Home
News

சொல்ல சொல்ல கேட்கல.. ஆப்பு வச்சிவிட்ட RBI.. பிப்.29-க்கு பின்னர் Paytm App-ல் இதெல்லாம் செய்ய முடியாது!

"தொடர்ச்சியான இணக்கமின்மை" காரணமாக, பேடிஎம் நிறுவனம் மீது கடுப்பான ரிசர்வ் வங்கி, பேடிஎம் ஆப்பை பயன்படுத்துவதில் சில புதிய கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. 2024 பிப்ரவரி 29 ஆம் தேதிக்கு பின்னர் பேடிஎம் ஆப்பில் என்னென்ன செய்ய முடியாது? இதோ விவரங்கள்:

01. ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி பிப்ரவரி 29 ஆம் தேதிக்கு பிறகு, பண பரிமாற்றங்கள் (ஏஇபிஎஸ், ஐஎம்பிஎஸ் போன்ற சேவைகளின் வகையை பொருட்படுத்தாமல்), பில் செலுத்துதல் அல்லது யுபிஐ வசதிகள் போன்ற வேறு எந்த சேவைகளையும் வழங்கக்கூடாது. அதாவது, குறிப்பிட்ட தேதிக்கு பிறகு பேடிஎம் சேவைகளை பயன்படுத்தி பணப் பரிமாற்றம் அல்லது பில் பேமெண்ட்கள் அல்லது யுபிஐ பரிவர்த்தனைகளை உங்களால் செய்ய முடியாது.

பிப்.29-க்கு பின்னர் Paytm App-ல் இதெல்லாம் செய்ய முடியாது!

02. 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 29 ஆம் தேதிக்கு பிறகு, பேடிஎம் பேமன்ட்ஸ் பேங்க் (Paytm Payments Bank) ஆனது புதிய பயனர்களை இணைக்காது. அதாவது, நீங்கள் ஏற்கனவே ஒரு பேடிஎம் பயனராக இல்லையெனில், குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு, பேடிஎம் பிளாட்ஃபார்மில் உங்களால் புதிய அக்கவுண்ட்டை உருவாக்க முடியாது.

ஒருவேளை நீங்கள் ஏற்கனவே ஒரு பேடிஎம் பயனர் தான் என்றால், உங்களால் பேடிஎம் வேலட்கள் (Paytm wallets), பேடிஎம் ஃபாஸ்டாக்ஸ் (Paytm Fastags) அல்லது மொபிலிட்டி கார்டுகளை (Mobility Cards) பயன்படுத்த முடியாது. ஷாப்பிங் பில்கள், பார்க்கிங் கட்டணம், ஏடிஎம் வித்ட்ரவல்ஸ், பெட்ரோல் அல்லது உணவு பில்கள் செலுத்துவதற்கு டிரான்ஸிட் கார்டுகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

பிப்.29-க்கு பின்னர் Paytm App-ல் இதெல்லாம் செய்ய முடியாது!

03. மேலும் பிப்ரவரி 29 ஆம் தேதிக்கு பிறகு, பேடிஎம் ஆப் ஆனது எந்த புதிய டெபாசிட்களையும் (New Deposites) ஏற்காது. அதாவது உங்கள் பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்கில் நீங்கள் நிதியை சேர்க்க விரும்பினால், அதை செய்ய உங்களுக்கு பிப்ரவரி 29 ஆம் தேதி தான் கடைசி நாளாக இருக்கும். அதன் பின்னர் உங்கள் சேவிங்ஸ் அக்கவுண்டில் பணத்தை சேர்க்க முடியாது.

04. இதுதவிர்த்து வேலட்கள் உட்பட டெபிட் அல்லது கிரெடிட் பரிவர்த்தனைகளும் கூட அனுமதிக்கப்படாது. இருப்பினும் (ஆர்பிஐ அறிவிப்பின்படி) வாடிக்கையாளர்கள் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி வித்ட்ரா (Withdraw) செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். அதாவது உங்கள் அக்கவுண்டில் இருந்து எந்த பணத்தையும் பெறவோ அல்லது அனுப்பவோ முடியாது, ஆனால் உங்கள் பேடிஎம் அக்கவுண்ட்டில் நீங்கள் வைத்திருக்கும் பேலன்ஸ் பணத்தை நீங்கள் அணுகலாம் மற்றும் திரும்ப பெறலாம்.

பிப்.29-க்கு பின்னர் Paytm App-ல் இதெல்லாம் செய்ய முடியாது!

மேலும் பிப்ரவரி 29, 2024 க்கு பிறகு, கஸ்டமர் அக்கவுண்ட்ஸ், ப்ரீபெய்டு டூல்ஸ், வேலட்கள், ஃபாஸ்டாக்ஸ், NCMC கார்டுகள் போன்றவற்றில்.. வரவு வைக்கப்படும் வட்டி, கேஷ்பேக்குகள் அல்லது ரீஃபண்டுகளை தவிரத்து, டெபாசிட்கள் அல்லது கிரெடிட் பரிவர்த்தனைகள் அல்லது டாப் அப்கள் அனுமதிக்கப்படாது.

05. ஆர்பிஐ-யின் இந்த புதிய கட்டுப்பாடுகள் அனைத்துமே பேடிஎம்-ன் பேங்கிங் செயல்பாடுகளை குறிவைக்கிறது. இதன்கீழ் வெளி வங்கிகள் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளும் பாதிக்கப்படுமா என்பது குறித்து ஆர்பிஐ எதுவும் குறிப்பிடவில்லை. அதாவது, எக்ஸ்டர்னல் அக்கவுண்ட்டுடன் இணைக்கப்பட்டிருக்கும் வரை, பேடிஎம் ஆப் மூலம் யுபிஐ பேமெண்ட்களை செய்ய முடியும். இருப்பினும், பேடிஎம் வேலட் ஆனது பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க்கால் இயக்கப்படுகிறது என்பதால் பேடிஎம் வேலட்-ஐ உங்களால் பயன்படுத்த முடியாமலும் போகலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New rules and restrictions for using Paytm App after February 29 Here is What RBI Said
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X