ஜியோ டேட்டா பிளான்களில் ரூ.4 அதிகரிப்பு! முக்கியமான பிளான்களில் அதிரடி மாற்றம்! எந்த பிளான்கள்?
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனமானது, ஜியோ ப்ரீபெய்ட் டேட்டா பிளான்களில் (Jio Prepaid Data Plans) சில அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. முக்கியமான 2 டேட்டா திட்டங்களில் ரூ.4 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
சமீப கலமாக, முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தலைமையிலான ஜியோ (Jio) நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. முன்னதாக, ஜியோ பாரத் போன் (Jio Bharat phone) மற்றும் ஜியோ பாரத் பிளான் (Jio Bharat Plan) ஆகிய முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

இதில் ஜியோ பாரத் பிளானின் கீழ் எந்தவொரு டெலிகாம் நிறுவனங்களும் வழங்க முடியாத மலிவான விலையில், மாதாந்திர மற்றும் வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இது மிகப்பெரும் வரவேற்பை பெற்று வரும் வேளையில், இப்போது ப்ரீபெய்ட் டேட்டா பிளான்களில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.
ஜியோ டேட்டா பிளான்களில் மிகவும் பிரபலமான ரூ.15 டேட்டா பிளான் (Jio Rs 15 Data Pack) மற்றும் ரூ.25 டேட்டா பிளான் (Jio Rs 25 Data Pack) இரண்டிலும் ரூ.4 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், நீங்கள் நினைப்பது போல, விலை மட்டும் உயர்த்தப்படவில்லை. அதோடு டேட்டா சலுகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த டேட்டா திட்டங்கள் முறையே 1 ஜிபி மற்றும் 2 ஜிபி டேட்டாக்களை வழங்கியது. இந்த பிளான்களுக்கு அடுத்து, ரூ.61 விலையில் மட்டுமே அடுத்த டேட்டா பிளான் வருகிறது. இதனால், ரூ. 30 அல்லது ரூ. 40 போன்ற விலைகளில் புதிய டேட்டா பிளான்களை கொண்டுவர வேண்டும் என்று ஜியோ வாடிக்கையாளர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
அதனடிப்படையில், புதிதாக ரூ.19 மற்றும் ரூ.29 விலையில் டேட்டா பிளான்கள், இப்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், பழைய ரூ.15 மற்றும் ரூ.25 பிளான்கள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்று தெரிகிறது. ஆனால், வரும் காலங்களில் அவை நீக்கப்படவும் வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் புதிய பிளான்களில் எவ்வளவு டேட்டா கூடுதலாக கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
ஜியோ ரூ.19 டேட்டா பிளான் (Jio Rs 19 Data Plan): இந்த புதிய ப்ரீபெய்ட் பிளானில் ரூ.19 ரீசார்ஜ் செய்தால் 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும். இப்போது, நடைமுறையில் இருக்கும் ஜியோ பிளானின் வேலிடிட்டி நாட்கள் வரையில் இந்த டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது, பழைய ரூ.15 பிளானில் கூடுதலாக ரூ.4 செலுத்தி 500 எம்பி டேட்டா பெற்றுக்கொள்ள முடிகிறது.
ஜியோ ரூ.29 டேட்டா பிளான் (Jio Rs 19 Data Plan): இந்த பிளானில் ரூ.29 ரீசார்ஜ் செய்தால், 2.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதுவும் பழைய ரூ.25 டேட்டா பிளானில் கூடுதலாக ரூ.4 செலுத்தி 500 எம்பி டேட்டாவை பெறுவது போலவே இருக்கிறது. இந்த டேட்டாவையும் உங்களது நடைமுறையில் இருக்கும் ஜியோ பிளானின் வேலிடிட்டி நாட்கள் வரையில் பயன்படுத்திக்கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications








