Home
News

IRCTC புதிய ரிசர்வேஷன் ரூல்ஸ்.. ரயில் டிக்கெட் புக்கிங் செய்யும் நேரத்தில் திடீர் மாற்றம்.. இனிமேல்?

ஐஆர்சிடிசி (IRCTC) என்கிற இந்திய ரயில்வே கேட்டரிங் & சுற்றுலா கார்ப்பரேஷன் லிமிடெட் (Indian Railway Catering & Tourism Corporation Ltd) ஆனது ரயில் டிக்கெட் புக்கிங் (Train Ticket Booking) தொடர்பான முக்கிய மாற்றத்தை அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

2026 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள இந்த மாற்றத்தின் கீழ், அட்வான்ஸ் ரிசர்வேஷன் பீரியட் (Advance Reservation Period) தொடங்கும் நாளில், ஆதார் அங்கீகாரம் பெற்ற பயனர்களுக்கான டிக்கெட் முன்பதிவு நேத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

IRCTC புதிய ரிசர்வேஷன் ரூல்ஸ்.. இனிமேல்?

இதுகுறித்து ஐஆர்சிடிசி வெளியிட்ட ஒரு அறிக்கையில், ஜனவரி 5, 2026 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், ஆதார் அங்கீகாரம் பெற்ற பயனர்களுக்கான டிக்கெட் முன்பதிவு சாளரம் ஆனது முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் முன்பதிவு திறக்கப்பட்ட முதல் நாளில் காலை 08:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை நீட்டிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

நினைவூட்டும் வண்ணம் கடந்த 2026 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதி வரையிலாக, ஆதார் அங்கீகாரம் பெற்ற பயனர்கள் முன்பதிவு சாளரத்தின் முதல் நாளில் காலை 08:00 மணி முதல் பிற்பகல் 12:00 மணி வரை மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டார்கள்.

கடந்த ஆண்டு, பொது முன்பதிவுகள் திறக்கப்பட்ட முதல் 15 நிமிடங்களில் ஐஆர்சிடிசி வலைத்தளம் அல்லது ஆப் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பை (Aadhaar Verification) தேசிய போக்குவரத்து நிறுவனம் முதன்முதலில் கட்டாயம் ஆக்கி இருந்ததும்,கணினிமயமாக்கப்பட்ட பிஆர்எஸ் (PRS) கவுண்டர்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் நடைமுறையில் எந்த மாற்றமும் இருக்காது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

சார்ட் ப்ரீபரேஷன் டைம் (Chart preparation time) குறித்து இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள சமீபத்திய வழிகாட்டுதல்களின்படி, 05:01 மணி முதல் 2:00 மணி வரை புறப்படும் ரயில்களுக்கு, முதல் ரிசர்வேஷன் சார்ட் ஆனது முந்தைய நாளில் 20:00 மணி நேரத்திற்குள் தயாரிக்கப்படும் என்பதை பயணிகள் கவனிக்க வேண்டும்.

இதற்கிடையில், 2:01 மணி முதல் 23:59 மணி வரை புறப்படும் நேரங்களை கொண்ட ரயில்களுக்கும், 00:00 மணி முதல் 05:00 மணி வரை புறப்படும் ரயில்களுக்கும், முதல் ரிசர்வேஷன் சார்ட் குறைந்தது 10 மணி நேரத்திற்கு முன்பே தயாரிக்கப்படும் என்றும் இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

ஆதார் தொடர்பான மற்ற முக்கிய மாற்றங்களை பொருத்தக்கரை, கட்டாய பான்-ஆதார் இணைப்பிற்கான காலக்கெடு (2025 ஆம் ஆண்டு டிசம்பர் 31) முடிந்து விட்டது. உங்கள் பான் மற்றும் ஆதாரை இன்னும் இணைக்கவில்லை என்றால், வங்கி மற்றும் அரசு சேவைகளில் சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

கணக்கு முடக்கம் மற்றும் சேவை தடைகளை தவிர்க்க இந்த இணைப்பு கட்டாயமாகும். இதை செய்யாத பட்சத்தில் - வரி தாக்கல், பணத்தை திரும்ப பெறுதல் மற்றும் முக்கிய வங்கி சேவைகளுக்கான அணுகல்கள் பாதிக்கப்படும். இதேபோல் வரி செலுத்துவோர்கள் ஜனவரி 2026 முதல் புதுப்பிக்கப்பட்ட வருமான வரி ரிட்டர்ன் (ஐடிஆர்) படிவத்தையும் எதிர்பார்க்கலாம்.

இது வங்கி மற்றும் செலவு விவரங்களுடன் முன்பே நிரப்பப்படும். இந்த நடவடிக்கை தாக்கல் செயல்முறையை எளிதாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது, அதே நேரத்தில் பிழைகள் மற்றும் குறைபாடுகளைக் குறைக்க ஆய்வுகளை அதிகரிப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது. கடைசியாக வங்கிகள் ஆனது யுபிஐ பரிவர்த்தனைகளில் கடுமையான சோதனைகளையும், வாட்ஸ்அப் (WhatsApp) மற்றும் டெலிகிராம் (Telegram) போன்ற மெசேஜிங் பிளாட்ஃபார்ம் ஆப்களுக்கான மிகவும் வலுவான சிம் சரிபார்ப்பு சரிபார்ப்பு விதிமுறைகளையும் செயல்படுத்தும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Reservation Rules From IRCTC Ticket booking Time For Aadhaar Authenticated Users Changed
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X