ஆதார் வாங்க, அப்டேட் செய்ய புது ரூல்ஸ்.. UIDAI புது கண்டிஷன்கள், புது டாக்குமெண்ட் லிஸ்ட் வெளியானது!
யுஐடிஏஐ (UIDAI) என்கிற இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India) ஆனது, ஆதார் பதிவு மற்றும் திருத்தங்களுக்கான விதிகளை திருத்தி உள்ளது. இந்திய அரசாங்கம் இதை - ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் முதல் திருத்த ஒழுங்குமுறைகள் 2026 (Aadhaar Enrolment and Update First Amendment Regulations 2026) என்கிறது
இந்த திருத்தம், ஆதார் பெறுவதற்கான ஆவண தேவைகளை (Documentation requirement) நவீனமயம் ஆக்குகிறது, ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்களின் பட்டியலை (List of acceptable documents) விரிவுபடுத்துகிறது, குழந்தைகள் மற்றும் நலிவடைந்த குழுக்கள் பதிவு செய்வதை எளிதாக்குகிறது, மேலும் வெளிநாட்டினருக்கான தெளிவான வழிகாட்டுதல்களையும் நிறுவுகிறது.

அதுமட்டுமின்றி, யுஐடிஏஐ ஆனது செல்லுபடியாகும் அடையாள சான்று (Proof of Identity - PoI), முகவரிச் சான்று (Proof of Address - PoA), பிறந்த தேதிச் சான்று (Proof of Date of Birth - PDB), உறவுமுறைச் சான்று (Proof of Relationship - PoR) மற்றும் பலவற்றின் பட்டியலையும் விரிவுபடுத்தியுள்ளது.
இந்த திருத்தப்பட்ட விதிகள் ஆனது குழந்தைகள், வெளிநாட்டினர்/ஓசிஐ/எல்டிவி ஹோல்டர்கள், திருநங்கைகள், நிறுவன பராமரிப்பில் உள்ள குழந்தைகள் மற்றும் சட்டப்பூர்வ பாதுகாவலரின் கீழ் உள்ளவர்களுக்கான விதிகளையும் தெளிவுபடுத்தியுள்ளன. இந்த கட்டுரையில் - ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் முதல் திருத்த ஒழுங்குமுறைகள் 2026.5.12-ஆல் அறிமுகப்படுத்தப்பட்ட முக்கிய மாற்றங்களை பார்ப்போம்.
ஆதார் பதிவிற்காக இனி ஏற்றுக்கொள்ளப்படும் ஆவணங்களின் விரிவாக்கப்பட்ட பட்டியல்:
மின்னணு வாக்காளர் அடையாள அட்டை (e-Voter ID)
மின்னணு ரேஷன் அட்டை (e-Ration card)
ஓய்வூதிய பண ஆணைகள் (Pension payment orders)
திருமணச் சான்றிதழ்கள் (Marriage certificates)
விவாகரத்துத் தீர்ப்புகள் (Divorce decrees)
சிஜிஎச்எஸ் / இசிஎச்எஸ் / இஎஸ்சிசி அட்டைகள் (CGHS/ECHS/ESIC cards)
பயன்பாட்டுக் கட்டண ரசீதுகள் (Utility bills)
கல்விச் சான்றிதழ்கள் / மதிப்பெண் தாள்கள் (Educational certificates/marksheets)
வங்கி அறிக்கைகள் / பாஸ்புக்குகள் (Bank statements/passbooks)
காப்பீட்டுக் கொள்கைகள் (Insurance policies)
பதிவு செய்யப்பட்ட வாடகை ஒப்பந்தங்கள் (Registered rent agreements)
என்ஆர்இஜிஏ (NREGA) வேலை அட்டைகள் (NREGA job cards)
கைதி அடையாள ஆவணங்கள் (Prisoner ID documents)
தங்குமிடச் சான்றிதழ்கள் (Shelter home certificates)
அதிகாரிகளால் வழங்கப்படும் யுஐடிஏஐ தரநிலைச் சான்றிதழ் படிவங்கள் (UIDAI standard certificate formats issued by officials)
ஆதார் வழங்கும் அதிகார அமைப்பு (யுஐடிஏஐ) ஆனது, பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு ஆவணமும் பின்வரும் நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் கூறுகிறது:
- ஆவணம் செல்லுபடியாகும் ஒன்றாக இருக்க வேண்டும் மற்றும் காலாவதியாகாததாக இருக்க வேண்டும்.
- அது சமர்ப்பிக்கும் நபருக்கு சொந்தமானதாக இருக்க வேண்டும்.
- ஆவணத்தில் உள்ள விவரங்கள், அதை வழங்கிய அதிகார அமைப்பிடமிருந்தோ அல்லது மூலத்திலிருந்தோ சரிபார்க்கக்கூடியதாக இருக்க வேண்டும்.
- அந்த ஆவணத்தை அடையாளம், முகவரி, பிறந்த தேதி அல்லது உறவுமுறைக்கான ஆதாரமாக பயன்படுத்த முடியாது என்று வழங்கிய அதிகார அமைப்பு அறிவித்திருக்கக் கூடாது.
ஆதார் ஆவணங்களை ஏற்றுக்கொள்வதற்கான முக்கிய நிபந்தனைகள்: ஆதார் பதிவு அல்லது புதுப்பித்தலின் போது ஆவணங்களை ஏற்றுக்கொள்வதற்கு யுஐடிஏஐ கடுமையான நிபந்தனைகளையும் வகுத்துள்ளது.
- அடையாளச் சான்று (Proof of Identity - PoI) ஆவணத்தில் நபரின் பெயர் மற்றும் புகைப்படம் இருக்க வேண்டும்.
- அடையாளம், முகவரி, உறவுமுறை அல்லது பிறந்த தேதிக்கான சான்றாக சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள், விண்ணப்பிக்கும் நபரின் பெயரில் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
- உறவுமுறைச் சான்று (Proof of Relationship - PoR) ஆவணத்தில் விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் குடும்பத் தலைவரின் பெயர் ஆகிய இரண்டும் இருக்க வேண்டும்.
- ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர், ஆதார் பதிவேட்டில் உள்ளவாறே துல்லியமாக பயன்படுத்தப்படும். கூடுதல் விவரங்கள் எதுவும் சேர்க்கப்படாது.
- சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து ஆவணங்களிலும் பெயரும் பிறந்த தேதியும் பொருந்த வேண்டும்.


Click it and Unblock the Notifications