Home
News

சார்.. இன்னும் முடியல! ஆன்லைன் சூதாட்டத்திற்கு ஆப்பு வைத்த கையோடு புதிய Online Gaming விதிமுறைகள் அறிவிப்பு!

ஆன்லைன் கேமிங் (Online Gaming) தொடர்பான புதிய விதிமுறைகளை தமிழ்நாடு அரசு நேற்று (ஏப்ரல் 24, திங்கள்கிழமை) வெளியிட்டது. ஆன்லைன் சூதாட்டத்தை (Online Gambling) தடை செய்வதற்கான தமிழ்நாடு அரசின் மசோதாவானது, ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலை பெற்ற பிறகு இந்த புதிய விதிமுறைகள் வந்துள்ளது!

நினைவூட்டும் வண்னம், ஆன்லைன் சூதாட்ட தடை சட்டமானது இந்த மாத தொடக்கத்தில் தமிழ்நாடு அரசாங்க அரசிதழில் வெளியிடப்பட்டது. இப்போது, ​​இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு சில புதிய ஆன்லைன் கேமிங் விதிமுறைகளை (New Online Gaming Rules) வகுத்து, அதையும் அரசிதழில் வெளியிட்டுள்ளது.

புதிய Online Gaming விதிமுறைகள்.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

அதன்படி, தமிழ்நாடு ஆன்லைன் கேமிங் கமிஷன் மற்றும் ஆன்லைன் கேமிங் ஒழுங்குமுறையின் (Tamil Nadu Online Gaming Commission and Online Gaming Regulation) புதிய ஆன்லைன் கேமிங் விதிகளானது 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 முதல் அமலுக்கு வந்துள்ளது.

புதிய விதிமுறைகளின் வழியாக, ஆன்லைன் கேம்களை வழங்கும் உள்ளூர் (Local) மற்றும் வெளிநாட்டு (Overseas) நிறுவனங்களின் பெயர்களை பதிவு (Register) செய்வது ஊக்குவிக்கப்படும். அந்நிறுவனங்கள் ஒரு மாதத்திற்குள் தமிழ்நாடு ஆன்லைன் கேமிங் கமிஷனில் (TN Online Gaming Commission) தங்களை பதிவு செய்ய வேண்டும்.

இதற்காக, தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் (Chennai) உள்ள தமிழ்நாடு ஆன்லைன் கேமிங் ஆணையத்தின் செயலரிடம் (Secretary of Tamil Nadu Online Gaming Authority) ரூ.1 லட்சம் செலுத்தி, தங்கள் நிறுவனத்தின் பெயர் பதிவு சான்றிதழுக்கான (Name Registration Certificate) விண்ணப்பத்தை பெறலாம்.

விண்ணப்பத்தை பெற்ற பிறகு ஆன்லைன் கேமிங் ஆணையத்தின் செயலாளர், குறிப்பிட்ட நிறுவனத்தின் பெயரை பதிவு செய்வதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் அல்லது விண்ணப்பத்தை பெற்ற 15 நாட்களுக்குள் அதை நிராகரிக்க வேண்டும். மேலும் நிராகரிப்பதற்கு முன், விண்ணப்பதாரருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும்.

ஒருவேளை தவறான தகவல் (False information) அளித்து சான்றிதழ் பெறப்பட்டால், அதற்கான சரியான விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் (Explanatory notice.) அனுப்பப்படும். அதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஆன்லைன் கேமிங் ஆப்ரேட்டர் (Online Gaming Operator) அதுகுறித்து 15 நாட்களுக்குள் கமிஷனுக்கு பதிலளிக்கவும் வேண்டும்.

மேலும் தமிழ்நாடு அரசானது இந்த கமிஷனுக்கு, 5 ஆண்டுகள் வரை அல்லது 70 வயது வரை பதவியில் இருக்கும் ஒரு தலைவரை (Chairman) நியமிக்கும். ஒருவரின் பதிவிக்காலம் முடிந்ததும், அதே பதவிக்கு அந்த நபர் மீண்டும் நியமிக்கப்பட மாட்டார் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
New Rules and Regulations Regarding Online Gaming Released By Tamil Nadu Government
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X