Home
News

இப்படி ஒரு TV-க்கு தான் இங்க பல பேர் வெயிட்டிங்.. ரூ.15000 பட்ஜெட்ல 50-இன்ச் 4K டிஸ்பிளே.. என்ன மாடல்?

ரூ.15,000 என்பது தான், புதிய ஸ்மார்ட் டிவி (Smart TV) வாங்க வேண்டும் என்கிற எண்ணம் கொண்ட பெரும்பாலான இந்தியர்களின் பட்ஜெட் ஆக இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் கிடைக்கும் பெரும்பாலான டிவிகளின் டிஸ்பிளே அளவுகள் 32-இன்ச் ஆக அல்லது 43 இன்ச் ஆகவே இருக்கும்.

ஆனால் சீனாவை தளமாக கொண்ட ஷாவ்மீயின் துணை நிறுவனமான ரெட்மி ரூ.15,000 பட்ஜெட்டில் 50-இன்ச் 4கே ஸ்மார்ட் டிவி (50-inch 4K TV) ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. கடந்த ஜூலையில் இதே டிவி சீரீஸின் கீழ் 32-இன்ச் மற்றும் 65-இன்ச் மாடல்களை அறிமுகம் செய்திருந்தது.

ரூ.15000 பட்ஜெட்ல 50-இன்ச் 4K டிஸ்பிளே.. என்ன மாடல்?

அதனை தொடர்ந்து 50-இன்ச் மாடலாக ரெட்மி டிவி ஏ50 2024 (Redmi TV A50 2024) ஸ்மார்ட் டிவி சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த டிவி இந்திய சந்தையில் அறிமுகமாகுமா? இதன் விலை நிர்ணயம் என்ன? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:

புதிய 50-இன்ச் ரெட்மி 4கே ஸ்மார்ட் டிவி ஆனது நேர்த்தியான வடிவமைப்பை பெற்றுள்ளது. இது பெஸல்லெஸ் டிஸ்பிளே மற்றும் மெட்டல் பில்ட் உடன் வருகிறது. இந்த டிவியில் உள்ள 50-இன்ச் டிஸ்பிளேவானது 4கே ரெசல்யூஷன் மற்றும் 1.07 பில்லியன் கலர்ஸ் ப்ரொடெக்ஷன் உடன் வருகிறது.

ரெட்மி டிவி ஏ50 2024 ,மாடலில் ஒரு ஸ்பீக்கருக்கு 10 வாட்ஸ் வீதம் மொத்தம் 20 வாட்ஸ் ஸ்பீக்கர் அவுட்புட் உள்ளது. ரூ.15,000 பட்ஜெட்டில் வாங்க கிடைக்கும் ஒரு டிவிக்கு போதுமான அளவு சக்தி, தெளிவு மற்றும் பலமான சவுண்ட்டை வழங்க போதுமானதாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

அதுமட்டுமல்ல இது டூயல்-டக்ட் பாஸ் மேம்பாட்டுடன் வருகிறது, அதாவது ஸ்பீக்கர்களின் லோ ப்ரீக்வென்சி ரெஸ்பான்ஸை மேம்படுத்த இரண்டு பாஸ் போர்ட்களை பயன்படுத்துகிறது. இந்த டிவி குவாட் கோர் ஏ35 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இதனுடன் 1.5 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ஸ்டோரேஜ் ஸ்பேஸ் உள்ளது. இது 2.4G வயர்லெஸ் நெட்வொர்க்கை ஆதரிக்கிறது.

ரெட்மி டிவி ஏ50 2024 ஆனது எம்ஐயுஐ டிவி சிஸ்டமில் (MIUI TV System) இயங்குகிறது, இது யூஸர் ஃபிரெண்டலி இன்டர்பேஸ் (User Friendly Interface) மற்றும் பல்வேறு வகையான ஆப்கள் மற்றும் ஸ்ட்ரீமிங் தளங்களுக்கான (Apps and Streaming Platforms) தடையற்ற அணுகலை வழங்குகிறது.

கூடுதலாக இதில் பில்ட்-இன் ஸ்மார்ட் அசிஸ்டென்ட் (Built-in Smart Assistant) ஆன ஷீயோ ஏஐ (Xiao Ai) உள்ளது. ஷீயோ ஏஐ என்பது ஸ்மார்ட் டிவியை மட்டுமின்றி முழு வீட்டிலும் உள்ள ஸ்மார்ட் டிவைஸ்களை குரலை மட்டுமே பயன்படுத்தி கட்டுப்படுத்த அனுமதிக்கும் ஒரு (Voice Control) அம்சமாகும்.

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை ரெட்மி டிவி ஏ50 2024 மாடலானது சீனாவில் இந்திய ரூபாய் மதிப்பின்படி ரூ.15294 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவியானது இந்திய உட்பட சீனாவிற்கு வெளியே உள்ள சந்தைகளுக்கு வருமா என்கிற கேள்விக்கு சரியான பதில் இல்லை.

இந்திய சந்தையில் ஷாவ்மீ மற்றும் ரெட்மி ஸ்மார்ட் டிவிகளுக்கு கிடைத்து வரும் வரவேற்பை மனதிற்குக்கொண்டு இது இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படலாம் அல்லது இதே ஸ்மார்ட் டிவி வேறு பெயரில் ரீபிராண்டட் வெர்ஷனாக கூட வெளியாகலாம். இதில் எந்த உத்திரவாதமும் இல்லை ஆனால்
இப்படி ஒரு டிவிக்கு தான் இங்கே பல பேர் வெயிட்டிங் என்பது மட்டும் உறுதி!

இப்போதைக்கு இந்தியாவில் ரூ.15,000 பட்ஜெட்டில் வாங்க கிடைக்கும் ரெட்மி ஸ்மார்ட் டிவிகளை பொறுத்தவரை, 32-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபையர் டிவி (32-inch Redmi Smart Fire TV) மாடலானது ரூ.12,999 க்கும், 32-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவி எச்டி ரெடி (32-inch Redmi Smart TV HD Ready) மாடலன் ரூ.13,999 க்கும் வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Redmi 50 inch 4K Smart TV Launched in China Will Launch in India or Not
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X