Home
News

புது ரூல்ஸ்.. ஏப்.1 முதல் அமல்.. பேங்க் அக்கவுண்ட் லிமிட்.. PAN கார்டு.. ATM கார்டு.. 4 முக்கிய மாற்றங்கள்!

பேங்க் அக்கவுண்ட் வைத்து இருக்கும் கஸ்டமர்கள் மட்டுமல்லாமல், பான் கார்டு, கிரெடிட் கார்டு போன்றவற்றை வைத்து இருக்கும் கஸ்டமர்களுக்கு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. பான் கார்டில் ஒட்டுமொத்த பேங்க் கஸ்டமர்களுக்கான விதிகளும், எஸ்பிஐ பேங்க், யெஸ் பேங்க், பிஎஸ்பிடி அக்கவுண்ட் கஸ்டமர்களுக்கு தனித்தனி விதிகளும் விதிகள் அமலாக உள்ளன.

1. பான் (PAN) கார்டு ரூல்ஸ்

ஒரு நாளில் ரூ.50,000 பணத்தை டெபாசிட் செய்தாலோ அல்லது எடுத்தாலோ பான் கார்டு விவரங்களை கொடுக்க வேண்டும். ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பிறகு இந்த லிமிட் ரூ.10 லட்சமாக அதிகரிக்கப்பட உள்ளது. ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளில் ரூ.10 லட்சம் மேல் பான் கார்டு விவரங்கள் தேவைப்படும். ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பிறகு ரூ.20 லட்சமாக லிமிட் உயருகிறது.

புது ரூல்ஸ்.. ஏப்.1 அமல்.. பேங்க் அக்கவுண்ட் லிமிட்.. PAN கார்டு!

ரூ.5 லட்சத்துக்கும் மேல் வாகனங்கள் வாங்கினால் மட்டுமே பான் கார்டு அவசியம். இந்த லிமிட்டுக்குள் பான் கார்டு தேவையில்லை. ஹோட்டல் பில்கள் ரூ.1 லட்சம் மேல் சென்றால் மட்டுமே பான் கார்டு கேட்கப்படும். இப்போது, ரூ.50,000ஆக லிமிட் இருக்கிறது. இந்த விதிகள் ஒட்டுமொத்த பேங்க் கஸ்டமர்களுக்கும் அமலாக இருக்கிறது.

2. எஸ்பிஐ பேங்க் ரூல்ஸ்

எஸ்பிஐ பேங்கில் அக்கவுண்ட் வைத்து இருப்பவர்களுக்கு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய விதிகள் அமலுக்கு வர உள்ளது. எஸ்பிஐ கார்டுகள் வழியாக ரிவார்ட் பாயிண்ட்களை ரீடெம்ஷன் செய்வதில் லிமிட் கொடுக்கப்பட உள்ளது. அதாவது, ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 60,000 ரிவார்ட் பாயிண்ட்களை மட்டுமே இனிமேல் ரீடெம்ஷன் செய்து கொள்ள அனுமதி கொடுக்கப்படும்.

60,000 மேல் எவ்வளவு ரிவார்ட் பாயிண்ட்களை வைத்து இருந்தாலும், இந்த லிமிட்டுக்குள் மட்டுமே ஒரு மாதத்தில் ரீடெம்ஷன் செய்து கொள்ள முடியும். மேலும், 4,000 மடங்குகளின்படி ரீடெம்ஷன் செய்து கொள்ள வேண்டும். அதாவது, 4,000 அல்லது 8,000 அல்லது 16,000 போன்று 4,000 மடங்குகளில் ரீடெம்ஷன் செய்து கொள்ளலாம். இதில் சில விலக்குகள் உள்ளன.

ஏர் இந்தியா எஸ்பிஐ சிக்னேச்சர் கார்டு (Air India SBI Signature Card) மற்றும் போன்பே எஸ்பிஐ கார்டு பர்பிள் (PhonePe SBI Card PURPLE) ஆகியவற்றுக்கு இந்த விதிகள் பொருந்தாது. மேலும், போன்பே எஸ்பிஐ கார்டு செலக்ட் பிளாக் (PhonePe SBI Card SELECT BLACK) கார்டுக்கும் இந்த ஏப்ரல் 1ஆம் தேதி விதிகள் பொருந்தாது. வழக்கம்போல ரிவார்ட் பாயிண்ட்களை ரீடெம்ஷன் செய்து கொள்ளலாம்.

3. யெஸ் பேங்க் ரூல்ஸ்

யெஸ் பேங்க் கிரெடிட் கார்டு கஸ்டமர்களுக்கு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் யூட்டிலிட்டி & சர்வீஸ் பரிவர்த்தனை கட்டண (Utility & Service Transaction Fee) விதிகளில் மாற்றங்கள் வருகின்றன. யெஸ் பேங்க் பிரைவேட் கிரெடி் கார்டுகளில் யூட்டிலிட்டி வகையில் ஒட்டுமொத்த செலவுகள் ரூ.1,00,000 தொகையை விட அதிகமாக இருந்தால், 1 சதவீதம் கட்டணம் + ஜிஎஸ்டி கட்டணம் இருக்கும்.

இப்போது, ரூ.50,000 லிமிட் இருக்கிறது. மேலும், மார்க்யூ, ரிசர்வ், யூனி, யூனி ரூபே விர்ச்சுவல், ஏஐ இன்சைட், ஏஐ இன்சைட் ரூபே விர்ச்சுவல் ஆகிய கார்டுகளுக்கும் இப்போது இருக்கும் ரூ.25,000 லிமிட் ரூ.50,000ஆக மாற்றப்பட உள்ளது. மற்ற கார்டுகளுக்கு ரூ.15,000 தொகையானது ரூ.25,000ஆக மாற்றப்பட உள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து இதன்படி பரிவர்த்தனைகள் நடக்கும்.

4. பிஎஸ்பிடி ரூல்ஸ்

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பேசிக் சேவிங்ஸ் பேங்க் டெபாசிட் அக்கவுண்ட்டில் (Basic Savings Bank Deposit Account) புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. யுபிஐ, ஐஎம்பிஎஸ், நெப்ட் உள்ளிட்ட எந்த பரிவர்த்தனைகள் வழியாகவும் மாதாந்திரம் லிமிட் இல்லாமல் பணத்தை டெபாசிட்களை செய்து கொள்ளலாம். செக் கலெக்சன் வழியாகவும் பணத்தை டெபாசிட் செய்து கொள்ளலாம்.

ஏடிஎம் அல்லது ஏடிஎம்-கம்-டெபிட் கார்டு சேவைகள் இலவமாக கொடுக்கப்படும். இதற்கு வருடாந்திர கட்டணங்கள் வசூலிக்கப்படாது. மேலும், இலவச செக் புக் கொடுக்கப்படும். இதில் குறைந்தது 25 லீப்கள் இருக்கும். இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் சேவைகளும் கொடுக்கப்படும். இதற்காக எந்த கட்டணங்களையும் பேங்குகள் வசூலிக்காது.

இலவச பாஸ்புக் கொடுக்கப்படும். இதில் மாதாந்திர ஸ்டேட்மெண்ட்கை எந்த கட்டணமும் இல்லாமல் கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். இந்த பேசிக் சேவிங்ஸ் பேங்க் டெபாசிட் அக்கவுண்ட் விதிகளை ரிசர்வ் பேங்க் ஆப் இந்திய அமலுக்கு கொண்டு வருகிறது. மேலும், பான் கார்டு விதிகளும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Rules Effective April 1 For SBI Yes Bank BSBD PAN Card Holders Check Mobile Banking ATM Changes
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X