Home
News

TRAI போட்ட போடு.. Airtel கஸ்டமர்கள் தலையில் புதிய இடி.. இனி 1GB கூட கிடையாது.. 2 திட்டங்களில் திடீர் மாற்றம்!

சுனில் பார்தி மிட்டல் தலைமையிலான பார்தி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனமானது, அதன் 2 ப்ரீபெய்ட் திட்டங்களின் நன்மைகளை திருத்தி, அவைகள் இனிமேல் எந்தவிதமான டேட்டா நன்மைகளையும் வழங்காதபடி செய்துள்ளது. அதென்ன திட்டங்கள்? முன்னதாக இந்த திட்டங்கள் என்னென்ன நன்மைகளை வழங்கின? இனிமேல் என்னென்ன நன்மைகளை வழங்கும்? இதோ விவரங்கள்:

ஏர்டெல் ப்ரீபெய்ட் சேவையின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ரூ.509 மற்றும் ரூ.1,999 ஆகிய 2 திட்டங்களும் இனிமேல் எந்த விதமான டேட்டா பலன்களையும் வழங்காது. மாறாக இவைகள் வெறுமனே வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை மட்டுமே வழங்கும். ரூ.509 மற்றும் ரூ.1,999 திட்டங்களின் திருத்தப்பட்ட நன்மைகள் ஏர்டெல் இணையதளத்திலும் அப்டேட் செய்யப்பட்டுள்ளன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

TRAI போட்ட போடு.. இனி 1GB கூட கிடையாது.. 2 Airtel திட்டங்களில் மாற்றம்

வாய்ஸ் கால் பலன்களை விரும்புவோரை இலக்காக கொண்டு ஸ்பெஷல் ஆன வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ்-ஒன்லி பிளான்களை வழங்க வேண்டும் என்கிற டிராய்-ன் (TRAI - Telecom Regulatory Authority of India) உத்தரவை தொடர்ந்து இந்த மாற்றம் வந்துள்ளது. ஏர்டெல் நிறுவனத்தை போலவே, முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோவும் அதன் வெளியோ பேக்குகளின் நன்மைகளை மாற்றியமைத்து வருவதாக கூறப்படுகிறது. அதுதொடர்பான விவரங்கள் வெளியானதும் அதை உடனுக்குடன் அப்டேட் செய்கிறோம்.

ஏர்டெல் ரூ.509 திட்டத்தின் புதிய நன்மைகள் (Airtel Rs 509 Prepaid Plan New Benefits): திருத்தப்படுவதற்கு முன்பாக ஏர்டெல் ரூ.509 திட்டத்தின் கீழ், 84 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ், 6 ஜிபி டேட்டா, ஒவ்வொரு நாளும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் எந்த நெட்வொர்க்குக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் ஆகிய நன்மைகள் கிடைத்தது

திருத்தத்திற்கு பிறகு, ரூ.509 திட்டத்தின் கீழ் தற்போது எந்த விதமான டேட்டா பலன்களும் இல்லை. இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் (மொத்தமாக) 900 எஸ்எம்எஸ்களை மட்டுமே வழங்குகிறது. ஆனால் 84 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டியில் எந்த மாற்றமும் இல்லை.

இந்த திட்டத்தின் கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை, ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் அணுகல், அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப் மற்றும் இலவச ஹலோ ட்யூன்ஸ் ஆகியவைகள் கிடைக்கும். ஒருவேளை உங்களுக்கு லாங் வேலிடிட்டி உடன் 6ஜிபி டேட்டா தேவைப்பட்டால், நீங்கள் ரூ.489 பேக்கை (Airtel Rs 489 Plan Details) ரீசார்ஜ் செய்யலாம். இது 77 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கேள் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 600 எஸ்எம்எஸ்கள் மற்றும் 6ஜிபி ஹைஸ்பீட் டேட்டாவை வழங்குகிறது.

ஏர்டெல் ரூ.1999 திட்டத்தின் புதிய நன்மைகள்(Airtel Rs 1999 Prepaid Plan New Benefits): திருத்தப்படுவதற்கு முன்பாக ஏர்டெல் ரூ.1,999 திட்டத்தின் கீழ், 365 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ், 24 ஜிபி டேட்டா, ஒவ்வொரு நாளும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் எந்த நெட்வொர்க்குக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் ஆகிய நன்மைகள் கிடைத்தது

திருத்தத்திற்கு பிறகு, ரூ.1,999 திட்டத்தின் கீழ் தற்போது எந்த விதமான டேட்டா பலன்களும் இல்லை. இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் (மொத்தமாக) 3600 எஸ்எம்எஸ்களை மட்டுமே வழங்குகிறது. ஆனால் 365 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டியில் எந்த மாற்றமும் இல்லை.

இந்த திட்டத்தின் கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை, ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் அணுகல், அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப் மற்றும் இலவச ஹலோ ட்யூன்ஸ் ஆகியவைகள் கிடைக்கும். இப்போதைக்கு இவ்வளவு நீளமான வேலிடிட்டி உடன் 24ஜிபி டேட்டாவை வழங்கும் எந்த திட்டமும் ​​ஏர்டெல் இணையதளத்தில் பட்டியலிடப்படவில்லை. ரூ.1,999 பேக்கை போன்ற நன்மையை வழங்கும் புதிய ஏர்டெல் பேக் அறிமுகம் செய்யப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Rule From TRAI No More Data Benefit in Airtel Rs 509 and Rs 1999 Prepaid Plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X