நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய ATM, ரயில்வே, விமான மற்றும் ஓய்வூதியதாரர் புதிய விதிகள்!

|

ஏடிஎம், ரயில்வே, விமான நிறுவனங்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான புதிய விதிகள் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் கட்டாயம் இந்த புதிய விதிமுறைகளைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவர்களுக்குப் பயனுள்ளதாய் இருக்கும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. புதிய விதிமுறைகளைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்து விபரங்களும் கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

வங்கி, ஏடிஎம்கள், ரயில்வே மற்றும் விமான நிறுவனங்களுக்கு புதிய விதி

வங்கி, ஏடிஎம்கள், ரயில்வே மற்றும் விமான நிறுவனங்களுக்கு புதிய விதி

வங்கி, ஏடிஎம்கள், ரயில்வே மற்றும் விமான நிறுவனங்கள் உள்ளிட்ட பல துறைகளின் விதிகள் மே 1ம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ரயில் மற்றும் விமானச் சேவைகள் சீர்குலைந்திருந்தாலும், இவற்றை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு முன்பு இது தொடர்பான சில விதிகளை இந்திய அரசாங்கம் மாற்றம் செய்துள்ளது.

ஓய்வூதியதாரர்களுக்கு முழு ஓய்வூதியம்

ஓய்வூதியதாரர்களுக்கு முழு ஓய்வூதியம்

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஓய்வுபெறும் நேரத்தில் பரிமாற்றத்தைத் தேர்வுசெய்தவர்களுக்கு, மே மாதம் முதல் முழு ஓய்வூதியத்தை வழங்கும் என்று அறிவித்துள்ளது. பரிமாற்றத்தைத் தேர்வு என்பது ஓய்வூதியம் பெறுவோர், அவர்களின் மாத ஓய்வூதியத்தின் ஒரு பகுதியை அவர்கள் ஓய்வுபெறும் நேரத்தில் முன்கூட்டியே மொத்த தொகையாக மாற்றுவதற்கான ஒரு விருப்பமாகும்.இந்த வழக்கில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு முழு ஓய்வூதியம் மீட்டெடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பூமியின் வரலாற்றில் மிகவும் ஆபத்தான கொடூரமான இடம் இது தான் - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!பூமியின் வரலாற்றில் மிகவும் ஆபத்தான கொடூரமான இடம் இது தான் - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

சுமார் 6,30,000 ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்

சுமார் 6,30,000 ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்

இந்திய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை ஒவ்வொரு மாதமும் சுமார் 6,30,000 ஓய்வூதியதாரர்களுக்குப் பயனளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்த நடவடிக்கையால் அரசாங்கத்திற்கு சுமார் 1500 கோடி ரூபாய் வரை செலவாகும் என்று தெரிகிறது. கொரோனா வைரஸ் வெடிப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய நாடு தழுவிய பூட்டுதல் ஈரத்தில் அரசாங்கம் இந்த விதியை நடைமுறைப்படுத்தியுள்ளது.

புதிய ஏடிஎம் விதிகள்

புதிய ஏடிஎம் விதிகள்

கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுக்க ஏடிஎம்களுக்கு புதிய அமைப்பு வைக்கப்படும். புதிய விதிப்படி, ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் பிறகு, ஏடிஎம் இயந்திரம் தொற்று இல்லாததாகச் சுத்தம் செய்யப்பட்டு மாற்றப்படும். இந்த முறை காசியாபாத் மற்றும் சென்னையில் நடைமுறை செய்யப்பட்டுள்ளது.

UFO பற்றி அமெரிக்கா அரசாங்கம் வெளியிட்ட ஆதார வீடியோக்கள்! இது ஒரு வரலாற்று தருணம்!UFO பற்றி அமெரிக்கா அரசாங்கம் வெளியிட்ட ஆதார வீடியோக்கள்! இது ஒரு வரலாற்று தருணம்!

சீல் வைக்கப்படும்

சீல் வைக்கப்படும்

கொரோனா ஹாட்ஸ்பாட்டில் உள்ள நகராட்சி ஏடிஎம் கருவிகளை ஒரு நாளைக்கு இரண்டு முறை சுத்தப்படுத்த வேண்டும், அப்படி இந்த துப்புரவு விதிகள் பின்பற்றப்படாவிட்டால் அந்த ஏடிஎம் அறை சீல் வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

போர்டிங் ஸ்டேஷன் விதிகள்

போர்டிங் ஸ்டேஷன் விதிகள்

ஊரடங்கினால் ரயில்கள் இயங்கவில்லை என்றாலும், இந்திய ரயில்வே அதன் சில விதிகளை மே 1ம் தேதி முதல் மாற்றி அமைத்துள்ளது. ரயில் சேவைகள் மீண்டும் துவக்கப்பட்டதும் இந்த விதிகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய விதிப்படி, முன்பதிவு சார்ட் வெளியிடப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பே பயணிகள் தங்கள் போர்டிங் நிலையத்தை மாற்றிக்கொள்ளலாம்.

பூமியில் ஏற்பட அடுத்த நம்பமுடியாத மிகப்பெரிய மாற்றம் இதுதான்! ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி!பூமியில் ஏற்பட அடுத்த நம்பமுடியாத மிகப்பெரிய மாற்றம் இதுதான்! ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி!

தற்போதுள்ள விதி

தற்போதுள்ள விதி

தற்போதுள்ள விதிகளின்படி, பயணிகள் பயண தேதிக்கு 24 மணி நேரத்திற்கு முன்னர் தங்களின் போர்டிங் நிலையத்தை மாற்றலாம். இருப்பினும், போர்டிங் ஸ்டேஷனை மாற்றிய பின் ஒரு பயணி அந்த பயணத்தை மேற்கொள்ளாவிட்டாலும், டிக்கெட்டை ரத்து செய்தாலும் அவர்களுக்கு எந்த பணமும் திரும்ப வழங்கப்படமாட்டாது என்று இந்திய ரயில்வே தெளிவாகக் கூறியுள்ளது.

புதிய விமான விதிகள்

புதிய விமான விதிகள்

மே 1ம் தேதி முதல், ஏர் இந்தியா பயணிகள் டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்குக் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்த 24 மணி நேரத்திற்குள் பயணிகள் தங்களது டிக்கெட்டை ரத்துசெய்தால் அல்லது மாற்றினால், ரத்துசெய்யும் கட்டணத்தை நிறுவனம் மே 1ம் தேதி முதல் ரத்து செய்துள்ளது. இருப்பினும் எப்பொழுது விமானச் சேவைகள் துவங்கும் என்பது பற்றிய தகவல்கள் எதுவும் தெளிவாக வெளியிடப்படவில்லை.

Best Mobiles in India

English summary
New rules for ATMs Banks Railways Airlines And Pensioners From May 1st All You Need To Know : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X