அரசு பேருந்து: செல்போனில் சத்தமாக பேச பயணியருக்கு தடை? காரணம் என்ன?

|

இப்போது உள்ள அதிநவீன செல்போன்கள் நமது தினசரி வேலைகளை எளிமையாக்குகிறது என்றே கூறலாம். குறிப்பாக வங்கி சேவை முதல் பிடித்த உணவை வாங்குவது வரை அனைத்திற்கு இந்த செல்போன்கள் அதிகளவில் பயன்படுகிறது. இந்நிலையில் இயர்போன் பயன்படுத்தாமல் பேச, பாடல்களை கேட்க மற்றும் வீடியோ கேம் விளையாட கட்டுப்பாடுகள் விதிப்பது பற்றி தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.

 போக்குவரத்து துறைக்கு வந்த புகார்கள்

போக்குவரத்து துறைக்கு வந்த புகார்கள்

சில நேரங்களில் இந்த செல்போன் மூலம் அதிக நன்மைகள் இருந்தாலும், ஒருசில நேரங்களில் செல்போனால் நாம் மட்டுமின்றி, மற்றவர்களும் பாதிக்கப்படும்அபாயமும் உள்ளது என்றே கூறலாம். குறிப்பாக பொது இடங்களில் இந்த செல்போனால் பெரும்பாலானவர்கள் பாதிக்கப்படுவதை நாம் அன்றாடம் எளிமையாக பார்க்க முடிகிறது.

தமிழக பேருந்துகளில் Gpay மூலம் டிக்கெட் எடுக்கலாமா? விரைவில் இ-டிக்கெட் & இலவச ஸ்மார்ட் கார்டு வசதி.!தமிழக பேருந்துகளில் Gpay மூலம் டிக்கெட் எடுக்கலாமா? விரைவில் இ-டிக்கெட் & இலவச ஸ்மார்ட் கார்டு வசதி.!

கர்நாடக மாநிலத்தில் தடை

கர்நாடக மாநிலத்தில் தடை

அதுவும் தற்போது தமிழக பஸ்களில் பயணிப்போருக்கு இடையூறாக, சக பயணியர் சத்தமாக செல்போனில் பேசுவது, பாடல் கேட்பது, வீடியோ கேம் விளையாடவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும் சக பயணியருக்கு தொந்தரவு செய்யும் செயல்களுக்கு கர்நாடக மாநிலத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை பின்பற்றி தமிழக பேருந்துகளிலும் செல்போனில் சத்தமாக பேச தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வந்துள்ளது.

கடந்த வாரம் டிரெண்டிங்கான ஸ்மார்ட்போன்கள்: புது ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டால் இதை வாங்கலாம்!கடந்த வாரம் டிரெண்டிங்கான ஸ்மார்ட்போன்கள்: புது ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டால் இதை வாங்கலாம்!

 சமூக ஆர்வலர்கள்

சமூக ஆர்வலர்கள்

அதாவது தமிழக பேருந்துகளில் பயணிக்கும்போது சில பயணிகள் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படும் அளவில் கைப்பேசி பயன்பாடு அதிகரித்துவருவதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் நுகர்வோர் அமைப்புகளிடமிருந்து போக்குவரத்து துறைக்கு புகார்கள் வந்தன.

ஒட்டுமொத்த வாட்ஸ்அப் அனுபவத்தை மாற்ற போகும் 'அந்த' அம்சம்.. இது வந்தால் வேற லெவல்ல இருக்கும்..ஒட்டுமொத்த வாட்ஸ்அப் அனுபவத்தை மாற்ற போகும் 'அந்த' அம்சம்.. இது வந்தால் வேற லெவல்ல இருக்கும்..

சென்னை மாநகர போக்குவரத்து கழகம்

சென்னை மாநகர போக்குவரத்து கழகம்

சமீபத்தில் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி திருப்பூரைச் சேர்ந்த ஒருவர், சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மற்றும் போக்குவரத்து துறை கூடுதல் செயலருக்கு கடிதம் எழுதினார். இதனை தொடர்ந்து பயணிகள் அரசுப் பேருந்தில் பயணிக்கும்போது செல்போன் பயன்பாடுகளுக்குசில கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆன்லைனில் ஆர்டர் செய்த மொபைல் போன் டெலிவரி: பார்சலை பிரித்து பார்த்ததும் மிரண்டு போன நபர்- இது ரொம்ப ஓவர்!ஆன்லைனில் ஆர்டர் செய்த மொபைல் போன் டெலிவரி: பார்சலை பிரித்து பார்த்ததும் மிரண்டு போன நபர்- இது ரொம்ப ஓவர்!

 ஆந்திரா-ஏசிபி 14400

ஆந்திரா-ஏசிபி 14400

அதேபோல் சமீபத்தில் ஆந்திராவில் ஊழல் தொடர்பான புகார்களை தெரிவிக்க ஏசிபி 14400 (Anti-Corruption Bureau (ACB)) என்ற மொபைல்போன் செயலியை அம்மாநில லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் அறிமுகம் செய்துள்ளனர். மேலும் இது சார்ந்த தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

 ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி

அதாவது 'ஏசிபி 14400' (ACB 14400) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயலியை தடேப்பள்ளியில் உள்ள முகாம் அலுவலகத்தில் இருந்து, ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார். இந்த ஏசிபி 14400 என்ற மொபைல்போன் செயலியை பதிவிறக்கம் செய்த உடன், மொபைல்நம்பரை உறுதி செய்ய, ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் அனுப்பப்படும். அதன்பின்பு இந்த செயலியை இன்ஸ்டால் செய்தவுடன்இதில் நேரடி புகார் மற்றும் புகாரை பதிவு செய்தல் என்று இரண்டு வாய்ப்புகள் வழங்கப்படும்.

 புகாரை ஆய்வு செய்து நடவடிக்கை

புகாரை ஆய்வு செய்து நடவடிக்கை

நேரடி புகார் பிரிவில், லஞ்சம் கொடுப்பதை நேரடியாக புகைப்படமாக பதிவு செய்தல், ஆடியோ மற்றும் வீடியோ பதிவு செய்திடவும் முடியும். அடுத்து உள்ள 'புகாரைபதிவு செய்தல்' பிரிவில், லஞ்சம் குறித்த புகாரை பதிவு செய்து அது குறித்து தங்களிடம் உள்ள ஆவணங்கள், வீடியோ மற்றும் ஆடியோவை பதிவு செய்து அனுப்ப முடியும். நீங்கள் புகாரை அனுப்பிய உடன், அதற்கான பதிவு எண் அனுப்பப்படும். அதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் புகாரை ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைஎடுப்பார்கள். மேலும் இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளமுடியும். குறிப்பாக இதுபோன்ற செயலிகள் மிகவும் பயனுள்ள
வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

Best Mobiles in India

English summary
New restriction for passengers to talk loudly on cell phone on government buses: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X