புது ரூல்ஸ்.. ஜூன் 25 முதல் அமல்.. பேங்கில் ரூ.100-க்கு கீழ் பணம்.. சேவை கிடையாது.. ரூ.500-க்கு மேல் வரனும்!
ஒட்டுமொத்தமாக பேங்க் கஸ்டமர்கள் ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு மாறிவரும் நேரத்தில் புதுப்புது விதிகளுக்கு உட்பட வேண்டி இருக்கிறது. இப்போது, பேங்க் கஸ்டமர்கள் யுபிஐ மூலம் பணம் அனுப்பும் சேவைக்கு முக்கிய லிமிட் விதிக்கப்பட்டிருக்கிறது. ரூ.100-க்கும் கீழ் பணம் அனுப்புதல், செலுத்தலில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த புதிய மாற்றமானது, வரும் ஜூன் 25ஆம் தேதி முதல் நேரடியாக பேங்க் கஸ்டமர்களின் பரிவர்த்தனைகளில் அமலுக்கு வர இருக்கிறது. ஆகவே, அந்த தேதிக்கு பிறகு என்ன நடக்கும்? எப்படி பரிவர்த்தனை லிமிட் வைக்கப்பட்டுள்ளது?
இப்போதெல்லாம், பெட்டி கடை முதல் சூப்பர் மார்கெட் வரையில் எங்கு பார்த்தாலும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் வந்துவிட்டன. கையில் காசு இல்லையென்றாலும், மொபைல் போனும், யுபிஐ ஆப்பும் இருந்தால் போதும், எது வேண்டுமோ அதை வாங்கிக்கொண்டு வந்துவிடலாம். இதனாலேயே யுபிஐ சேவை தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது.

சொல்லப்போனால், ரூ.100-க்கும் கீழ் பணம் அனுப்ப முடிவதால், நம்மில் பலரும் டீ குடிப்பது முதல் குளிக்க ஷாம்பு வாங்குவது வரையில் யுபிஐ மூலமே பரிவர்த்தனைகளை செய்து வருகிறோம். இப்படி, ரூ.100-க்கும் கீழ் செய்யப்படும் யுபிஐ பரிவர்த்தனைகளில், சம்பந்தப்பட்ட பேங்கில் இருந்து வரும் எஸ்எம்எஸ்கள் முக்கியமாக பார்க்கப்படுகின்றன.
ஏனென்றால், சில நேரங்களில் யுபிஐ ஆப்கள் வேலை செய்யவில்லை என்றாலும், இந்த எஸ்எம்எஸ்கள் மூலம் பணம் சென்றுவிட்டதா? இல்லையா? என்பதை உறுதி செய்து கொள்ள முடிகிறது. இப்படிப்பட்ட சேவையில் முக்கிய மாற்றத்தை எச்டிஎப்சி பேங்க் (HDFC Bank) கொண்டு வந்திருக்கிறது. இந்த புதிய விதிகள் விரைவில் மற்ற வங்கிகளுக்கும் வரலாம்.
ஆகவே, இந்த விதிகளை பற்றி பேங்க் கஸ்டமர்கள் தெரிந்துகொள்வது முக்கியமாக பார்க்கப்படுகிறது. அதாவது, எச்டிஎப்சி பேங்க் கஸ்டமர்கள் தங்களது யுபிஐ மூலம் ரூ.100-க்கும் கீழ் பணம் அனுப்பினாலோ, செலுத்தினாலோ அவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்படாது. அதேபோல ரூ.500-க்கும் கீழ் பணத்தை பெற்றாலும் எஸ்எம்எஸ் வராது.

ஆகவே, கடைகளில் கியூஆர் கோட் மூலம் செலுத்தும் ரூ.100-க்கு கீழான பரிவர்த்தனைகள், யுபிஐ மூலம் மொபைல் நம்பர் மூலம் அனுப்பும் ரூ.100-க்கும் கீழான பரிவர்த்தனைகள் மற்றும் ரூ.500-க்கும் கீழ் பெறும் பரிவர்த்தனைகளுக்கு எஸ்எம்எஸ் சேவைகள் வழங்கப்படாது. இருப்பினும், ஈமெயில் மூலம் அந்த பரிவர்த்தனைகளை தெரிந்து கொள்ளலாம்.
இந்த புதிய விதிகள் வரும் ஜூன் 25ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஆகவே, அந்த தேதிக்கு பிறகு எஸ்எம்எஸ் வரவில்லை என்று காத்திருக்க வேண்டாம். அதேபோல ரூ.100-க்கும் மேல் பணத்தை அனுப்பும்போதும், ரூ.500-க்கும் மேல் பணத்தை பெறும் போதும் வழக்கமாக எஸ்எம்எஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.
ஈமெயில் மூலம் பரிவர்த்தனைகளை தெரிந்துகொள்வது எப்படி? ரூ.100-க்கும் கீழ் பணம் அனுப்பினாலும் ஈமெயில் மூலம் அதை உறுதிப்படுத்தி கொள்ளலாம். இதற்காக எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது. ஒருவேளை நீங்கள் ஈமெயில் ஸ்டேட்மெண்ட் சேவையை ரிஜிஸ்டர் செய்யவில்லை என்றால் பின்வரும் வழிமுறைகள் மூலம் செய்து அதை கொள்ளலாம்.
உங்களது எச்டிஎப்சி பேங்க் வெப்சைட்டுக்கு செல்லுங்கள். அங்கு நெட்பேங்கிங் (NetBanking) பக்கத்தை ஓப்பன் செய்து கொள்ளுங்கள். இப்போது, நெட்பேங்கிங் ஐடி (NetBanking ID) மற்றும் பாஸ்வேர்ட் (Password) கொடுத்து ஓப்பன் செய்யுங்கள். இப்போது, அக்கவுண்ட் டேப்பை (Accounts Tab) கிளிக் செய்து கொள்ளுங்கள்.
இப்போது, ஈமெயில் ஸ்டேட்மெண்ட் ரெஜிஸ்ட்ரேஷன் (Email Statement Registration) டேப் தோன்றும். அதில் மொபைல் நம்பர் கேட்கப்படும். அதன்பின்பு பிறந்த தேதி, பான் கார்டு எண் உள்ளிட்ட சில விவரங்களை கொடுக்க வேண்டி இருக்கும். அதன்பிறகு உங்களுக்கு ஓடிபி (OTP) வெரிபிகேஷன் இருக்கும். இதையெல்லாம், முடித்துவிட்டால், ஈமெயில் மூலம் தெரிந்துகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








