Home
News

புது ரூல்ஸ்.. ஜன.1 முதல் அமல்.. பேங்க் அக்கவுண்ட்.. மின்சார கட்டணம்.. UPI பேமெண்ட்.. 2026 முக்கிய மாற்றங்கள்!

பேங்க் அக்கவுண்ட் ஓப்பன் செய்துவிட்ட பயன்படுத்தாமல் இருக்கும் கஸ்டமர்கள், ஜீரோ பேலன்ஸ் மட்டுமே வைத்திருக்கும் கஸ்டமர்கள், கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ ஆப்களில் மின்சார கட்டணம் செலுத்தும் கஸ்டமர்களுக்கு 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் புதிய விதிகள் (New Rules From January 1) அமலுக்கு வர உள்ளன. இந்த விதிகள் பேங்க் கஸ்டமர்களிடையே நேரடி பாதிப்பை கொண்டுவர இருக்கின்றன.

பேங்க் அக்கவுண்ட் விதிகளை ஆர்பிஐ என்று அழைக்கப்படும் இந்திய ரிசர்வ் வங்கி அமலுக்கு கொண்டுவருகிறது. யுபிஐ விதிகளை என்பிசிஐ என்று அழைக்கப்படும் இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகம் அமல் செய்துள்ளது. மேலும், பான் ஆதார் எண் இணைப்பு, வாராந்திர கிரெடிட் ஸ்கோர் போன்ற பல்வேறு புதிய விதிகள் ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.

புது ரூல்ஸ்.. ஜன.1 முதல் அமல்.. பேங்க் அக்கவுண்ட்.. மின்சார கட்டணம்!

டோர்மேன்ட் அக்கவுண்ட்கள் (Dormant Accounts): இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேலாக எந்த டெபாசிட் அல்லது பணப் பரிவர்த்தனைகள் செய்யப்படாத அக்கவுண்ட்கள் டோர்மேன்ட் அல்லது செயலில் இல்லாத அக்கவுண்ட்களாக எடுத்து கொள்ளப்படும். இந்த அக்கவுண்ட்கள் ரிசர்வ் வங்கி விதிகளின்படி முடக்கப்பட இருக்கின்றன. சம்பந்தப்பட்ட பேங்குகள் இந்த அக்கவுண்ட்களை முடக்கும்.

இந்த டோர்மேன்ட் அக்கவுண்ட்கள் வைத்திருக்கும் கஸ்டமர்கள் மீண்டும் அந்த அக்கவுண்ட்டில் பரிவர்த்தனை செய்தால், அது செயலில் இருக்கும் கணக்காக எடுத்து கொள்ளப்படும். ஒருவேளை செயலில் இல்லாதபட்சத்தில் சம்பந்தபட்ட பேங்குகளை கஸ்டமர்கள் அணுகி மீண்டும் ஆக்டிவேட் செய்து கொள்ளலாம். இது ஏற்கனவே முடக்கப்பட்ட அக்கவுண்ட்களுக்கும் பொருந்தும்.

இன்ஆக்டிவ் அக்கவுண்ட்கள் (Inactive Accounts): இந்த அக்கவுண்ட்களும் கிட்டத்தட்ட செயலில் இல்லாத கணக்குகளாகவே இருக்கின்றன. அதாவது, 12 மாதங்கள் அல்லது அதற்கு மேலாக பேங்க் கஸ்டமர்களால் எந்த பரிவர்த்தனையும் செய்யப்படாத அக்கவுண்ட்கள் இன்ஆக்டிவ் அக்கவுண்ட்களாக எடுத்து கொள்ளப்படுகின்றன. இந்த அக்கவுண்ட்கள் தவறாக பயன்படுத்தப்படலாம்

ஆகவே, ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி இந்த அக்கவுண்ட்களும் முடக்கப்பட இருக்கின்றன. இதையும் காப்பாற்றி கொள்வது மிகவும் எளிதாக இருக்கிறது. குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்யலாம், பணத்தை எடுக்கலாம் அல்லது அந்த பேங்க் அக்கவுண்ட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செய்யலாம். இப்படி செய்தாலே அந்த பேங்க் அக்கவுண்ட் தொடர்ந்து செயல்படும்.

ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் (Zero Balance Accounts): பேங்க் அக்கவுண்ட் ஓப்பன் செய்த பிறகு எந்த பரிவர்த்தனையும் செய்யாமல் ஜீரோ பேலன்ஸ் மட்டுமே வைத்திருந்தால், அந்த கணக்குகளும் முடக்கப்பட வாய்புள்ளது. ஆனால், இது ஜீரோ பேலன்ஸ் வைத்திருக்க அனுமதி கொடுக்கும் பேங்குகளுக்கு பொருந்தாது. இருப்பினும், அதில் பரிவர்த்தனைகளை கஸ்டமர்கள் செய்ய வேண்டும்.

இதுபோன்ற அக்கவுண்ட்களுக்கு கேஒய்சி (KYC) சரிபார்ப்பு செய்யப்பட உள்ளதை இந்த புதிய ரிசர்வ் வங்கி விதிகள் உறுதிப்படுகிறது. இந்த பேங்க் அக்கவுண்ட் விதிகளை போலவே யுபிஐ ஆப்களில் (UPI Apps) ஆட்டோபே மேன்டேட்டை (Autopay Mandate) பயன்படுத்தி மின்சார கட்டணம் (Electricity Bill), ஓடிடி சந்தா, எஸ்ஐபி (SIP) போன்றவற்றை செலுத்தும் கஸ்டமர்களுக்கும் விதிகள் வந்துள்ளன.

கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ ஆப்களில் ஆட்டோபே மேன்டேட் இருக்கிறது. இதை ஆக்டிவேட் செய்தால், தானாகவே பணம் டெபிட் செய்யப்படும். இதில் மின்சார கட்டணம் உள்ளிட்ட முக்கியமான பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தலாம். இது எந்த ஆப்பில் மேன்டேட் செய்யப்படுமே, அதில் மட்டுமே அதை பயன்படுத்த முடிந்தது.

அதாவது, அந்த ஆட்டோபே மேன்டேட்டை நிறுத்தி வைப்பது, கேன்சல் செய்வது, பணம் சென்றுவிட்டதா என்பதை பார்ப்பது உள்ளிட்டவையை சம்பந்தப்பட்ட ஆப்பில் மட்டுமே செய்ய முடிந்தது. ஆனால், டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் எந்தவொரு ஆப்பில் இருந்தும், ஆட்டோபே மேன்டேட்களை பார்க்கவும், அதில் மாற்றங்களையும் செய்ய முடியும். ஆகவே, ஜனவரில் இந்த விதிகள்படி பரிவர்த்தனை நடக்கும்.

மேலும், பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்க டிசம்பர் 31 ஆம் தேதி கடைசி நாளாக இருக்கிறது. வாராந்திர கிரெடிட் ஸ்கோர் அப்டேட் செய்யப்பட இருக்கிறது. இதனால் பேங்க் கஸ்டமர்கள் அடிக்கடி கிரெடிட் ஸ்கோர் அப்டேட்டை பார்க்க முடியும். அதனடிப்படையில் கடன்களையும் பெற்று கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X