Home
News

புது ரூல்ஸ்.. ஜூலை 1 முதல் அமல்.. Aadhaar, PAN, ITR, SBI கார்டு, ICICI ATM சேவைகளில் முக்கிய மாற்றம்!

ஜூலை 2025 சில முக்கியமான மாற்றங்களை சந்திக்க போகிறது. ஏனென்றால் ஜூலை 1 தொடங்கி ஜூலை 31 ஆம் தேதிக்குள்.. ஆதார் (Aadhaar), பான் (PAN), ஐடிஆர் (ITR) என்று சுருக்கமாக அழைக்கப்படும் வருமான வரி தாக்கல் (Income Tax Return), எஸ்பிஐ (SBI) வங்கி கார்டு மற்றும் ஐசிஐசிஐ (ICICI) ஏடிஎம் என.. பல விஷயங்களில் புதிய விதிகள் (New Rules) மற்றும் புதிய மாற்றங்கள் (New Changes) அமலுக்கு வரவுள்ளன.

1. புதிய பான் கார்டுகளுக்கு ஆதார் சரிபார்ப்பு கட்டாயம்: 2025 ஜூலை 1 ஆம் தேதி முதல், புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் தனிநபர்கள், சிபிடிடி (CBDT) அறிமுகப்படுத்திய புதிய விதியின்படி, ஆதார் எண்ணை பெறுவதும், ஆதார் சரிபார்ப்புக்கு உட்படுவதும் கட்டாயமாகும்.

புது ரூல்ஸ்.. ஜூலை 1 முதல் அமல்!

இது டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் வரி இணக்கத்தை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டு அமலுக்கு வரும் புதிய விதியாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போது ஒரு ​​புதிய பான் கார்ட்டை விண்ணப்பிக்க - செல்லுபடியாகும் அடையாள அட்டை மற்றும் பிறப்புச் சான்றிதழ் இருந்தால் போதும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

2. ஐடிஆர் காலக்கெடு நீட்டிப்பு: சிபிடிடி ஆனது 2025-26 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி வருமானத்தை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை ஜூலை 31 ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. அதாவது சம்பளதாரர்கள் வருமானத்தை தாக்கல் செய்ய கூடுதலாக 46 நாட்கள் அவகாசம் கிடைக்கும் என்பதை இந்த நீட்டிப்பு குறிக்கிறது.

இருப்பினும், காலக்கெடுவை நெருங்கும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் ஒரே நேரத்தில் ஐடிஆர் ஃபைல் செய்வார்கள் என்பதால் வருமான வரி போர்ட்டலில் ஏற்படும் ஏதேனும் கோளாறுகள் ஏற்படலாம்; அது பாதிக்கலாம். ஆகையால் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை காத்திருப்பதற்குப பதிலாக, உடனடியாக செயல்முறையை தொடங்குவது நல்லது.

3. எஸ்பிஐ கார்டுகளில் விமான விபத்து காப்பீடு நிறுத்தம்: எஸ்பிஐ வங்கி ஆனது எஸ்பிஐ கார்டு பயன்படுத்தி விமான டிக்கெட்டுகள் வாங்கும்போது இலவச விமான விபத்து காப்பீட்டை வழங்குகிறது. இந்த காப்பீட்டு நன்மை முதன்மை அட்டைதாரருக்கு மட்டுமே பொருந்தும். ஜூலை 15 முதல், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரீமியம் கார்டுகளில் எஸ்பிஐ வங்கி இதை நிறுத்துகிறது.

இதனால், எஸ்பிஐ கார்டு எலைட், மைல்ஸ் எலைட் மற்றும் மைல்ஸ் பிரைம் போன்ற கார்டுகள் இனி ரூ.1 கோடி காப்பீட்டை வழங்காது. மேலும் எஸ்பிஐ கார்டு பிரைம் மற்றும் பல்ஸ் இல் உள்ள ரூ.50 லட்சம் காப்பீடும் திரும்ப பெறப்படும் என்றும் எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.

4. எச்டிஎப்சி வங்கி அதன் கிரெடிட் கார்டுகளுக்கான கட்டணங்களை திருத்துகிறது: ஜூலை 1 முதல், எச்டிஎப்சி வங்கி தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்களை திருத்துகிறது. வாடகை பரிவர்த்தனைகள் (பரிவர்த்தனை தொகையில் 1 சதவீதம்); மாதத்திற்கு ரூ.10,000க்கு மேல் ஆன்லைன் திறன் சார்ந்த கேமிங் செலவுகள் (மொத்த மாதாந்திர செலவில் 1 சதவீதம்) என கட்டணம் வசூலிக்கப்படும்.

மேலும் மாதத்திற்கு ரூ.50,000க்கு மேல் பயன்பாட்டு செலவுகள் (காப்பீட்டு பரிவர்த்தனைகள் தவிர) (மொத்த மாதாந்திர செலவில் 1 சதவீதம்); மாதத்திற்கு ரூ.10,000க்கு மேல் வாலட் ஏற்றுதல் பரிவர்த்தனைகளுக்கு ரூ.4,999 க்கு மேல் 1 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

5. ஐசிஐசிஐ வங்கி சேவை கட்டணங்களை மாற்றியமைக்க உள்ளது: ஐசிஐசிஐ வங்கி ஆனது அதன் பல தரப்பட்ட சேவை கட்டணங்களை (7 சேவைகளில் கட்டணங்களை) திருத்தியுள்ளது; இது ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது. முதலாவதாக - ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்களை ஐசிஐசி ஐவங்கி திருத்தியுள்ளது.

ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம்களுக்கு, ஒவ்வொரு மாதமும் முதல் ஐந்து நிதி பரிவர்த்தனைகள் இலவசமாகவே இருக்கும், அதன் பிறகு நடக்கும் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.23 வசூலிக்கப்படும்; ஐசிஐசிஐ வங்கியின் கீழ் நடக்கும் நிதி அல்லாத பரிவர்த்தனைகள் தொடர்ந்து இலவசமாகவே இருக்கும்.

இரண்டாவதாக - ஐசிஐசிஐ அல்லாத ஏடிஎம்களை பயன்படுத்தும்போது ஐசிஐசிஐ ​​வாடிக்கையாளர்கள் பெருநகரங்களில் மாதத்திற்கு மூன்று இலவச பரிவர்த்தனைகளையும், பெருநகரங்கள் அல்லாத இடங்களில் ஐந்து இலவச பரிவர்த்தனைகளையும் பெறுவார்கள், அதற்கு மேலான நிதி பரிவர்த்தனைக்கு ரூ.23 மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைக்கு ரூ.8.50 வசூலிக்கப்படும்.

மூன்றாவதாக - சர்வதேச ஏடிஎம்களில், பணம் எடுக்க ரூ.125, 3.5 சதவீத நாணய மாற்று கட்டணம் மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு ரூ.25 வசூலிக்கப்படும். நான்காவதாக - ஐஎம்பிஎஸ் (IMPS) என்று சுருக்கமாக அழைக்கப்படும் உடனடி பணம் செலுத்தும் சேவை (Immediate Payment Service) பரிமாற்றங்களுக்கான கட்டணங்களும் திருத்தப்பட்டுள்ளது.

புதிய ஐஎம்பிஎஸ் கட்டணங்கள் ஆனது பரிமாற்றப்பட்ட தொகையை பொறுத்து ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.2.5 முதல் ரூ.15 வரை இருக்கும். ஐந்தாவதாக - ஐசிஐசிஐ வங்கியானது அதன் கிளைகள் மற்றும் பண மறுசுழற்சி இயந்திரங்கள் (CRMs) வழியிலான பண பரிவர்த்தனைகளிலும் மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் வங்கியில் மாதத்திற்கு மூன்று இலவச பண பரிவர்த்தனைகளை பெறுவார்கள், அதன் பிறகு ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.150 வசூலிக்கப்படும்.

ஆறாவதாக - ஒரு மாதத்தில் ரூ.1 லட்சத்திற்கு மேல் ரொக்க வைப்புத்தொகைக்கு ரூ.150 அல்லது ரூ.1,000 க்கு ரூ.3.50 (எது அதிகமாக இருக்கிறதோ அது) கட்டணம் விதிக்கப்படும். மூன்றாம் தரப்பு ரொக்க வைப்புத்தொகைக்கான வரம்பு ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.25,000 ஆகவே உள்ளது.

ஏழாவதாக - ஐசிஐசிஐ வங்கி ஆனது ஒரு மாதத்திற்கு அதன் கிளைகளில் மூன்று முறை இலவசமாக பணம் எடுக்க அனுமதிக்கிறது. அதன் பிறகு, ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.150 கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். மேலும் ஒரு மாதத்தில் ரூ.1 லட்சத்திற்கு மேல் பணம் எடுப்பதற்கும் கட்டணம் விதிக்கப்படும். தேர்ட்-பார்ட்டி வித்ட்ராவல்களுக்கு - ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.25,000 என்கிற வரம்பையும் ஐசிஐசிஐ வங்கி நிர்ணயித்துள்ளது.

Best Mobiles in India

English summary
New Rules and Changes on Aadhaar PAN ITR SBI Card ICICI ATM Effect From July 1
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X