Home
News

பாவம் BSNL கஸ்டமர்ஸ்! அடுத்த 10 மாசம்னா தாங்க முடியாது.. மனச தேத்திகிட்டு புது கோரிக்கை வைத்த BSNL ஊழியர்கள்!

வழக்கமாக பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் தான், "அது சரி இல்லை.. இது சரி இல்லை!" என்று புகார்களையும், கோரிக்கைகளையும் முன்வைப்பார்கள். ஆனால் இம்முறை சற்றே வித்தியாசமாக பிஎஸ்என்எல் ஊழியர்களே ஒரு கோரிக்கையை முன்வைத்து உள்ளனர்; அதுவும் வழக்கத்திற்கு மாறான ஒரு கோரிக்கை!

அதென்ன கோரிக்கை? பிஎஸ்என்எல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் ஆனது டிசிஎஸ் என்று சுருக்கமாக அழைக்கப்படும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் வழங்கும் உள்நாட்டு தொழில்நுட்பம் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்பதால், அதன் பான்-இந்தியா அடிப்படையிலான 4ஜி சேவையை "உடனே" அறிமுகப்படுத்த முடியவில்லை.

மனச தேத்திகிட்டு புது கோரிக்கை வைத்த BSNL ஊழியர்கள்!

நேற்று வரையிலாக.. "எப்போது 4ஜி அறிமுகமாகும்?" என்று பிஎஸ்என்எல் அதிகாரிகளிடம் கேட்கும் போதெல்லாம்.. "அது விரைவில் அறிமுகமாக போவதில்லை" என்கிற பதிலே கிடைத்தது. ஆனால் தற்போது பிஎஸ்என்எல் 4ஜி-க்கான தொழில்நுட்பம் எந்த கட்டத்தில் உள்ளது? அது சரியாக எப்போது அறிமுகமாகும்? என்று தகவல் வெளியாகி பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களை மட்டுமின்றி.. பிஎஸ்என்எல் ஊழியர்களையே கடுப்பாக்கி உள்ளது!

பிஎஸ்என்எல் நிறுவனம் ஊழியர் சங்கத்திற்கு அனுப்பிய கடிதத்தில், 4ஜி அறிமுகமானது 2024 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் தொடங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற தகவலின்படி, இந்த வார்த்தைகள் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆன பிகே பூர்வாரிடம் இருந்து வந்துள்ளன.

மனச தேத்திகிட்டு புது கோரிக்கை வைத்த BSNL ஊழியர்கள்!

ஊழியர் சங்கத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், நிறுவனத்திற்கான 4ஜி தொழில்நுட்பத்தின் கள சோதனைகள் (டிசிஎஸ் மூலம்) இன்றுவரை கூட முடிக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதெல்லாம் பார்த்து கடுப்பான பிஎஸ்என்எல் ஊழியர்கள், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வழக்கத்திற்கு மாறான ஒரு கோரிக்கையை வைக்க பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் வைத்துள்ளனர்.

தனியார் டெலிகாம் நிறுவனமான வோடாபோன் ஐடியா (Vodafone Idea - Vi) ஆனது இந்திய அரசாங்கத்தின் மிகப்பெரிய பங்குதாரராக இருப்பதால், பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு 4ஜி சேவைகளை வழங்க வோடபோன் ஐடியா நிறுவனத்தின் 4ஜி நெட்வொர்க்கை பயன்படுத்துமாறு பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஊழியர் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மனச தேத்திகிட்டு புது கோரிக்கை வைத்த BSNL ஊழியர்கள்!

பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் இந்த கோரிக்கை எவ்வளவு பயனற்றதாக இருக்கும் என்பது ஒருபக்கம் இருக்க, இது அரசு நடத்தும் தொலைத்தொடர்பு ஆபரேட்டரின் ஊழியர்களின் அவநம்பிக்கையை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. அரசாங்கம் விரும்பினாலும், பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்க வோடாபோனின் 4ஜி திறனை பயன்படுத்துவதில் எந்த அர்த்தமும் இருக்காது என்பது இன்னொரு கசப்பான உண்மை.

வோடபோன் ஐடியா ஒரு பொது நிறுவனம் என்பதால், அதன் பங்குதாரர்களோ அல்லது வாரியமோ ஒருபோதும் முடிவு எடுக்க முடியாது. அதாவது அரசாங்கமோ அல்லது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஊழியர் சங்கமோ எந்த முடிவும் எடுக்க முடியாது. 4ஜி இல்லாததால், பிஎஸ்என்எல் நிறுவனமானது தனியார் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களிடம் தனது வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது.

ஆகையால் தான் பிஎஸ்என்எல் நிறுவனமானது எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரமாக 4ஜி மற்றும் 5ஜி சேவைகளை அறிமுகம் செய்ய வேண்டுமென்று பார்க்கிறது. இது தான் - குறுகிய காலத்தில் பிஎஸ்என்எல் நெட்வொர்க்குகளிலிருந்து வாடிக்கையாளர்கள் வெளியேறுவதை தடுக்க இருக்கும் ஒரே வழியாகும்.

டிராய் (TRAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (Telecom Regulatory Authority of India) தரவுகளின்படி, பிஎஸ்என்எல் நிறுவனம் ஆகஸ்ட் 2023 இல் 22,20,654 சந்தாதாரர்களையும், 2023 செப்டம்பரில் 23,26,751 வாடிக்கையாளர்களையும் இழந்துள்ளது.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க பிஎஸ்என்எல் புத்துயிர் பெற்றுள்ளதாகவும், 4ஜி சேவையில் பயன்படுத்தும் அதே கருவியை பயன்படுத்தி 5ஜி சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது

மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் (Union Telecom Minister) ஆன அஷ்வினி வைஷ்ணவ் (Ashwini Vaishnaw) சொன்ன இந்த தகவல் பிஎஸ்என்எல் பயனர்களை, வாடிக்கையாளர்களை வேண்டுமானால் குஷிப்படுத்தும் ஆனால் உள்ளே என்ன நடக்கிறது என்பதை நன்கு அறிந்த பிஎஸ்என்எல் ஊழியர்களை ஒருபோதும் குஷிப்படுத்தாது என்பதற்கு அவர்களின் கோரிக்கையை எடுத்துக்காட்டு!

Best Mobiles in India

English summary
New Request From BSNL Employees After Pan India BSNL 4G Launch Delayed to December 2024
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X