UPI இல் புதிய சாதனை.. ஆகஸ்ட் முடிவதற்குள் PhonePe, Google Pay-வில் என்னென்ன புது ரூல்ஸ், லிமிட்?
என்பிஐசி (NPCI) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின் படி, கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) உள்ளிட்ட ஆப்களை உள்ளடக்கிய யுபிஐ (UPI) சேவையானது, கடந்த ஜூலை மாதத்தில் அதிகபட்சமாக 19.47 பில்லியன் பரிவர்த்தனையை எட்டியுள்ளது. ரூபாய் மதிப்பின் அடிப்படையில், இது ரூ.25.08 லட்சம் கோடியாகும்
இது 2025 மே மாதத்தில் பதிவு செய்யப்பட்ட ரூ.25.14 லட்சம் கோடிக்கு பிறகான இரண்டாவது அதிகபட்ச தொகையாகும். ஆனால் செய்யப்பட்ட பரிவர்த்தனை அளவின் அடிப்படையில், கடைசியாக பதிவான அதிகபட்ச எண்ணிக்கை - மே மாதத்தில் பதிவான 18.67 பில்லியன் ஆகும். இதன் அடிப்படையில் ஜூலை மாதம் யுபிஐ சேவையில் புதிய சாதனை (19.4 பில்லியன் பரிவர்த்தனைகள்) பதிவாகியுள்ளது.

யுபிஐ சேவை தொடர்பான புதிய விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், இந்த புதிய மாற்றங்கள் அமலுக்கு வரும் முன்பே யுபிஐ சேவையில் இப்படி ஒரு சாதனை படைக்கப்பட்டு இருப்பது - ஒருபக்கம் மகிழ்ச்சி தான் என்றாலும் கூட, அடுத்துதடுத்து என்னென்ன புதிய விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் (New Rules, Limits and Regulations) வரும் என்கிற கேள்வியையும் எழுப்புகிறது.
நினைவூட்டும் வண்ணம் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ஆட்டோபே வசதியின் கீழ் ஆட்டோமெட்டிக் ஆக பணம் டெபிட் ஆவதற்கான நேரங்கள் (AutoPay Timings) 3 வகையான காலக்கெடுவின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது யுபிஐ ஆப்களின் வழியிலான ஆட்டோபே பரிவர்த்தனைகள் குறிப்பிட்ட 3 வகையான நேர இடைவெளிகளில் செயல்படுத்தப்படும்: காலை 10 மணிக்கு முன், பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 9:30 மணிக்குப் பிறகு.
இதோடு யுபிஐ ஆப் வழியாக பேங்க் பேலன்ஸ் சரிபார்ப்புகள் (Daily Balance Check Limit): ஒரு நாளைக்கு 50 முறை மட்டுமே என்றும் லிமிட் செட் செய்யப்பட்டுள்ளது. இதேபோல மொபைல் நம்பர் உடன் இணைக்கப்பட்ட அக்கவுண்ட் சரிபார்ப்புகள் (Linked Bank Account View Limit): ஒரு நாளைக்கு 25 முறை மட்டுமே என்றும் லிமிட் செட் செய்யப்பட்டுள்ளது.
பேமண்ட் ஸ்டேட்டஸ் சரிபார்ப்பு வரம்பு (Transaction Status Check Limit): குறைந்தபட்சம் 90 வினாடிகள் இடைவெளியுடன், நிலுவையில் உள்ள பரிவர்த்தனையின் ஸ்டேட்டஸ்-ஐ 3 முறை மட்டுமே சரிபார்க்க முடியும் என்றும் லிமிட் செட் செய்யப்பட்டுள்ளது. மேலும் பேமண்ட் ரிவர்சல் கேப் (Payment Reversal Cap): 30 நாட்களில் அதிகபட்சமாக 10 கட்டணத்தை மாற்றுவதற்கான கோரிக்கைகளை எழுப்பலாம், 1 அனுப்புநருக்கு 5 என்ற அதிகபட்ச வரம்பு என்றும் லிமிட் செட் செய்யப்பட்டுள்ளது.
இன்றைய தேதிக்கு இந்தியாவில் உள்ள அனைத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளிலும் யுபிஐ சேவையானது 85% சதவீதத்தை கொண்டுள்ளது. இதன் தாக்கம் தேசிய எல்லைகளுக்கு அப்பாற்பட்டதாகவும் உள்ளது. அதாவது உலகளாவிய நிகழ்நேர டிஜிட்டல் பேமண்ட்களில் கிட்டத்தட்ட 50 சதவீதம் இந்தியாவில் இயங்குகிறது. யுபிஐ சேவையானது ஏற்கனவே யுஏஐ, சிங்கப்பூர், பூட்டான், நேபாளம், இலங்கை, பிரான்ஸ் மற்றும் மொரீஷியஸ் உள்ளிட்ட ஏழு நாடுகளில் செயல்பாட்டில் உள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது
இந்த எழுச்சி ஆனது சிறு குறு தொழில்முனைவோர்கள், உள்ளூர் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் இந்தியாவின் மூலைமுடுக்குகளில் உள்ள பயனர்கள் - டிஜிட்டல் பேமண்ட்களை அதிகளவில் ஏற்றுக்கொள்வதன் மூலம் சாத்தியமாகி உள்ளது. யுபிஐ சேவையானது டிஜிட்டல் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக மாறி வருகிறது" என்று ஸ்பைஸ் மணி தலைமை நிர்வாக அதிகாரி ஆன திலீப் மோடி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications








