கல்லூரி ஆன்லைன் வகுப்பில் புதிய விதிமுறைகள் வருமா? ஏழு பேர் கொண்ட குழு: தமிழக அரசு அதிரடி.!
அண்மையில் ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்கு தொந்தரவு கொடுத்த புகாரில் பத்ம சேஷாத்திரி பாலபவன் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் ஆன்லைன் வகுப்பில் அரை நிர்வாணத்துடன் தோன்றி ஆபாசமாக நடந்து கொண்டர் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக இவர் 5 ஆண்டுகளுக்கு மேலாக பல மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் தொந்தரவு கொடுத்து வந்ததாக அவரே வாக்கு மூலம்
அளித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தமிழகம் முழுவதும் இவருக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர் மக்கள்.

இதை தொடர்ந்து பள்ளி மாணவர்களை பாதுகாக்கும் வகையில் ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வரும் 7-ம் தேதி வெளியிடப் போவதாக தகவல் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் கல்லூரிகளுக்கும் ஆன்லைன் வகுப்புகளுக்கான நெறிமுறைகளை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

வெளிவந்த தகவலின் அடிப்படையில், இதற்காக கல்லூரி கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் தலைமையில் ஏழு பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், கல்லூரிக்கு செல்வதை போலவே ஆன்லைன் வகுப்புக்கும் உடை கட்டுப்பாட்டை அமல்படுத்த இந்த குழு பரிந்துரைக்கும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

அதேபோல் ஆன்லைன் வகுப்புகளை முழுமையாக பதிவு செய்வது, அனைத்து புகார் பிரிவை உருவாக்குவது, இணைய வசதியை வேகப்படுத்துவது உள்ளிட பரிந்துரைகளும் இதில் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக வரும் 11-ம் தேதி அரசிடம் வரைவு அறிக்கை சமர்பிக்கபட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா., உலகின் பல்வேறு நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இதில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு
நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் பிரதான ஒன்றாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களுக்குள் நுழையும் வெளியேறவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

கொரோனா கட்டுப்படுத்துவதில் பிரதான நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதில் பள்ளிகள், கல்லூரிகள்
செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது. இருப்பினும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க பல்வேறு பள்ளி கல்லூரிகளில்ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications