புது ரூல்ஸ்.. ஜூலை 20 முதல் அமல்.. பேலன்ஸ் இல்ல.. ஒரு வருடம் யூஸ் பண்ணல.. உடனே இதை பண்ணிடுங்க.. இல்லனா காலி!
ஒரு வருடத்திற்கும் மேலாக எந்த பரிவர்த்தனையும் மேற்கொள்ளாமலும், ஜீரோ பேலன்ஸ் மட்டுமே வைக்கப்பட்டிருந்தாலும் அந்த அக்கவுண்ட்கள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 30 நாட்களுக்கு முன்பாக தகவல் வழங்கப்படுகிறது. இந்த புதிய விதிகள் வரும் ஜூலை 20ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. செயலற்று இருக்கும் அக்கவுண்ட்களை சீரமைக்கும் நோக்குடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த எந்த வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும்? ஜூலை 20ஆம் தேதிக்கு பிறகு என்னென்ன நடக்கும்? உள்ளிட்ட முழு விவரங்களையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ ஆப்கள் பெரும்பாலான டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதால், அதை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அவ்வப்போது, கட்டுப்பாடுகளையும் விதிக்கிறது. அப்படி, ஆர்பிஐ மூலம் விதிகளை மீறியதாக பேடிஎம் நிறுவனத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால், பேடிஎம் யூசர்களின் எண்ணிக்கை குறைந்தது.

அதேபோல பேடிஎம் வாலெட் (Paytm Wallet) பயன்படுத்துவதையும், அதில் பேலன்ஸ் வைத்திருப்பதையும் யூசர்கள் தவிர்த்துவிட்டனர். சொல்லப்போனால், இந்த ஆர்பிஐ கட்டுப்பாடுகள் பேடிஎம் வாலெட்டில் பணம் டெபாசிட் செய்வதை மட்டுமே தடுக்கிறது. ஆனால், அதில் இருக்கும் பேலன்ஸ் தொகையை பயன்படுத்த எந்தவித கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை.
இருப்பினும், பேடிஎம் வாலெட் யூசர்கள் அதில் இருந்த பேலன்ஸ் தொகையை முழுவதும் எடுக்க தொடங்கிவிட்டனர். ஆகவே, லட்சக்கணக்கான வாலெட்டில்கள் இப்போது ஜீரோ பேலன்ஸில் இருக்கின்றன. அதேபோல எந்தவித பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ளாமலும் இருப்பதையும் பார்க்க முடிகிறது. இதனை சீரமைக்க பேடிஎம் நிறுவனம் ஒரு முடிவெடுத்துள்ளது.
ஆகவே, ஒரு வருடத்துக்கும் மேலாக எந்தவித பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ள பேடிஎம் வாலெட் அக்கவுண்ட்கள் மற்றும் ஜீரோ பேலன்ஸ் வைக்கப்பட்டிருக்கும் பேடிஎம் வாலெட் அக்கவுண்ட்கள் இனிமேல் மூடப்படும் என்று பேடிஎம் பேமெண்ட் பேங்க் லிமிடெட் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை ஜூலை 20ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கின்றன.

ஆகவே, ஜூலை 20ஆம் தேதியில் இருந்து அதற்கு முன்பு ஒரு வருடங்கள் பரிவர்த்தனை செய்யாத வாலெட்கள் மற்றும் ஜீரோ பேலன்ஸ் இருக்கும் வாலெட்கள் மூடப்படும். இந்த நடவடிக்கைக்கு 30 நாட்களுக்கு முன்னதாகவே பேடிஎம் வாலெட் யூசர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்றும் பேடிஎம் பேமெண்ட் பேங்க் லிமிடெட் தெரிவித்துள்ளது.
இதனால், ஜூன் 19ஆம் தேதியில் இருந்தே பல பேடிஎம் வாலெட் யூசர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கும். எனவே, பேடிஎம் வாலெட் யூசர்கள் தங்களது அக்கவுண்ட் மூடப்பட்டால் பதற்றமடைய வேண்டியதில்லை. ஒருவேளை அதற்கு முன்னதாகவே பேடிஎம் வாலெட்டை நீங்களே மூட வேண்டுமானால், பின்வரும் படிகளை பின்பற்றுங்கள்.
பேடிஎம் வாலெட்டை மூடுவது எப்படி? உங்களது பேடிஎம் ஆப்பை (Paytm App) ஓப்பன் செய்து கொள்ளுங்கள். இப்போது, பேடிஎம் பேமெண்ட் பேங்க் வாலெட் (Paytm Payments Bank Wallet) பக்கத்துக்கு செல்லுங்கள். அப்போது, நன்-ஆர்டர் கேள்விக்களுக்கு உதவி தேவை (Need help with non-order related queries) டேப் தோன்றும் அதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
இப்போது, எனது வாலட்டை மூட விரும்புகிறேன் (I want to close my Wallet) என்பதை தேர்ந்தெடுங்கள். அவ்வளவுதான் 2 வேலை நாட்களில் உங்களது பேடிஎம் வாலெட் மூடப்பட்டுவிடும். இந்த வாலெட்டை மூடுவதற்கு முன்பாக அதில் எந்தவித பேலன்ஸ் தொகையும் இல்லாமல் பார்த்துகொள்ளுங்கள். அப்படி இருந்தால், அதை வேறு வங்கிக்கு மாற்றி கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications