TRAI-யின் அதிரடி ஆணை! கப்சிப்னு ஒப்புக்கொண்ட Jio, Airtel.. இன்கம்மிங் கால்களுக்கான புதிய சட்டம் அமல்! இனிமேல்?
டிராய் (TRAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமானது, 2023 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி முதல் இன்கம்மிங் கால்கள் (Incoming Calls) தொடர்பான ஒரு புதிய சட்டம் (New Rule) அமலுக்கு வரும் என்று அறிவித்திருந்தது.
சொன்னபடியே, குறிப்பிட்ட சட்டம் நாட்டில் இன்றுமுதல் (மே.1, 2023) அமல்படுத்தப்பட்டுள்ளது. அதென்ன சட்டம்? இந்த சட்டத்தின் நோக்கம் என்ன? இந்த புதிய சட்டம் இந்தியாவில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் (Indian Telecom Operators), அதன் கீழ் உள்ள வாடிக்கையாளர்களுக்கும் பொருந்துமா? இதோ விவரங்கள்:

டிராய் அறிவித்துள்ள புதிய சட்டமானது முழுக்க-முழுக்க தெரியாத எண்களில் (Unknown Numbers) இருந்து தேவையற்ற அழைப்புகள் (Spam Calls) மற்றும் மெசேஜ்களுக்கு (Spam Messages) எதிரான ஒரு சட்டமாகும். மேலும் இந்த சட்டம் இந்தியாவில் உள்ள அனைத்து டெலிகாம் கம்பெனிகளுக்கும் பொருத்தும்.
இந்த புதிய விதியின்படி அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களுடைய கால் மற்றும் எஸ்எம்எஸ் (SMS) சேவைகளில் ஏஐ ஸ்பேம் ஃபில்டர்களை (AI Spam Filters) பயன்படுத்த வேண்டும். இதன் கீழ் ஃப்ராடு (Fraud) மற்றும் ஹராஸ்மென்ட்டில் (Harassment) இருந்து தத்தம் நுகர்வோர்களை பாதுகாக்க வேண்டும்.
ஏஐ ஸ்பேம் ஃபில்டர்ஸ் எப்படி வேலை செய்யும்? இந்த ஃபில்டர்கள் பல்வேறு ஆதாரங்களில் (Sources) இருந்து வரும் போலியான (Fake) அல்லது விளம்பர (Promotional) அழைப்புகள் மற்றும் மெசேஜ்களை அடையாளம் கண்டு தடுக்கும். இவ்வகை கால்கள் மற்றும் மெசேஜ்கள் ஆனது பெரும்பாலும் மோசடி செய்பவர்களாலும், பணம் திருடும் கும்பல்களாலும் பயன்படுத்தப்படுகிறது.
எந்தெந்த நிறுவனங்கள் எல்லாம் இந்த ஃபில்டர்களை பயன்படுத்த கட்டளையிடப்பட்டுள்ளன? ஏர்டெல் (Airtel), ஜியோ (Jio), வோடாபோன் ஐடியா (Vodafone Idea) மற்றும் பிஎஸ்என்எல் (BSNL) ஆகிய அனைத்துமே தங்கள் கால் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளில் ஏஐ ஸ்பேம் ஃபில்டர்களை பயன்படுத்த வேண்டும் என்று டிராய் ஆணையிட்டுள்ளது.
எந்தெந்த நிறுவனங்கள் இந்த ஆணையை ஒப்புக்கொண்டன? பாரதி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய இரண்டுமே ஏஐ ஃபில்டர் சேவையை செயல்படுத்த ஒப்புக்கொண்டுள்ளன. ஏர்டெல் இதை அதிகாரப்பூர்வ அறிக்கையின் வழியாக உறுதிப்படுத்தியுள்ளது. மறுகையில் உள்ள ஜியோ இந்த சேவையை கூடிய விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதவிர்த்து, போலி அழைப்புகள் மற்றும் மெசேஜ்களின் வழியாக ஏற்படும் சிக்கல்களை கட்டுப்படுத்த, ஸ்பேமர்கள் (Spammers) மற்றும் மோசடி செய்பவர்கள் (Fraudsters) அடிக்கடி பயன்படுத்தும் 10 இலக்க மொபைல் எண்களில், விளம்பர அழைப்புகளை நிகழ்த்துவதை நிறுத்துமாறு டெலிகாம் நிறுவனங்களை டிராய் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் காலர் ஐடி (Call ID) அம்சத்தை செயல்படுத்துமாறும் தொலைத்தொடர்பு நிறுவனங்களை இந்திய அரசாங்கம் கேட்டு கொண்டுள்ளது. இதன் கீழ் மொபைல் போன் ஸ்க்ரீன் வழியாக வாடிக்கையாளர்கள் தங்கள் புகைப்படம் மற்றும் பெயரை வெளிப்படுத்த வேண்டும்; தாங்கள் போலியானவர்கள் இல்லை என்பதை மற்றவர்களுக்கு உறுதிசெய்ய முடியும்.
காலர் ஐடி அம்சத்தில் ப்ரைவஸி சிக்கல்கள் (Privacy Problems) இருக்கலாம் என்பதால் ஏர்டெல் மற்றும் ஜியோ போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதை நடைமுறைப்படுத்த தயங்குகின்றன. இருப்பினும் காலர் ஐடி தொடர்பான விஷயங்கள் இன்னும் தெளிவாக பேசப்படவில்லை. தற்போதைக்கு, ஏஐ ஸ்பேம் ஃபில்டர்கள் மே 1 முதல் செயல்படுத்தப்படவேண்டும் என்பதே டிராயின் முக்கிய ஆணையாகும்!


Click it and Unblock the Notifications








