புது ரூல்ஸ்.. ஏப்.1 முதல் அமல்.. ரூ.1000 இல்ல.. ரூ.2000 இல்ல.. இனி பணம் அனுப்ப இதான்.. எந்தெந்த பரிவர்த்தனை!
ஆர்பிஐ (RBI) என்று அழைக்கப்படும் இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) ஆனது பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து பணத்தை அனுப்புவதில் புதிய விதிகளை கொண்டுவர இருக்கிறது. ஒட்டுமொத்த பேங்குகளும் இந்த விதிகளுக்கு உட்பட்டு பரிவர்த்தனைகளை அனுமதிக்க இருக்கின்றன. வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த விதிகள் எந்தெந்த பரிவர்த்தனைகளுக்கு பொருந்தும்? இதனால் எப்படி பணம் அனுப்ப அனுமதி கொடுக்கப்படும்? யுபிஐ கஸ்டமர்களுக்கும் இந்த விதிகள் இருக்குமா? உள்ளிட்ட விவரங்கள் இதோ.
இந்த விதிகள் ஆர்டிஜிஎஸ் (RTGS) மற்றும் நெப்ட் (NEFT) ஆகிய பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே அமலுக்கு வர இருக்கின்றன. ஆகவே, யுபிஐ (UPI) மற்றும் ஐஎம்பிஎஸ் (IMPS) பரிவர்த்தனைகளுக்கு இந்த விதிகள் பொருந்தாது. இருப்பினும், நெப்ட் மற்றும் ஆர்டிஜிஎஸ் முக்கியமான பரிவர்த்தனைகளாக இருப்பதால், இந்த விதிகளை பேங்க் கஸ்டமர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த விதிகளின்படி நெப்ட் மூலம் ரூ.1000 முதல் அனுப்பினாலும் புது வெரிபிகேஷன் இருக்கும். அதேபோல ஆர்டிஜிஎஸ் மூலம் ரூ.2,00,000 முதல் அனுப்பினாலும் புது வெரிபிகேஷன் இருக்கும். இந்த வெரிபிகேஷன் ஒன்றும் புதியது அல்ல. ஏற்கனவே, யுபிஐ மற்றும் ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்போது. நெப்ட் மற்றும் ஆர்டிஜிஎஸ்-களுக்கும் கொண்டுவரப்பட இருக்கிறது.
நெட்பேங்கிங் (Netbaking), மொபைல் பேங்கிங் (Mobile Baking) அல்லது பேங்க் ஆப்கள் (Bank Apps) மூலமும் இந்த ஆர்டிஜிஎஸ் மற்றும் நெப்ட் பரிவர்த்தனைகள் செய்யப்படுகின்றன. இப்படியான பரிவர்த்தனைகளை செய்யும்போது, நீங்கள் பணம் அனுப்ப வேண்டிய நபரின் அக்கவுண்ட் நம்பர் (Account Number) மற்றும் ஐஎப்எஸ்சி கோட் (IFSC Code) இருந்தால் போதும் பரிவர்த்தனையை செய்து முடிக்கலாம்.
இதில் பணத்தை பெறுபவரின் பெயர் விவரங்கள் தேவைப்படாது. ஆகவே, எந்த நபருக்கு பணம் செல்கிறது என்பது தெரியாமலேயே உங்களது பணம் அனுப்பப்படுகிறது. ஆனால், யுபிஐ மற்றும் ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளில் உங்களது பணத்தை பெறும் நபரின் பெயர் விவரங்கள் இடம்பெற்று இருக்கிறது. ஆகவே, யாருக்கு பணம் போகிறது என்பதை இதில் தெரிந்து கொள்ள முடிகிறது.
இதைபோலவே ஆர்டிஜிஎஸ் மற்றும் நெப்ட் பரிவர்த்தனைகளிலும் பெறுபவரின் பெயரை இடம்பெற செய்யும்படி இந்த விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆகவே, ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து ஆர்டிஜிஎஸ் மற்றும் நெப்ட் பரிவர்த்தனைகளில் பெறுபவரின் அக்கவுண்ட் பெயர் (Beneficiary Account Name) கட்டாயம் காண்பிக்கப்படும். இதை கஸ்டமர்கள் வெரிபிகேஷன் செய்து கொள்ளலாம்.
இந்த வெரிபிகேஷனை செய்த பிறகே பரிவர்த்தனைகளை முடிக்க முடியும். இந்திய ரிசர்வ் வங்கியானது, இந்த விதிகளை ஒட்டுமொத்த பேங்குகளுக்கும் கொண்டுவர இருக்கிறது. இந்த விதிகளின்படியே கஸ்டமர்களுக்கு சேவை வழங்க அனைத்து பேங்குகளுடன் இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்துக்கு (National Payments Corporation of India) இணைந்து செயல்பட இருக்கிறது.
முன்னதாக, இந்திய தேசிய கொடுப்பனவு கழகமானது, யுபிஐ பரிவர்த்தனை ஐடி (UPI Transactions ID) விதிகளை அமலுக்கு கொண்டுவந்தது. இந்த விதிகள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் ஒட்டுமொத்த யுபிஐ கஸ்டமர்களுக்கும் அமலுக்கு வந்துவிட்டன. இந்த விதிகளின்படி யுபிஐ பரிவர்த்தனை ஐடிகளில் சிறப்பு எழுத்துக்கள் (Special Characters) முற்றிலும் தவிர்க்கப்பட இருக்கின்றன.
எண்கள் மற்றும் எழுத்துக்கள் அடங்கிய ஆல்பாநுயூமரிக் (Alphanumeric) மட்டுமே பயன்படுத்தப்பட இருக்கின்றன. இதனால், யுபிஐ கஸ்டமர்கள் கவலைப்பட தேவையில்லை. ஏனென்றால், யுபிஐ பரிவர்த்தனை ஐடிக்களை ஜெனரேட் செய்யும் யுபிஐ ஆப் நிறுவனங்களானது, அதில் நம்பர்கள் மட்டுமே இடம்பெறுவதை உறுதி செய்கின்றன. இதனால், கஸ்டமர்கள் சிக்கல் இல்லாமல் பணத்தை அனுப்பலாம்.


Click it and Unblock the Notifications