UPI.. இனி ரூ.5000 லிமிட்.. Google Pay, Paytm கதையை முடித்த BHIM, PhonePe.. இதுதான் பேமெண்ட் செய்ய புது லிமிட்!
கூகுள் பே (Google Pay), பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ (UPI) ஆப்களைவிட்டு இந்திய அரசின் கீழ் செயல்படும் பீம் (BHIM) ஆப்பை பயன்படுத்தும்படி ரூ.5,000 லிமிட் கொண்டுவரப்பட்டு உள்ளது. போன்பே (PhonePe) வைத்து இருக்கும் பேங்க் கஸ்டமர்களுக்கும் இந்த ரூ.5,000 லிமிட் பொருந்தும். இந்த புதிய லிமிட் குறித்த முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
கூகுள் பே, போன்பே, பேடிஎம், பீம் போன்ற ஆப்களில் பணம் அனுப்ப வேண்டுமானால், பின் நம்பர் கொடுக்க வேண்டும். ஸ்கேன் செய்து பரிவர்த்தனை செய்தாலும், மொபைல் நம்பர் கொடுத்து பரிவர்த்தனை செய்தாலும் பின் நம்பரை கொடுத்தால் மட்டுமே பேமெண்ட்கள் செய்து முடிக்கப்படும். ஆனால், இந்திய அரசின் கீழ் செயல்படும் பீம் ஆப்பில் பயோமெட்ரிக் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதாவது, பின் நம்பருக்கு பதிலாக பிங்கர்பிரிண்ட் அல்லது பேசியல் ரிககனைசேஷன் செய்து கொள்ளலாம். ஆகவே, பீம் வழியாக பணம் அனுப்பும்போது, ஃபிங்கர்பிரிண்ட் அல்லது பேசியல் ரிககனைசேஷன் செய்தால்போதும், பேமெண்ட்கள் செய்து முடிக்கப்படும். அதிக யுபிஐ ஐடிகளை வைத்திருக்கும் பேங்க் கஸ்டமர்களுக்கு இந்த பயோமெட்ரிக் பேமெண்ட் விதிகள் பயனுள்ளதாக இருக்கும்.
இதேபோல போன்பே பரிவர்த்தனைகளுக்கும் பின் நம்பருக்கு மாற்றாக ஃபிங்கர்பிரிண்ட் அல்லது பேசியல் ரிககனைசேஷன் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால், இந்த பயோமெட்ரிக் பேமெண்ட் விதிகளின்படி ரூ.5,000 மட்டுமே லிமிட்டாக இருக்கிறது. அதற்கு மேல் யுபிஐ பரிவர்த்தனைகளை செய்தால், வழக்கம்போல பின்நம்பரை கொடுக்க வேண்டி இருக்கும்.
இந்த லிமிட் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது. அதேபோல பின் நம்பர் மட்டுமல்லாமல், கூடுதலாக ஃபிங்கர்பிரிண்ட் அல்லது பேசியல் ரிககனைசேஷன் ஆகியவற்றில் ஏதாவது ஒன்று கேட்கப்படவும் வாய்ப்புள்ளது. ஏனென்றால், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் யுபிஐ, ஆர்டிஜிஎஸ், ஐஎம்பிஎஸ் உள்ளிட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு 2 பேக்டர் ஆதன்டிகேஷன் விதிகள் அமலுக்கு வருகிறது.
ஓடிபி மட்டுமல்லாமல், பயோமெட்ரிக் ஆதன்டிகேஷன் உள்ளிட்ட கூடுதல் வெபிகேஷனும் சேர்க்கப்பட இருக்கிறது. ஆகவே, யுபிஐ பரிவர்த்தனைகளுக்கும் 2 முறை வெரிபிகேஷன் செய்யப்படலாம். இது பெரிய தொகையை பரிவர்த்தனை செய்யும்போது தேவைப்படலாம். இதற்கேற்பவே ரூ.5,000 வரையில் பயோமெட்ரிக் வைத்தே பேமெண்ட்களை செய்ய அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
கூகுள் பே மற்றும் பேடிஎம் ஆப்களில் இப்போதைக்கு இந்த ரூ.5,000 லிமிட் விதிகள் அமலுக்கு கொண்டுவரப்படவில்லை. ஆகவே, பீம் மற்றும் போன்பே ஆப்களில் மட்டுமே ஃபிங்கர்பிரிண்ட் அல்லது பேசியல் ரிககனைசேஷன் வழியாக பரிவர்த்தனை செய்ய அனுமதி கொடுக்கப்படுகிறது. இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (என்பிசிஐ) ஆனது பீம் ஆப்பில் இதை கொடுக்கிறது.
பீம் பயோமெட்ரிக் பேமெண்ட்களை செய்வது எப்படி?
1. பீம் பேமெண்ட் ஆப்பை (BHIM Payments App) திறந்து, ப்ரொபைல் (Profile) விருப்பத்துக்கு செல்ல வேண்டும்.
2. உங்களது பேங்க் அக்கவுண்ட்டை தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும். இப்போது, ஆக்டிவேட் பயோமெட்ரிக் பரிவர்த்தனை விருப்பத்தை செய்து முடியுங்கள்.
3. இனி, ஃபிங்கர்பிரிண்ட் வழியாக பேமெண்ட்களை செய்ய அனுமதி கொடுக்கப்படும்.
4. ரூ.5,000 வரையில் மட்டுமே ஃபிங்கர்பிரிண்ட் வழியாக பணத்தை அனுப்பி கொள்ள முடியும்.
5. இந்த லிமிட்டுக்கு மேல் அனுப்ப வேண்டுமானால், வழக்கம்போல பின் நம்பர் (PIN Number) பயன்படுத்தலாம்.
போன்பே பயோமெட்ரிக் பேமெண்ட்களை செய்வது எப்படி?
1. போன்பே ஆப்பை ஓப்பன் செய்ய வேண்டும்.
2. ப்ரொபைல் விருப்பத்துக்கு செல்ல வேண்டும்.
3. மேனேஜ் பேமெண்ட்கள் (Manage Payments) விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
4. இதில் பயோமெட்ரிக் பே (Biometric Pay) ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.
5. லிங்க் செய்யப்பட்ட பேங்க் அக்கவுண்ட்டை தேர்ந்தெடுக்க வேண்டும்.
6. பயோமெட்ரிக் ஆதன்டிகேஷனை (Biometric Authentication) செயல்படுத்த வேண்டும். இனி ரூ.5,000 வரையில் ஃபிங்கர்பிரிண்ட் பயன்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications








