நவம்பர் மாதம் உஷார்.. அதிரடியாய் 6 முக்கிய மாற்றங்கள்.. பேங்க் பண பரிமாற்றம் முதல் GPay, PhonePe UPI வரை!
வழக்கத்தை விட இந்த 2024 நவம்பர் (2024 November) மாதமானது, புதிய விதிகள், புதிய கட்டுப்பாடுகள் மற்றும் புதிய வழிமுறைகளால் நிரம்பி வழிகிறது என்றே கூறலாம். எப்போது தீபாவளி முடியும் என்று காத்திருந்தது போல பல புதிய ரூல்ஸ் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. அப்படியாக நவம்பர் 1 ஆம் தேதி முதல் என்னென்ன மாற்றங்கள் அமலுக்கு வந்தன? இதோ விவரங்கள்:
1. புதிய உள்நாட்டு பணப் பரிமாற்ற விதி (Domestic Money Transfer Rule): ஆர்பிஐ (RBI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய ரிசர்வ் வங்கியானது புதிய உள்நாட்டு பணப் பரிமாற்ற (டிஎம்டி) கட்டமைப்பை நவம்பர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது. இதன்கீழ் பயனர்களுக்கு நிதி பரிமாற்றத்திற்கான பல டிஜிட்டல் விருப்பங்கள் அணுக கிடைக்கும். இதுதவிர்த்து தற்போதைய டிஎம்டி கட்டமைப்பில் பல்வேறு சேவைகளை எளிதாக்குவது குறித்தும் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது!

2. ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான புதிய விதி: ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்ய முன்பிருந்த 120 நாட்கள் தற்போது 60 நாட்கலாக குறைக்கப்பட்டுள்ளது. நவம்பர் 1 ஆம் தேதி முதல் 60 நாட்களுக்கு முன்னதாக மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
ஐஆர்சிடிசி அறிவித்துள்ள இந்த முன்பதிவுக்கான காலத்தில் ரயில் புறப்படும் நாள் சேர்க்கப்படாது. இது 2024 நவம்பர் 1 ஆம் தேதி முதல் தான் நடைமுறைக்கு வந்தது என்பதால் ஏற்கனவே தங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பயணிகளை இந்த விதி பாதிக்காது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
3. எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளுக்கான புதிய மாற்றங்கள்: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் துணை நிறுவனமான எஸ்பிஐ கார்டு (SBI Card) நவம்பர் 1 முதல் சில புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் கீழ் பாதுகாப்பற்ற எஸ்பிஐ கிரெடிட் கார்டுகள் விஷயத்தில், நிதிக் கட்டணங்கள் மாதத்திற்கு 3.75% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு பில்லிங் காலத்தில் யூட்டிலிட்டி பேமெண்ட்களின் மொத்தத் தொகை ரூ.50,000க்கு மேல் இருந்தால், 1% கட்டணம் விதிக்கப்படும். இருப்பினும் இந்த குறிப்பிட்ட மாற்றம் 2024 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி முதல் அல்ல, மாறாக 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.
4. ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுகளுக்கான புதிய மாற்றங்கள்: ஐசிஐசிஐ வங்கி அதன் கட்டண அமைப்பு மற்றும் கிரெடிட் கார்டு வெகுமதி திட்டத்தில் மாற்றங்களை செய்துள்ளது, இது இன்சூரன்ஸ், மளிகை பொருட்களை வாங்குதல், விமான நிலைய லவுஞ்ச் அணுகல், எரிபொருளுக்கான கூடுதல் கட்டண தள்ளுபடி மற்றும் தாமதமாக செலுத்தும் கட்டணங்கள் போன்ற சேவைகளை பாதிக்கிறது.
இருப்பினும் இதெல்லாம் நவம்பர் 1 முதல் அல்ல, நவம்பர் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். இப்போதைக்கு ஸ்பா பலன்கள் நிறுத்தப்பட்டுள்ளன; ரூ.100000-க்கு மேல் செலவழிப்பதற்காக எரிபொருளுக்கான கூடுதல் கட்டண தள்ளுபடியும் நிறுத்தப்பட்டுள்ளது; அரசாங்க பரிவர்த்தனைகளுக்கான ரிவார்ட் பாயிண்ட்கள் இனி கிடைக்காது; இனி வருடாந்திரக் கட்டணத்திற்கு செலவு வரம்பு இருக்கும்; மூன்றாம் நபர் மூலம் கல்விக் கட்டணத்தில் 1% கட்டணம் இருக்கும்.
5. டிராய்-ன் புதிய விதி: டிராய் என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமானதுவாடிக்கையாளர்களுக்கு வரும் போலி அழைப்புகள் மற்றும் போலியான மெசேஜ்களை (Fake Calls and Messages) நிறுத்துவதற்கான முயற்சிகள் நவம்பர் 1 முதல் தொடங்க வேண்டும் என்று ஜியோ, ஏர்டெல், விஐ ஆகிய நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது
6. யுபிஐ லைட் சேவையில் 3 மாற்றங்கள்: இந்திய ரிசர்வ் வங்கியானது யுபிஐ லைட் (UPI Lite) சேவை தொடர்பான 3 முக்கிய மாற்றங்களை நவம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வந்தது. முதல் மாற்றம் - யுபிஐ லைட்டின் பரிவர்த்தனை வரம்பு (UPI Lite Transaction Limit) ரூ.500 இல் இருந்து ரூ.1,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது மாற்றம் - யுபிஐ லைட் வாலட் வரம்பும் (UPI Lite Wallet Limit) ரூ.2,000 இல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. மூன்றாவது மாற்றம் - நவம்பர் 1 ஆம் தேதி முதல் யுபிஐ லைட் பேலன்ஸ் (UPI Lite Balance) ஆனது ஒரு குறிப்பிட்ட வரம்பிற்கு கீழே சென்றால், புதிய ஆட்டோ டாப்-அப் அம்சம் (Auto top-up feature) வழியாக யுபிஐ லைட்-ல் மீண்டும் பணம் சேர்க்கப்படும் அம்சம் அணுக கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications