Home
News

புது ரூல்ஸ்.. அக்.15 முதல் அமல்.. ரூ.2000 மேல் ரூ.12 கட்டணம்.. UPI-க்கு வருது MDR சார்ஜ்.. எவ்வளவு இருக்கு?

கூகுள்பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) உள்ளிட்ட யுபிஐ (UPI) ஆப்கள் வழியாக செய்யப்படும் பண பரிவர்த்தனைகளில் ரூ.2000 மேல் பணம் அனுப்பினால் வணிகர் தள்ளுபடி விகிதம் (Merchant Discount Rate) என்கிற கட்டணம் விதிக்கப்பட இருக்கிறது. இந்த புதிய விதிகள் அக்டோபர் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது.

தனி நபர்களுக்கு இடையேயான (Person-to-Person) பண பரிவர்த்தனைகளுக்கு இந்த வணிகர் தள்ளுபடி விகிதம் (MDR) பொருந்தாது. ஆகவே, மொபைல் நம்பர் (Mobile Number) மற்றும் யுபிஐ ஐடி (UPI ID) வழியாக நண்பர்களுக்கு பணம் அனுப்புவது, குடும்ப உறுப்பினர்களுக்கு பணம் அனுப்புவது, தெரிந்தவர்களுக்கு அனுப்புவது உள்ளிட்ட எந்த பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் விதிக்கப்படாது.

புது ரூல்ஸ்.. அக்.15 முதல் அமல்.. ரூ.2000 மேல் ரூ.12 கட்டணம்!

அதேபோல தனிநபர் - வணிகர் இடையேயான பணப் பரிவர்த்தனைகள் ரூ.2000 கீழ் இருந்தாலும் எந்த கட்டணமும் விதிக்கப்படாது. ஆனால், தனிநபர் - வணிகர் இடையேயான பணப் பரிவர்த்தனைகளில் ரூ.2000 மேல் செல்லும்போது, 0.4 சதவீத கட்டணத்தை செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தையும் தனிநபர்கள் செலுத்த வேண்டியது கிடையாது.

யுபிஐ பரிவர்த்தனையை வணிக ரீதியாக பதிவு செய்து கூகுள் பே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட ஆப்கள் வழியாக பணத்தை பெறும் வணிகர்கள் மட்டுமே இந்த கட்டணத்தை செலுத்த வேண்டும். அதே நேரத்தில் தனிநபர் - வணிகர் (Person-to-Merchant) பிரிவின் கீழ் யுபிஐ பரிவர்த்தனைகள் வழியாக மாதத்துக்கு ரூ.1 லட்சம் வரையில் பெறும் வணிகர்களுக்கும் இந்த எம்டிஆர் கட்டணம் கிடையாது.

இது பெட்டிக்கடை, டீ கடை உள்ளிட்ட தெருவோர வியாபாரிகள், உள்ளூர் கடைகள் வணிகர்களுக்கு மட்டுமே பொருந்தும். அதுவே ரூ.1 லட்சம் மேல் யுபிஐ பரிவர்த்தனைகள் வழியாக பணத்தை பெறும் வணிகர்கள் ரூ.2000 மேல் பெற்றால், இந்த எம்டிஆர் கட்டணத்தை செலுத்த வேண்டும். எவ்வளவு பரிவர்த்தனைக்கு எவ்வளவு கட்டணம் இருக்கும்.

என்பிசிஐ (NPCI) என்கிற நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் (National Payments Corporation of India) விதிகளின்படி, தனிநபர் - வணிகர் இடையேயான பணப் பரிவர்த்தனைகளில் ரூ.2000 மேல் சென்றால் 0.4 சதவீத கட்டணம் விதிக்கப்படும். எடுத்து காட்டாக ரூ.3,000 மதிப்புள்ள யுபிஐ பரிவர்த்தனைக்கு 0.4 சதவீத கணக்கின்படி ரூ.12 கட்டணம் செலுத்த வேண்டும்.

ரூ.10,000 மதிப்புள்ள பரிவர்த்தனைக்கு ரூ.40 எம்டிஆர் கட்டணம் செலுத்த வேண்டும். இதிலும் அதிகபட்ச வரம்பு இருக்கிறது. அதிகபட்சமாக ரூ.300 மட்டுமே எம்டிஆர் கட்டணமாக வசூலிக்கப்படும். ஆகவே, ரூ.75,000 மதிப்புள்ள பரிவர்த்தனைகளில் இருந்து ரூ.300 எம்டிஆர் கட்டணம் பொதுவாக வசூலிக்கப்படும். இந்த ரூ.75,000 மேல் சென்றாலும் ரூ.300 மட்டுமே வசூலிக்கப்படும்.

இதுபோக தனிநபர் - வணிகர் இடையேயான பணப் பரிவர்த்தனைகளில் சில பரிவர்த்தனைகளுக்கு விலக்கு இருக்கிறது. ரயில்வே (Railway), டெலிகாம் (Telecom), இன்சூரன்ஸ் (Insurace) மற்றும் பெட்ரோல், டீசல் போன்ற முக்கிய பரிவர்த்தனைகளில் ரூ.2000 மேல் சென்றால், ரூ.5 மட்டுமே வணிகர் தள்ளுபடி விகித (Merchant Discount Rate) கட்டணம் செலுத்தினால் போதுமானது. இதற்கு 0.4 சதவீத கட்டணம் பொருந்தாது.

இந்த விதிகளே வருகிற அக்டோபர் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது. ஆகவே, அந்த தேதிக்கு மேல் செய்யப்படும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு (UPI Transactions) எம்டிஆர் கட்டணம் (MDR Charges) விதிக்கப்படும். இதை முற்றிலும் வணிகர்கள் மட்டுமே செலுத்த வேண்டும் என்தால், தனிநபர்களுக்கு இடையேயான பரிவர்த்தனைகள் பாதிக்கப்படாது.

அதே நேரத்தில் கூகுள் பே, போன்பே, பேடிஎம் வழியாக செய்யப்படும் பண பரிவர்த்தனைகளில் 90 சதவீதத்துக்கும் அதிகமாக ரூ.2000 கீழ் மட்டுமே பரிமாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. ஆகவே, இது எந்த சிரமத்தையும் யுபிஐ கஸ்டமர்களிடையே ஏற்படுத்த வாய்ப்புகள் குறைவாகும். சிறு வியாபாரிகளுக்கும் விலக்கு இருப்பதால், கட்டணத்தால் பாதிப்பு இருக்காது.

Best Mobiles in India

English summary
New Rules Effect From October 15 2026 For UPI Transactions Over Rs 2000 Check MDR Charges
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X