Home
News

ரயில் டிக்கெட் வாங்குவதில் புதிய மாற்றம்.. இனி ஸ்டேஷனில் வரிசையில் நிற்க வேண்டியதில்லை.. ஏன்?

இந்தியன் ரயில்வே (Indian Railways) அமைப்பு மக்களுக்குப் பயனுள்ள வகையில் புதிய சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் ஜெனரல் கோச் ( general coach) டிக்கெட் வாங்க இனிமேல் ஸ்டேஷனில் வரிசையாக நிற்க வேண்டியதில்லை. அதாவது பொதுப் பெட்டியில் பயணிக்க வரும் பயணிகளுக்கு டிக்கெட் வசதியை எளிதாக வழங்குவதற்காக UTS மொபைல் செயலியில் பல முக்கியமான மாற்றங்களைச் செய்துள்ளது ரயில்வே அமைப்பு.

குறிப்பாக இந்த UTS மொபைல் செயலியில் வந்துள்ள மாற்றங்கள் மூலம் பயணிகள் எந்த இடத்திலிருந்து பொது ரயில் டிக்கெட்டுகளை (general train tickets) எளிமையாக முன்பதிவு செய்யலாம். இது குறித்து விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

ரயில் டிக்கெட் வாங்குவதில் புதிய மாற்றம்..

அதாவது இந்த யுடிஎஸ் மொபைல் செயலி மூலம் நீங்கள் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான தூர வரம்பு (Distance Limit) தற்போது நீக்கப்பட்டுள்ளது என ரயில்வே பிரிவின் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனவே பயணிகள் இந்த செயலி மூலம் எங்கிருந்தும் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

முன்பு இந்த யுடிஎஸ் மொபைல் செயலி மூலம் பொது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான அதிகபட்ச தூர வரம்பு 20 கி.மீ இருந்தது. ஆனால் தற்போது இந்த லிமிட் எல்லாம் கிடையாது, எங்கிருந்தும் வேண்டுமானாலும் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

ரயில் டிக்கெட் வாங்குவதில் புதிய மாற்றம்..

குறிப்பாக ரயில் டிக்கெட் மற்றும் நடைமேடை டிக்கெட் ஆகியவற்றை யுடிஎஸ் செயலி வாயிலாக வீட்டில் இருந்தபடியே எடுத்துக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடவடிக்கை மூலம் பயனர்கள் ரயில்வே நிலையத்தில் நீண்ட வரிசையில் நிற்கவேண்டியதில்லை. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது இந்த UTS செயலி மூலம் பொது டிக்கெட்டுகளை (General Tickets) முன்பதிவு செய்யும் வழிமுறைகளைப் பார்க்கலாம்.

UTS செயலி மூலம் ஜெனரல் கோச் டிக்கெட்டை (general coach ticket) முன்பதிவு செய்வது எப்படி?

வழிமுறை-1 முதலில் உங்களது ஸ்மார்ட்போனில் UTS செயலியைப் பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும். அடுத்து இந்த செயலியில் உங்கள் பெயர், மொபைல் எண், அடையாள அட்டை போன்ற தகவல்களைப் பூர்த்தி செய்து பதிவு செய்ய வேண்டும்.

வழிமுறை-2: குறிப்பாக UTS செயலியில் பதிவு செய்யும் போது உங்களது மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். இந்த ஓடிபி எண்ணை அந்த செயலியில் உள்ளிட்டுப் பதிவு செய்ய வேண்டும்.

வழிமுறை-3: அடுத்து நீங்கள் டிக்கெட் முன்பதிவு செய்ய, விவரங்களை உள்ளிட வேண்டும். அதாவது எங்கிருந்து எங்குச் செல்ல வேண்டும் என்ற விவரங்களை அந்த செயலியில் நிரப்ப வேண்டும்.

ரயில் டிக்கெட் வாங்குவதில் புதிய மாற்றம்..

வழிமுறை-4: அதன்பின்பு நெக்ஸ்ட் ( Next) மற்றும் கெட் ஃபேர் (Get Fare) என்பதை கிளிக் செய்து புக் டிக்கெட் பட்டனை அழுத்த வேண்டும். அடுத்து R-Wallet/UPI/Net Banking/Card போன்ற கட்டண முறைகளைப் பயன்படுத்தி டிக்கெட்டு முன்பதிவு செய்யலாம்.

வழிமுறை-5: அவ்வளவு தான் நீங்கள் முன்பதிவு செய்த டிக்கெட் செயலியில் தெரியும். அந்த டிக்கெட்டை பிரிண்ட் செய்து கொள்ளலாம் அல்லது பிடிஎப் வடிவில் போனில் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த UTS மொபைல் செயலி மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New rules for buying general train tickets : Book from home via mobile: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X