Home
News

புது ரீசார்ஜ் ரூல்ஸ்.. ஜூலை 3 முதல் அமல்.. முன்கூட்டியே ரீசார்ஜ் செய்த சிம் கார்டுகள்.. அடுத்து என்ன செய்வது?

சிம் கார்டு பயன்படுத்தும் ஒட்டுமொத்த கஸ்டமர்களும் ஜூலை 3ஆம் தேதி அமலாகும் புதிய ரீசார்ஜ் விதிகளுக்கு கட்டுப்பட வேண்டி இருக்கிறது. இந்த நேரத்தில் ஜூலை 3ஆம் தேதிக்கு முன்னதாகவே கோடிக்கணக்கான சிம்கார்டு கஸ்டமர்கள் ரீசார்ஜ் செய்து வருகின்றனர். இப்படி செய்யும் ரீசார்ஜ்களுக்கும் புதிய விதிகள் இருக்கின்றன. இதைப் பற்றி முதலில் தெரிந்து கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா சிம் கார்டுகளை பயன்படுத்தும் ஒவ்வொரு கஸ்டமர்களும் இதை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்கள் தங்களது ரீசார்ஜ் கட்டணங்களை அதிரடியாக உயர்த்தி விட்டன. முதலில் ஜியோ அறிவித்த பிறகு ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் அடுத்தடுத்து ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தி (Tariff Hike) தங்களது கஸ்டமர்களை அறக்க பறக்க செய்தன.

புது ரீசார்ஜ் ரூல்ஸ்.. ஜூலை 3 முதல் அமல்.. இப்போ ரீசார்ஜ் பண்ணீங்களா?

மாதாந்திர திட்டங்கள் முதல் வருடாந்திர திட்டங்கள் வரையில் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், ரீசார்ஜ் செய்வதற்காக மட்டுமே தனியாக மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை எடுத்து வைக்க வேண்டிய கட்டாயத்தில் சிம் கார்ட் கஸ்டமர்கள் இருக்கின்றனர். இந்த ரீசார்ஜ் கட்டணங்கள் ஜூலை 3ஆம் தேதியில் இருந்து தானே உயரப்போகிறது.

இப்போதே ரீசார்ஜ் செய்துவிட்டால், லாபம் தானே என்று கோடிக்கணக்கான கஸ்டமர்கள் ரீசார்ஜ் செய்து வருகின்றனர். இப்படி செய்தால், இதே சலுகைகள் ஜூலை 31ஆம் தேதிக்கு பிறகும் இருக்குமா என்ற சந்தேகமும் ஒருபுறம் எழுந்துள்ளது. ஏர்டெல் நிறுவனம், இதுகுறித்து திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது. இதேபோல ஜியோ, வோடபோன் ஐடியா என்ன சொல்கிறது?

ஏர்டெல் புது ரீசார்ஜ் விதிகள் (Airtel New Recharge Rules): ஏர்டெல் நிறுவனம் 730 நாட்களுக்கு முன்கூட்டியே ரீசார்ஜ் செய்து கொள்ள அனுமதிக்கிறது. ஆனால், இதிலும் சில விதிகள் இருக்கின்றன. அதாவது, ரூ.155, ரூ.179, ரூ.199, ரூ.289, ரூ.296, ரூ.455, ரூ.489, ரூ.509, ரூ.1799 ஆகிய திட்டங்களை ஆக்டிவ் திட்டங்களாக வைத்திருக்கும் கஸ்டமர்கள் அதே திட்டத்தை மட்டுமே முன்கூட்டியே ரீசார்ஜ் செய்ய முடியும்.

ஆகவே, உங்களது ஆக்டிவ் திட்டங்களையே மீண்டும் முன்கூட்டியே திட்டங்களாக ரீசார்ஜ் செய்து வைத்து கொள்ளலாம். அதாவது, இப்போது உங்களிடம் ரூ.155 திட்டத்தில் ரீசார்ஜ் செய்யப்பட்டு ஆக்டிவாக இருந்தால், அந்த தொகையிலேயே மீண்டும் ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும். இப்படி செய்தால் மட்டுமே அதே சலுகைகள் தொடரும். இப்படியே ஜூலை 3ஆம் தேதிக்கு முன் ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு விதிகள் கடைப்பிடிக்கப்படும்.

ஆனால், ரூ.209, ரூ.239, ரூ.265, ரூ.299, ரூ.319, ரூ.359,ரூ.399, ரூ.479, ரூ.499, ரூ.519, ரூ.549, ரூ.666, ரூ.699, ரூ.719, ரூ.779, ரூ.839, ரூ.869, ரூ.999, ரூ.1999, ரூ.2999 மற்றும் ரூ.3359 திட்டத்தை ஆக்டிவ் திட்டமாக வைத்திருக்கும் கஸ்டமர்கள், எந்தவொரு திட்டத்தையும் முன்கூட்டியே ரீசார்ஜ் செய்து வைத்து கொள்ளலாம். அதாவது, ரூ.209 திட்ட கஸ்டமர்களும் ரூ.3359 வரையில் ரீசார்ஜ் செய்யலாம்.

வோடபோன் ஐடியா புது ரீசார்ஜ் விதிகள் (Vodafone Idea New Recharge Rules): வோடபோன் ஐடியாவை பொறுத்தவரையில், முன்கூட்டியே ரீசார்ஜ் செய்வது பற்றி எந்த விதிகளும் வெளியாகவில்லை. ஆகவே, பழைய விதிகளின்படியே ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். அதாவது, இப்போது ஆக்டிவாக இருக்கும் திட்டத்தையே மீண்டும் ரீசார்ஜ் செய்து வைத்து கொள்ளலாம்.

ஆனால், இரண்டு முறைக்கு மேல் வோடபோன் ஐடியா கஸ்டமர்கள் ரீசார்ஜ் செய்யாமல் இருப்பது நல்லது. அதேபோல ஒரு வருடத்திற்கும் குறைவான திட்டங்களையே ரீசார்ஜ் செய்து வைத்து கொள்ளுங்கள். ஏனென்றால், ஜூலை 3ஆம் தேதிக்கு முன்னதாக புதிய விதிகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. அப்போது, திடீரென்று திட்டத்தை மாற்ற முடியாமல் போகலாம்.

ஜியோ புது ரீசார்ஜ் விதிகள் (Jio New Recharge Rules): ஜியோ கஸ்டமர்களுக்கு எந்தவித ரீசார்ஜ் விதிகளும் இருக்கவில்லை. ஜூலை 3ஆம் தேதிக்கு முன்பு மூன்று அல்லது நான்கு முறை கூட ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். அதேபோல அன்லிமிடெட் 5ஜி சேவைகளை பெற்று வந்த கஸ்டமர்களும் முன்கூட்டியே ரீசார்ஜ் செய்தால், அதே சலுகைகளை மீண்டும் பெற்று கொள்ளலாம்.

இதற்கு 1.5 ஜிபிக்கு மேல் 2 ஜிபி திட்டங்களை மட்டுமே ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்று எந்தவொரு கட்டுப்பாடுகளும் கிடையாது. ஆனால், ஜூலை 3ஆம் தேதிக்கு பிறகு அன்லிமிடெட் 5ஜி சேவை வேண்டுமானால், 2 ஜிபிக்கு அதிகாமான டேட்டாவை கொண்ட திட்டங்களை ரீசார்ஜ் செய்தால் மட்டுமே சேவை கிடைக்கும். ஜூலை 3ஆம் தேதிக்கு முன்பு இப்போதைக்கு இதுதான் நிலைமை.

Best Mobiles in India

English summary
New Recharge Rules For Jio, Airtel Vodafone Idea SIM Cards From July 3 Check Multiple Recharge Rules
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X