ஏப்.1 முதல் புது RBI ரூல்ஸ்.. பணம் அனுப்ப அதிரடி மாற்றம்.. IMPS, NEFT, RTGS-க்கு நேரடி அமல்.. என்னென்ன வருது?
வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய ஆர்பிஐ விதிகள் (New RBI Rules) அமலுக்கு வருகின்றன. இந்திய ரிசர்வ் வங்கி ஆனது அமலுக்கு கொண்டுவரும் இந்த விதிகளால் பேங்க் பணத்தை டிஜிட்டலாக அனுப்பும் ஒட்டுமொத்த கஸ்டமர்களுக்கு புதிய அங்கீகாரம் தேவைப்படும்.
வழக்கமாக கிடைக்கும் ஓடிபியை வைத்து பணத்தை அனுப்ப முடியாது. ஒட்டுமொத்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கும் இந்த விதிகள் அமலுக்கு வருவதால், பேங்க் அக்கவுண்ட் வைத்து இருக்கும் கஸ்டமர்கள் கட்டாயம் இதை தெரிந்து கொள்ள வேண்டும். ஏப்ரல் 1, 2026 முதல் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கும் இரு காரணி அங்கீகாரத்தை (2FA) ஆர்பிஐ அமலுக்கு கொண்டுவருகிறது.

இரு காரணி அங்கீகாரம் (2 Factor Authentication): பேங்க் அக்கவுண்ட் வைத்து இருக்கும் கஸ்டமர்கள் டிஜிட்டலாக பணத்தை அனுப்பும்போது, ஓடிபி (OTP) கேட்கப்படுகிறது. இது எஸ்எம்எஸ் வழியாக பேங்க் அக்கவுண்ட்டுடன் லிங்க செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு மட்டுமே அனுப்பப்படுகிறது. இதை ஓடிபியை கொடுத்தால், பரிவர்த்தனை வெற்றிகரமாக முடிக்கப்படும்.
இதை ஒரு காரணி அங்கீகாரம் என்று வைத்து கொள்ளலாம். ஆனால், இரு காரணி அங்கீகார விதிகள் அமலுக்கு வந்தால், ஓடிபி அங்கீகாரம் மட்டுமல்லாமல், கூடுதலாக ஒரு அங்கீகாரம் இருக்கும். இதையும் செய்து முடித்தால் மட்டுமே பேங்க் பணத்தை வெற்றிகரமாக அனுப்ப முடியும். இந்த 2 ஆவது அங்கீகாரமானது பேங்குகள் வழியாக கொடுக்கப்படும்.
இதில் பாஸ்வேர்ட் (Password) அல்லது பாஸ்பேர்ஸ் (Passphrase) இடம்பெற்றிருக்கும். பின் நம்பர் (PIN Number), எஸ்எம்எஸ் அடிப்படையிலான ஓடிபிகள் (SMS Based OTPs), ஃபிங்கர்பிரிண்ட் (Fingerprints), பேசியல் ரிககனைசேஷன் (Facial Recognition) இடம்பெற்றிருக்கும். மேலும், ஹார்ட்வேர் டோக்கன்கள் (Hardware Tokens) மற்றும் சாப்ட்வேர் டோக்கன்கள் (Software Tokens) கொடுக்கப்படும்.

இதில் ஃபிங்கர்பிரிண்ட், பேசியல் ரிககனைசேஷன், பின் நம்பர் மற்றும் ஓடிபிகளை ஏற்கனவே பேங்க் கஸ்டமர்கள் பயன்படுத்தி வருவதால், எளிதாக இரு காரணி அங்கீகார விதிகளை ஏற்ற கொள்ள முடியும். அதே நேரத்தில் டிஜிட்டலாக பணத்தை அனுப்பும்போது பாதுகாப்பாகவும் இருக்க முடியும். இந்த விதிகளுடன் ஏடிஎம் விதிகளும் அமலுக்கு வருகின்றன.
ஏடிஎம் புதிய லிமிட்: எச்டிஎப்சி பேங்க் கஸ்டமர்களுக்கு டெபிட் கார்டு வழியாக ஏடிஎம் மெஷினில் பணம் எடுப்பது மட்டுமே இப்போது கணக்கில் கொள்ளப்படுகிறது. யுபிஐ வழியாக ஏடிஎம் மெஷினில் பணம் எடுப்பதால் கணக்கில் எடுத்து கொள்ளப்படவில்லை. ஆனால், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஒரே லிமிட்டின் கீழ் கொண்டுவரப்பட உள்ளது.
ஆகவே, இலவச ஏடிஎம் பரிவர்த்தனை லிமிட் சீக்கிரமாக முடியும். ஆகவே, கூடுதலாக பணம் எடுக்க 1 பரிவர்த்தனைக்கு ரூ.23 செலுத்த வேண்டும். எச்டிஎப்சி கஸ்டமர்களுக்கு மாதத்திற்கு 5 முறை இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகள் (எச்டிஎப்சி ஏடிஎம்களில்) கிடைக்கிறது. மற்ற ஏடிஎம்களில் 3 இலவச பரிவர்த்தனைகள் கிடைக்கிறது.
பெருநகரங்கள் அல்லாத பகுதிகளில் 5 இலவச பரிவர்த்தனைகள் கிடைக்கிறது. பஞ்சாப் நேஷனல் பேங்க் கஸ்டமர்களுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட டெபிட் கார்டுகள் வழியாக ஏடிஎம்மில் பணத்தை எடுக்க ரூ.1,00,000 வரம்பாக இருக்கிறது. இந்த வரம்பு ஒரு நாளுக்கு ரூ. 50,000 முதல் ரூ. 75,000 வரையில் மட்டுமே எடுக்க முடியும்படி மாற்றப்பட இருக்கிறது.
இந்த விதிகள் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. மேலும், புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிக்க ஆதார் மட்டுமே கேட்கப்பட்டுவருவது ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மாற்றப்பட உள்ளது. பிறப்புச் சான்றிதழ், ஓட்டர் ஐடி, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ் மற்றும் மெட்ரிகுலேஷன் சர்டிபிகேட் ஆகியவை கேட்கப்பட உள்ளது. அதோடு ஆதாரும் கேட்கப்படும்.


Click it and Unblock the Notifications








