Home
News

ஏலே ஏம்லே இப்படி பண்றீங்க.. ஏர்டெல் பயனர்கள் Redmi A4 5G வாங்கும் முன் இதை கவனிங்க.. ஏன்?

ரெட்மி நிறுவனம் சமீபத்தில் ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போனை மலிவு விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்த போனுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால் இந்த ரெட்மி ஸ்மாரட்போன் ஜியோ 5ஜி நெட்வொர்க் மட்டுமே பயன்படுத்த முடிகிறது. ஏர்டெல்லின் 5ஜி நெட்வொர்க்கை ரெட்மி ஏ4 5ஜி ஆதரிக்காது என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது ரெட்மி ஏ4 5ஜி போன் ஆனது எஸ்ஏ (standalone) 5ஜி நெட்வொர்க்குகளை மட்டுமே ஆதரிக்கிறது. ஆனால் இந்தியாவில் ஏர்டெல்லின் 5ஜி நெட்வொர்க் என்எஸ்ஏ (Non-Standalone) கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டது. இதனால் ரெட்மி ஏ4 5ஜி போன் ஆனது ஏர்டெல் 5ஜி உடன் பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் பயனர்கள் Redmi A4 5G வாங்கும் முன் இதை கவனிங்க.. ஏன்?

அதேசமயம் ஜியோவின் 5ஜி நெட்வொர்க் எஸ்ஏ (standalone) கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டது. இதனால் ரெட்மி ஏ4 5ஜி போனில் ஜியோ 5ஜி நெட்வொர்க்கை எளிமையாகப் பயன்படுத்த முடியும். சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் ஜியோ 5ஜி சிம் வைத்திருக்கும் பயனர்கள் இந்த போனை வாங்குவது நல்லது. இப்போது ரெட்மி ஏ4 5ஜி போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

ரெட்மி ஏ4 5ஜி அம்சங்கள் (Redmi A4 5G Specifications): 6.88 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய ரெட்மி ஏ4 5ஜி. மேலும் 1600 x 720 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் ப்ரைட்னஸ், போன்ற பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் உள்ளன.

ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 4எஸ் ஜென் 2 (Snapdragon 4s Gen 2) சிப்செட் உடன் இந்த ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் Xiaomi HyperOS சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதி இந்த போனில் உள்ளது. மேலும் அட்ரினோ 611 ஜிபியு (Adreno 611 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த புதிய போன்.

ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. செல்பிகளுக்கும்,வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா வசதி இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன. குறிப்பாக இந்த போனின் உதவியுடன் அசத்தலான படங்களை எடுக்க முடியும்.

4ஜிபி ரேம் + 64பி மெமரி மற்றும் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் பயனர்கள் Redmi A4 5G வாங்கும் முன் இதை கவனிங்க.. ஏன்?

குறிப்பாக 5160mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ரெட்மி ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), எப்எம் ரேடியோ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.3, டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகளுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி ஏ4 5ஜி போனின் விலை ரூ.8499-ஆக உள்ளது. பின்பு இதன் 128ஜிபி கொண்ட ரூ.9,499-ஆக உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Redmi A4 5G Does not Support Airtel 5G: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X