புது CIBIL Score ரூல்ஸ்.. ஒரே நேரத்தில் 4 முக்கிய மாற்றங்கள்.. லோன் வாங்குபவர்கள் கவனத்திற்கு.. RBI அதிரடி!
ஆர்பிஐ (RBI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா (Reserve Bank of India) ஆனது 2025 ஆம் ஆண்டிற்கான புதிய சிபில் ஸ்கோர் விதிகளை (New Cibil Score Rules 2025) அறிவித்து இருந்தது. இந்த புதிய விதிகள் கடன் ஒப்புதல் செயல்முறையில் (Loan Approval Process) 4 முக்கிய மாற்றங்களை கொண்டுவருகிறது
ஆர்பிஐ கொண்டுவந்துள்ள புதிய சிபில் ஸ்கோர் விதிகளின்படி.. (முதல் மாற்றம்) உங்கள் கிரெடிட் ஸ்கோர் காரணமாக உங்கள் லோன் (ஹோம் லோன், கார் லோன் அல்லது பெர்சனல் லோன்) தாமதமானாலோ அல்லது நிராகரிக்கப்பட்டாலோ, கடன் வழங்குபவர்கள் அதற்கான காரணத்தை உங்களுக்கு தெரிவிக்க வேண்டும் மற்றும் (இரண்டாவது மாற்றம்) நீங்கள் செய்த தவறுகளை சரிசெய்ய 30 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும்.

உங்கள் கிரெடிட் ஸ்கோரை பொறுத்தவரை வங்கிகள் மற்றும் பிற கடன் வழங்குநர்கள் மிகவும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று ஆர்பிஐ விரும்புகிறது. அதாவது, உங்கள் சிபில் ஸ்கோர் காரணமாக உங்கள் கடன் நிராகரிக்கப்பட்டாலோ அல்லது தாமதமானாலோ, அதற்கான காரணத்தை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.
அதைக்குறித்து கடன் வழங்குபவர்கள் உங்களிடம் சொல்ல வேண்டும். உங்கள் கடன் அறிக்கையில் ஏதேனும் தவறு இருந்தால்? உங்கள் விண்ணப்பத்தை மேற்கொள்வதற்கு முன்பு அதை சரிசெய்ய உங்களுக்கு அவகாசம் அளிக்கப்படும். உதாணரத்திற்கு நீங்கள் ஒரு கார் லோனுக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். முன்பு, உங்கள் கிரெடிட் ஸ்கோர் நன்றாக இல்லை என்றால், வெறுமனே "இல்லை" என்கிற பதில் மட்டுமே கிடைக்கும்.
ஆனால் இப்போது, வங்கிகள் இந்த பிரச்சினையை குறிப்பிட்டு, அதைச் சரிசெய்ய உங்களுக்கு நேரம் கொடுக்க வேண்டும். என்ன தவறு என்பதை பொறுத்து உங்களுக்கு அவசரம் கிடைக்கும். (மூன்றாவது மாற்றம்) மேலும் குறைவான ஸ்கோரை மட்டுமே அடிப்படையாக கொண்டு நடக்கும் ஆட்டோமெட்டிக் ரிஜெக்ஷன்கள் இனி இருக்காது; மாறான மனித மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும். (நான்காவது மாற்றம்) கடைசியாக சிபில் ரிப்போர்ட்கள் இப்போது அடிக்கடி அப்டேட் செய்யப்பட வேண்டும்
சிபில் ஸ்கோர் எந்தெந்த காரணிகளின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது?
- கடனை திருப்பி செலுத்தும் நடத்தை (நீங்கள் சரியான நேரத்தில் பணம் செலுத்துகிறீர்களா)
- கிரெடிட் பயன்பாடு (உங்களிடம் உள்ள கிரெடிட்டில் எவ்வளவு பயன்படுத்துகிறீர்கள்)
- கிரெட்டி விசாரணைகள் (நீங்கள் எவ்வளவு கால இடைவெளியில் கிரெடிட்டுக்கு விண்ணப்பிக்கிறீர்கள்)
- கிரெடிட் மிக்ஸ் (கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகள் போன்ற நீங்கள் பயன்படுத்தும் கிரெடிட் வகைகள்)
எது நல்ல சிபில் ஸ்கோர்? பொதுவாக 750 க்கு மேல் உள்ள சிபில் ஸ்கோர் சிறந்ததாகக் கருதப்படுகிறது, மேலும் 700 க்குக் கீழே உள்ள எந்தவொரு சிபில் ஸ்கோரையும் கடன் வழங்குநர்கள் ஆபத்தானதாக கருதலாம், இது உங்கள் கடன் ஒப்புதல் அல்லது வட்டி விகிதங்களை பாதிக்கக்கூடும்.
சமீபத்தில் ஆதார், பான் மற்றும் ரேஷன் கார்டுகள் குறித்த முக்கிய மாற்றம் ஒன்றும் அறிவிக்கப்பட்டது! ஒரு நபரின் இந்திய குடியுரிமையை (Indian Citizenship) நிரூபிக்க ஆதார் அட்டை (Aadhaar Card), பான் அட்டை (PAN Card) அல்லது ரேஷன் கார்டு (Ratio Card) இனி செல்லுபடியாகாது என்றும், குடியுரிமைக்கான சான்றாக வாக்காளர் அடையாள அட்டை (Voter ID Card) அல்லது பாஸ்போர்ட் (Passport) மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று டெல்லி காவல்துறை தெளிவுபடுத்தி உள்ளது.
இந்த முடிவு, ஒன்றிய அரசின் அறிவுறுத்தல்களின்படி எடுக்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நடைபெற்று வரும் சரிபார்ப்பு பிரச்சாரத்தின் போது, சட்டவிரோதமாக வசிக்கும் ஏராளமான வெளிநாட்டினர், குறிப்பாக வங்கதேசத்தினர் மற்றும் ரோஹிங்கியாக்கள், ஆதார், பான் மற்றும் ரேஷன் கார்டுகளை பயன்படுத்தி இந்திய குடியுரிமையை தவறாக கோருவது கண்டறியப்பட்டது.
சட்டவிரோதமாக குடியேறிய பலர் ஆதார் அட்டைகள், ரேஷன் கார்டுகள், பான் கார்டுகள் மற்றும் யுஎன்எச்சிஆர் வழங்கிய அட்டைகளை வைத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது இந்திய குடிமக்களை துல்லியமாக அடையாளம் காண்பதை கடினமாக்கியுள்ளது. எனவே, வாக்காளர் அடையாள அட்டை அல்லது இந்திய பாஸ்போர்ட் இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது!


Click it and Unblock the Notifications








