டுமே பரிவர்த்தனை முடியும்.

அடுத்தது, ஏடிஎம் கார்டு அல்லது சாப்ட்வேர் டோக்கன்கள் போன்று பேங்க் கஸ்டமர்களுக்கு பிரத்யேகமாக கொடுக்கப்படும் ஏதாவது ஒரு பிசிகல் டிவைஸ்கள் (Physical Devices) கூடுதல் அங்கீகரிப்பு காரணிகளாக சேர்க்கப்படும். இதில் கொடுக்கப்பட்ட நம்பர்களை பணம் அனுப்பும் நேரத்தில் கொடுக்க வேண்டும். மூன்றாவது வழக்கமான பயோமெட்ரிக் அடையாளங்கள் இருக்கின்றன.

அதாவது, ஃபிங்கர்பிரிண்ட் (Fingerprints) மற்றும் பேசியல் அங்கீகாரம் (Facial Recognition) கூடுதல் அங்கீகரிப்பு காரணிகளாக இருக்கிறது. இது ஆதார் கார்டு மூலம் பெறப்படும். ஆகவே, பேங்க் அக்கவுண்ட்டில் மொபைல் நம்பரை கொடுத்ததை போலவே, உங்களது ஆதார் விவரங்களும் சரியாக இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் சிரமாகிவிடும்.

இந்த புதிய விதிகள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு பொருந்தினாலும், கார்டு மூலம் செய்யப்படும் ரூ.5,000 வரையிலான காண்டாக்ட்லெஸ் பேமெண்ட்களுக்கு பொருந்தாது. அதேபோல ஆஃப்லைன் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கும் இந்த விதிகள் பொருந்தாது. ஆகவே, ஓடிபி மட்டுமே கொடுத்து இனிமேல் பணம் அனுப்பிவிட முடியாது என்பது தெரிகிறது.

இந்த விதிகள் எப்போது அமலுக்கு வருகின்றன? ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா நவம்பர் 1ஆம் தேதி பேங்க் கஸ்டமர்களுக்கு புதிய விதிகளை கொண்டுவருகிறது. அப்போது, இந்த கூடுதல் காரணி அங்கீகார விதிகளும் கொண்டுவரப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அந்த விதிகளில் அதிகாரப்பூர்வமாக செல்லுபடியாகும் ஆவணம் - ஓவிடி (Officially Valid Document - OVD) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதில் ஆதார் கார்டு தவிர்க்க முடியாத ஆவணமாக இருக்கிறது. இந்த ஆதார் கார்டு பயோமெட்ரிக் அடையாளங்கள் கொண்ட ஆவணமாகும். ஆகவே, பணம் அனுப்பும்போது ஃபிங்கர்பிரிண்ட் அல்லது பேசியல் அங்கீகாரம் கேக்கப்படும் என்பதை ஆர்பிஐ தெரிவித்திருப்பதால், இந்த விதிகளும் அதில் இடம் பெற அதிகவாய்ப்புள்ளது. நவம்பர் 1ஆம் தேதி தெரிந்து விடும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Rules For Digital Payments Two Factor Authentication For Money Transactions Check RBI Rules
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X