புதிய சிக்கலில் கேப், ஆட்டோ ட்ரைவர்கள்! இனி கேன்சல் பண்ணும் முன் 100 முறை யோசிக்கணும்!

|

மக்கள் பயணம் செய்ய ஆன்லைன் புக்கிங் வசதியை அதிகம் பயன்படுத்துகின்றனர். அதாவது முன்னணி நிறுவனங்களின் சில ஆப் வசதிகள் மூலம் ஆட்டோ, டாக்சி போன்றவற்றில் எளிமையாகப் பயணம் செய்கின்றனர் மக்கள்.

கால் டாக்சி அல்லது ஆட்டோ

கால் டாக்சி அல்லது ஆட்டோ

அதேபோல் பொது போக்குவரத்துக்களைப் பயன்படுத்துவோர் சில சமயங்களில், பொதுவாக அவசர சூழல்களில் கால் டாக்சி அல்லது ஆட்டோக்களில் பயணிக்க வேண்டிய கட்டாயம் நிச்சயம் ஏற்படும். அந்த சமயம் இதுபோன்ற ஆப் வசதிகளில் எளிமையாக டாக்சிகளை புக் செய்து பயணம் செய்யலாம்.

ரூ.10,600 க்கு இதுக்கு மேல வேற என்ன வேணும்? தட்டித்தூக்கும் புதிய HTC ஸ்மார்ட்போன்!ரூ.10,600 க்கு இதுக்கு மேல வேற என்ன வேணும்? தட்டித்தூக்கும் புதிய HTC ஸ்மார்ட்போன்!

புக்கிங் வசதி

புக்கிங் வசதி

குறிப்பாக இதுபோன்ற ஆன்லைன் புக்கிங் வசதி மூலம் நமக்கு தேவையான ஆட்டோ மற்றும் டாக்சிகளை தேர்ந்தெடுத்து அதற்கான பணத்தை ஆன்லைனில் மிக எளிமையாக செலுத்தியும் விடலாம். இந்நிலையில் தமிழகத்தில் முன்பதிவை ரத்து செய்யும் டாக்சி மற்றும் ஆட்டோ டிரைவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

5G போன் வாங்க ஆசையா? வெயிட் பண்ணுங்க: வருது தரமான நோக்கியா போன்.!5G போன் வாங்க ஆசையா? வெயிட் பண்ணுங்க: வருது தரமான நோக்கியா போன்.!

சிக்கல்களை சந்தித்து வந்திருக்கின்றனர்

அதாவது தமிழகத்தில் சமீப காலமாக ஆன்லைன் பயண விரும்பிகள் சில சிக்கல்களை சந்தித்து வந்திருக்கின்றனர். குறிப்பாக ஆன்லைன் மூலம் டாக்சி மற்றும் ஆட்டோவை புக் செய்த பிறகு அந்த குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல டிரைவர்கள் சிலர் மறுப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

WhatsApp சைலண்டா அறிமுகம் செய்த அம்சம்.. இனி கூகுள் மீட், ஜூம் மீட் எல்லாம் தேவையில்ல போல!WhatsApp சைலண்டா அறிமுகம் செய்த அம்சம்.. இனி கூகுள் மீட், ஜூம் மீட் எல்லாம் தேவையில்ல போல!

பிக்கப் பாய்ண்டிற்கு சரியாக வருவது

பிக்கப் பாய்ண்டிற்கு சரியாக வருவது

இதுதவிர டிரைவர்களே முன்பதிவை கேன்சல் செய்து விடுவதாகவும் மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். மேலும் ஆன்லைனில் புக்கிங் செய்யும்போது டிரைவர்கள் பிக்கப் புள்ளியிற்குச் சரியாக வருவது இல்லை எனவும் பொதுமக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

அவசரப்பட்டு 5G போன் வாங்காதீங்க.. எந்தெந்த போனில் எப்போது 5G கிடைக்கும்? சியோமி, விவோ, சாம்சங் லிஸ்ட்!அவசரப்பட்டு 5G போன் வாங்காதீங்க.. எந்தெந்த போனில் எப்போது 5G கிடைக்கும்? சியோமி, விவோ, சாம்சங் லிஸ்ட்!

போக்குவரத்து காவல்துறை

போக்குவரத்து காவல்துறை

இந்நிலையில் பொதுமக்கள் வைத்த குற்றச்சாட்டுகளை சரிசெய்ய போக்குவரத்து காவல்துறை களத்தில் இறங்கியுள்ளது. ஆதாவது மக்கள் ஆப்கள் (செயலி) மூலம் பயண முன்பதிவு செய்யும்போது கார்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் முன்பதிவுகளை ரத்து செய்தால் மோட்டர் வாகன சட்டம் 1999ன் பிரிவு 178(3) பி-யின் கீழ் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்மி விலையில் Samsung டிவிகளை வாங்க ஐடியா இருக்கா: அப்போ இந்த சிறப்பு விற்பனையை மிஸ் பண்ணாதீங்க.!கம்மி விலையில் Samsung டிவிகளை வாங்க ஐடியா இருக்கா: அப்போ இந்த சிறப்பு விற்பனையை மிஸ் பண்ணாதீங்க.!

ரூ.50 அபராதம்

அதேபோல் பயணிகளை ஏற்றிச் செல்ல மறுத்தால் சட்ட பிரிவு 178(3) ஏ-யின் கீழ் ரூ.50 அபராதம் விதிக்கப்படும் எனவும் போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அவசரப்பட்டியே குமாரு: Jio 5G ரீசார்ஜ் விலை மற்றும் வேகம் இதுதான்.. செக் பண்ணிட்டு 5ஜி போன் வாங்குங்க!அவசரப்பட்டியே குமாரு: Jio 5G ரீசார்ஜ் விலை மற்றும் வேகம் இதுதான்.. செக் பண்ணிட்டு 5ஜி போன் வாங்குங்க!

தலைவர் எஸ்.பாலசுப்ரமணியம்

தலைவர் எஸ்.பாலசுப்ரமணியம்

குறிப்பாக இந்த அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருவதாக சென்னை பெருநகர போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து பேசிய தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் செயல் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியம் மோட்டார் வாகன திருத்தச்சட்டம் 2019-ஐ அமல்படுத்தினால் தவறு செய்யும் ஓட்டுனர்களுக்கு அபராதம் விதிப்பது தவறு இல்லை.

BSNL 4G மற்றும் 5G அறிமுக தேதி உறுதியானது.! சூப்பர் பாஸ்ட் வேகத்திற்கு நீங்க ரெடியா.!BSNL 4G மற்றும் 5G அறிமுக தேதி உறுதியானது.! சூப்பர் பாஸ்ட் வேகத்திற்கு நீங்க ரெடியா.!

தவறு செய்யாத ஆட்டோ ஓட்டுனர்கள்

ஆனாலும் தவறு செய்யாத ஆட்டோ ஓட்டுனர்கள் பாதிக்கப்படக் கூடாது. ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
New rule for cab and auto drivers need to pay Rs 50 to Rs 500 fine for canceling the rides: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X