போன்களுடன் வரும் செயலிகளை நீக்குவதற்கான வாய்ப்பு தரப்பட வேண்டும்: நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்.!
தற்போது சீனா மற்றும் தென கொரிய நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகின்றன. அதிலும் சீன நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதால் அதிக வரவேற்பு உள்ளன. இந்நிலையில் வெளிநாட்டுத் தயாரிப்பு மொபைல் போன்களுக்கு பல காட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதாவது தற்போது அடிக்கடி பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்த நிலையில் தான் மொபைல் போன் தயாரிப்பாளர்களுக்கு புதிய காட்டுப்பாடுகள் விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி மொபைல் போன்களுடன் வரும் செயலிகளை நீக்குவதற்கான வாய்ப்பு தரப்பட வேண்டும் என்றும், இயங்குதளங்களை புதுப்பிக்கும்போது, அரசு அரசுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

தற்போது நாட்டின் மொபைல் போன் சந்தை பங்களிப்பில் சியோமி, விவோ, ஒப்போ உள்ளிட்ட சீன தயாரிப்புகள் 56 சதவீதமாக உள்ளது. அதன்பின்பு சாம்சங் நிறுவனம் 20 சதவீத சந்தையைப் பிடித்துள்ளது. மேலும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் நிறுவனம் 3 சதவீதம் சந்தையை வைத்துள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக தற்போது சீன மொபைல் போன்களை பயன்படுத்தும் நம் நாட்டை சேர்ந்த பயனாளர்களின் தகவல்கள் திருடப்படுதவதக புகார்கள் தொடர்ந்து வருகின்றன. மேலும் உலகம் முழுவதும் இதுபோன்ற புகார்கள் அதிகம் உள்ளன. அதேபோல் கடந்த 2020-ம் ஆண்டு கிழக்கு லடாக்கில் சீன ராணுவம் ஊடுருவ முயன்றது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காகச் சீனாவை சேர்ந்த 300-க்கு அதிகமான மொபைல் ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது.

இதுதவிர நமது நாட்டில் சீன நிறுவனங்களின் முதலீடுகளும் கண்காணிப்புக்குள் வந்தன. அதன்பின்பு கூட நம் நாட்டின் சேர்ந்த பயனாளர்களின் தகவல்கள் தொடர்ந்து திருடப்பட்டு வருவதாகப் புகார்கள் எழுந்து உள்ளன. இந்நிலையில் தான் வெளி நாட்டு தயாரிப்பு மொபைல்போன்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
மேலும் இது தொடர்பாக வெளிநாட்டு மொபைல்போன் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து மொபைல் போன் விற்பனைக்கான பல கட்டுப்பாடுகள் விதிப்பதற்கான விதிமுறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இது குறித்து தகவல் தொழில்நுட்ப துறை உயரதிகாரிகள் கூறியது என்னவென்றால்,
தற்போது ஸ்மார்ட்போன்களுடன் சில ஆப்ஸ்கள் முன்பதிவிறக்கம் செய்யப்பட்டு வருகின்றன. இவற்றை நீக்க முடியாது. இது பாதுகாப்பு அச்சுறுத்தலாக அமைய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது போன்ற ஆப்ஸ்களை நீக்குவதற்கு வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும். இதுதவிர இயங்குதளங்களைப் புதுப்பிக்கும்போது, இதுகுறித்து மத்திய அரசுக்கு உரியத் தகவல் தெரிவித்து அனுமதி பெறவேண்டும்.

அதேபோல் புதிய போன்களை அறிமுகம் செய்யும்போது, இந்த நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பது இந்திய தரக் கட்டுப்பாடு அமைப்பின் ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்பட்டு, சரியான சான்றிதழ் பெற வேண்டும். மொபைல்போன் பயனர்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கு வேண்டி இந்த புதிய கட்டுப்பாடுகள் அறிமுகம் செய்ய்பட திட்டமிடப்பட்டுள்ளது என அந்த உயரதிகாரிகள் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications








