Home
News

பேங்க் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு புது ரூல்ஸ்.. நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்!

பேங்க் அக்கவுண்ட் வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு வருகிற நவம்பர் 1ஆம் (November 1) தேதி முதல் புதிய விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. விசா (Visa), ரூபே (RuPay) கார்டுகள் வழியாக ஏடிஎம் மெஷினில் பணத்தை எடுக்கும் கஸ்டமர்களுக்கு இது நேரடி மாற்றத்தை கொண்டுவர இருக்கிறது. இதுபோக மத்திய அரசின் பல்வேறு விதிகள் நவம்பர் மாதத்தில் அமலுக்கு வருகின்றன.

புதிய விதிகள் ஒட்டுமொத்த பேங்க் கஸ்டமர்களுக்கும் பொருந்தாது. பிஎன்பி (PNB) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பஞ்சாப் நேஷனல் பேங்க் (Punjab National Bank) கஸ்டமர்களுக்கு மட்டுமே பொருந்தும். அதே நேரத்தில் விசா மற்றும் ரூபே கிரெடிட் கார்டுகளை (RuPay Credit Cards) வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு மட்டுமே குறிப்பாக அமலுக்கு வர இருக்கிறது.

பேங்க் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு புது ரூல்ஸ்.. நவம்பர் 1 முதல்!

பணம் எடுத்தல், தாமதமாக பில் செலுத்துதல், பணம் செலுத்த தவறியதற்கான அறிவுறுத்தல்கள், கிரெடிட் பாய்ன்ட்ஸ் பெறுதல், யூடிலிட்டி கட்டணங்கள் ஆகியவை இந்த விதிகளுக்குள் அடங்கும். மேலும், முன்பு இலவசமாக இருந்த சில சேவைகளுக்கும் இனிமேல் கட்டணம் விதிக்கப்பட இருக்கிறது. எவ்வளவு கட்டணம் என்பதை இப்போது பார்க்கலாம்.

இந்தியாவுக்குள் பிஎன்பி ஏடிஎம்களில் எடுக்கும் தொகையில் 2.5 சதவீதம் அல்லது ரூ.400 இதில் எது அதிகமோ, அது கட்டணமாக வசூலிக்கப்படும். முன்னதாக, ரூபோ மற்றும் விசா கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பணம் எடுக்கும்போது, ​​எடுக்கப்பட்ட தொகையில் 2 சதவீத அல்லது ரூ.150 மற்றும் ரூ.200 (எது அதிகமோ அது) கட்டணமாக இருந்தது.

இந்தியாவுக்குள் பிற பேங்குகளின் ஏடிஎம்கள் மற்றும் வெளிநாட்டு ஏடிஎம்களில் பணம் எடுத்தால், 2.5 சதவீதம் அல்லது ரூ.500 இதில் எது அதிகமோ, அந்தத் தொகை வசூலிக்கப்படும். தாமதமாக பில் செலுத்துதலுக்கான கட்டணத்தை பார்க்கையில், நிலுவை தொகையை பொறுத்து, கட்டணம் ஏதுமில்லை முதல் ரூ.1,200 வரை வசூலிப்பு இருக்கும்.

செக் ரிட்டர்ன் / ஆட்டோ டெபிட் (auto-debit) தோல்வியடைதல் போன்ற நேரத்தில் கட்டண தொகையில் 2 சதவீதம், குறைந்தபட்சம் ரூ.400 வசூலிப்பு இருக்கும். டூப்ளிகெட் பிசிகல் ஸ்டேட்மெண்ட்டை (Duplicate Physical Statement) பொறுத்தவரையில் மூன்று மாதங்களுக்கு முந்தைய அறிக்கைகளுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.50 கட்டணம் விதிக்கப்படும்.

யூடிலிட்டி கட்டணங்களில் மாதாந்திரக் கட்டணங்கள் ரூ.50,000 க்கு மேல் இருந்தால், மொத்த கட்டணத்தில் 1 சதவீதம் மற்றும் வரிகள் வசூலிக்கப்படும். ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சம் ரூ.2,000 வரை மட்டுமே கட்டணம் விதிக்கப்படும். இந்த விதிகளே வருகிற நவம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கின்றன. இதுபோக பல்வேறு விதிகள் இருக்கின்றன.

மேலும், மத்திய அரசு விதிகளில் நவம்பர் 1ஆம் தேதி முதல் ஃபாஸ்டேக்கில் புதிய மாற்றம் வர இருக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளுக்கு அருகில், 20 கி.மீ. சுற்றளவுக்குள் வசிக்கும் கார் ஓனர்களுக்கு மலிவு விலையில் ஃபாஸ்டேக் பாஸ் திட்டம் அமலுக்கு வருகிறது. வணிக பயன்பாட்டுக்கு பொருந்தாது. சொந்த தேவைக்கு கார், ஜீப், வேன் வைத்திருப்பவர்களுக்கு பொருந்தும்.

நகராட்சி அல்லது உள்ளூர் நகர எல்லைகளுக்கு வெளியே இருக்கும் கார் ஓனர்களுக்கு ரூ.1,500 விலையில் வருடாந்திர பாஸ் கிடைக்கிறது. நகராட்சி அல்லது உள்ளூர் நகர எல்லைகளுக்குள் இருக்கும் கார் ஓனர்களுக்கு ரூ.3,000 விலையில் வருடாந்திர பாஸ் கிடைக்கிறது. இதை அருகில் இருக்கும் சுங்கச்சாவடிகளுக்கு நேரடியாக சென்று பெற்று கொள்ளலாம்.

மூடப்பட்ட கட்டண வசூல் முறையை பயன்படுத்தும் நெடுஞ்சாலைகளுக்கு இது பொருந்தாது. அதேபோல விரைவுச் சாலைகளில், அல்லது மாற்றுப் பாதையோ அல்லது சேவை சாலையோ பயன்பாட்டிற்கு இருக்கும் இடங்களில், இந்த வருடாந்திர பாஸ் பொருந்தாது. ​​ஆகவே, வாங்குவதற்கு முன்பு அதுகுறித்து சுங்கச்சாவடிகளில் விசாரிக்கலாம்.

இதேபோல மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் யுபிஐ பரிவர்த்தனைகளிலும் புதிய விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. ரூ.2,000 மேல் செல்லும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்க அக்டோபர் 15ஆம் தேதி நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், தீபாவளி நெருங்கியதால், அது ஒத்திவைக்கப்பட்டது. ஆகவே, தீபாவளிக்கு பிறகு கட்டணம் விதிக்கப்படலாம்.

Best Mobiles in India

English summary
New rules for bank customers will come into effect from November 1 including FASTag and UPI Changes
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X