தண்ணீர்பாட்டில் விற்பனை: அம்பானியை பின்னுக்கு தள்ளிய ஷான்ஷன்- ஆசிய பணக்காரர் பட்டியலில் முதலிடம்!

|

Zhong Shanshan (ஜாங் ஷான்ஷன்) இவரது பெயர் பலரால் அறிந்திருக்கப்பட்டிருக்காது. Zhong Shanshan பெயர் பத்திரிக்கைகளிலும் அரிதாக மேற்கோள் காட்டப்பட்டிருக்கும். 66 வயதான Zhong Shanshan தனி ஓநாய் (Lone Wolf) என்று அழைக்கப்படுகிறார்.

Lone Wolf என்று அழைக்கப்படும் ஷான்ஷன்

Lone Wolf என்று அழைக்கப்படும் ஷான்ஷன்

ஜாங் ஷான்ஷன் ஒரு தனியார் பணக்காரராக கருதப்படுகிறார். இவர் அரசியல் மற்றும் கிளப்பி வணிகக் குழு அதாவது ஒரு குழு மற்றும் அமைப்பு சார்ந்த சக உறுப்பினர்களுடன் நட்பாக இருந்தாலும் வெளியாட்களுடன் தொடர்பில்லாமல் தனித்து நிற்கிறார். இதனால் இவர் Lone Wolf என்று அழைக்கப்படுகிறார்.

77.8 பில்லியன் டாலராக அதிகரிப்பு

77.8 பில்லியன் டாலராக அதிகரிப்பு

ஜாங் ஷான்ஷன் சீனாவிற்கு வெளியே பெரிதளவு பிரபலமடையாதவர். இதுகுறித்து ப்ளூம்பெர்க் வெளியிட்ட தகவலின்படி, ஷான்ஷனின் சொத்துமதிப்பு இந்தாண்டு 70.9 பில்லியன் டாலர் அதிகரித்து அவரது நிகர மதிப்பு 77.8 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இவர் இப்போது உலகின் 11 ஆவது பணக்காரராக உருவெடுத்துள்ளார்.

அம்பானியை பின்னுக்கு தள்ளிய ஷான்ஷன்

அம்பானியை பின்னுக்கு தள்ளிய ஷான்ஷன்

ஆசிய பணக்காரர் பட்டியலில் ஜாங் ஷான்ஷன் முதலிடத்தை பிடித்துள்ளார். இருப்பினும் அம்பானி பெரிதளவு பின்தங்கியிருக்கவில்லை அவரின் மதிப்பு 76.9 பில்லியன் டாலராக உள்ளது. ஜாங் ஷான்ஷன் பாட்டிலின் அடைக்கப்பட்ட தண்ணீர் தயாரிக்கும் நோங்ஃபு ஸ்பிரிங், பெய்ஜிங் வாண்டாய் மருந்தியல் நிறுவனம் என்ற இரண்டின் மூலம் வருவாயை அதிகரித்துள்ளார்.

நோங்ஃபு ஸ்பிரிங் நிறுவனம்

நோங்ஃபு ஸ்பிரிங் நிறுவனம்

பெய்ஜிங் வாண்டாய் மருந்தியல் நிறுவனம் தடுப்பூசிகள் மற்றும் ஹெபடைடிஸ் சோதனை கருவிகளை உருவாக்குகிறது. நோங்ஃபு ஸ்பிரிங் நிறுவனம் மூலம் ஜாங் ஷான்ஷன் 2019 ஆம் ஆண்டில் 3.5 பில்லியன் டாலர் வருவாயை பதிவு செய்துள்ளார். அதேபோல் பெய்ஜிங் வாண்டாய் நிறுவனத்தின் மூலம் 171 மில்லியன் டாலர் வருவாயை ஷான்ஷன் பதிவு செய்துள்ளார்.

அரிதாகவே பொதுவெளியில் தோன்றும் ஷான்ஷன்

அரிதாகவே பொதுவெளியில் தோன்றும் ஷான்ஷன்

2020 ஆம் ஆண்டு முதல் ஷான்ஷன் தனது நிறுவனங்களை பொதுவில் கொண்டு செல்ல தொடங்கியது முதல் அவர் நிகர மதிப்பு உயரத் தொடங்கியது. பெய்ஜிங் வாண்டாய் நிறுவனம் ஏப்ரல் மாதத்தில் பங்குச் சந்தைக்கு சென்றது. அதேபோல் செப்டம்பர் மாதத்தில் நோங்ஃபு ஸ்பிரிங் பங்கு சந்தைக்கு சென்றது. ஜாங் ஷான்ஷன் அரிதாகவே பொதுவில் தோன்றுவார், பத்திரிகைகளில் பேசுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
New Richest Person in Asia: 66 year old Zhong Shanshan Beats Mukesh Ambani

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X