ஆதார் கார்டு வைத்து இருப்பவர்களுக்கு புது ரூல்ஸ்.. 18 வயதுக்கு மேல ஆகிடுச்சா.. ஒரே நேரத்தில் 3 மாற்றங்கள்!
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆனது ஆதார் கார்டு பதிவு மற்றும் அப்டேட்டில் மூன்று மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. 5 வயது முதல் 18 வயது வரையிலும், 18 வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கும் இந்த மாற்றங்கள் பொருந்துகின்றன. ஆகவே, ஒட்டுமொத்த இந்திய மக்களும் இந்த புதிய விதிகளை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆதார் கார்டு எண்ட்ரோல்மெண்ட் (Aadhaar Card Enrolment) மற்றும் ஆதார் கார்டு அப்டேட் (Aadhaar Card Update) செய்யும்போது, அதற்கு கேட்கப்படும் அடையாள சான்று, முகவரி சான்று, உறவுமுறை மற்றும் பிறந்த தேதிக்கான சான்று ஆகியவற்றில் இந்த மாற்றங்கள் வருகின்றன. இதில் ஏற்றுக்கொள்ளப்படும் மற்றும் ஏற்றுக்கொள்ளப்படாத சான்றுகளின் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India) ஆனது இதை மூன்றாக பிரித்துள்ளது. அதாவது, 5 வயது முதல் 18 வயது வரையில் இருப்பவர்களுக்கான ஆவணங்களின் பட்டியல், 18 வயது மற்றும் அதற்கு மேல் வயது கொண்டவர்களுக்கான ஆவணங்களின் பட்டியல் மற்றும் அனைத்து வயதினருக்குமான ஆதார் அப்டேட் செய்வதற்கான ஆவணங்களின் பட்டியல் உள்ளது.
5 வயது முதல் 18 வயது வரை: அடையாள சான்றுக்கு இந்திய பாஸ்போர்ட் (Indian Passport), இருப்பிட சான்றிதழ் (Domicile Certificate), எஸ்டி/எஸ்எடி/ஓபிசி சான்றிதழ், டிசிபிஓ சான்றிதழ் (DCPO Certificate), டிரான்ஸ்ஜென்டர் ஐடி கார்டு (Transgender ID Card) ஆகியவை ஏற்றுக்கொள்ளப்படும். சட்டப்பூர்வ பாதுகாவலர் ஆவணம் (Legal Guardianship Document), பிறப்புச் சான்றிதழ் ஏற்று கொள்ளப்படாது.
இதே ஆவணங்களை முகவரி சான்றுக்கும் பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால், உறவுமுறை சான்றுக்கு ஆவணங்கள் மாறுகின்றன. ஆகவே, இதற்கு பாஸ்போர்ட், இருப்பிட சான்றிதழ், எஸ்டி/எஸ்எடி/ஓபிசி சான்றிதழ், டிரான்ஸ்ஜென்டர் ஐடி கார்டு, சட்டப்பூர்வ பாதுகாவலர் ஆவணம், பிறப்புச் சான்றிதழ் கொடுக்கக்லாம். டிசிபிஓ சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படாது.
18 வயதுக்கு மேல்: அடையாள சான்றுக்கு பாஸ்போர்ட், ரேஷன் கார்டு/பிடிஎஸ் கார்டு (Ration / PDS Card), ஓட்டர் ஐடி, ஓட்டுநர் உரிமம் (Driving Licence), கவர்மெண்ட் சர்வீஸ் ஐடி (Govt. Service ID), ஓய்வூதியதாரர் / சுதந்திரப் போராட்ட வீரர் ஐடி, சிஜிஎச்எஸ்/ஈசிஜிஎஸ்/ஈஎஸ்ஐசி/மெடி-கிளைம், யுஐடிஏஐ சான்றிதழ் (ஷெல்டர் ஹோம்), 100 நாள் வேலை கார்டு கொடுக்கலாம்.
எஸ்டி/எஸ்எடி/ஓபிசி சான்றிதழ், பள்ளி/கல்லூரி மார்க்சீட், டிரான்ஸ்ஜென்டர் சான்றிதழ் மற்றும் கைதி சேர்க்கை ஆவணத்தை கொடுக்கலாம். அடுத்து எந்தெந்த ஆவணங்கள் அடையாள சான்றுக்கு ஏற்று கொள்ளபடாது என்றால், 3 மாத மின்கட்டண ரசீது, 3 மாத குடிநீர் வரி ரசீது, 3 மாத போன் பில் அல்லது பிராட்பேண்ட் பில், விற்பனை, வாடரை, குத்தகை ஒப்பந்த சான்றிதழ் இருக்கின்றன.
மேலும், கேஸ் பில், ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடு ஆவணம் மற்றும் பிறப்பு சான்றிதழ் ஏற்று கொள்ளப்படாது. இப்போது, முகவரி சான்றுக்கு வருவோம், மேலே பார்த்த ஆவணங்களில் ஓட்டுநர் உரிமம், சிஜிஎச்எஸ்/ஈசிஜிஎஸ்/ஈஎஸ்ஐசி/மெடி-கிளைம், பள்ளி, கல்லூரி மார்க்சீட், பிறப்பு சான்றிதழ் தவிர மற்ற அனைத்து ஆவணங்களுக்கும் முகவரி சான்றுக்கு ஏற்று கொள்ளப்படும்.
பிறந்த தேதிக்கான ஆவணங்களுக்கு மேலே பார்த்த பாஸ்போர்ட், கவர்மெண்ட் சர்வீஸ் ஐடி, ஓய்வூதியதாரர் / சுதந்திரப் போராட்ட வீரர் ஐடி, பள்ளி, கல்லூரி மார்க்சீட், டிரான்ஸ்ஜென்டர் சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் ஆகியவற்றை தவிர வேறு ஆவணங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது. ஆதார் அப்டேட் செய்ய பாஸ்போர்ட் ஆனது பிறந்த தேதி, முகவரி, உறவு முறை மற்றும் அடையாளத்துக்கு ஏற்கப்படும்.
அதேபோல ரேஷன் கார்டை அடையாள சான்றுக்கும், முகவரி சான்றுக்கும், உறவுமுறை சான்றுக்கும் பயன்படுத்தலாம். பிறந்த தேதி சான்றுக்கு பயன்படுத்த முடியாது. பள்ளி, கல்லூரிகளின் மார்க்சீட்டை பிறந்த தேதிக்கு பயன்படுத்தலாம். இந்த மூன்று மாற்றங்களைத்தான் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கொண்டுவந்துள்ளது.


Click it and Unblock the Notifications








