Home
News

புது ரூல்ஸ்.. ஏப்.1 முதல் அமல்.. பணம் அனுப்ப புது வெரிபிகேஷன்.. UPI, IMPS-க்கு ஓகே.. NEFT, RTGS-க்கு மாற்றம்!

பேங்க் அக்கவுண்ட் மூலம் பணம் அனுப்பும் ஒட்டுமொத்த கஸ்டமர்களுக்கும் ஆர்பிஐ (RBI) என்றழைக்கப்படும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் (Reserve Bank of India) புது வெரிபிகேஷன் விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. இந்த விதிகள் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதிக்குள் அமல்படுத்தப்பட இருக்கிறது. ஆகவே, பேங்குகள் இந்த விதிகளின்படி கஸ்டமர்களுக்கு சேவையை வழங்க ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா உத்தரவிட்டிருக்கிறது. இந்த புது வெரிபிகேஷன் விதிகளால் என்னென்ன மாற இருக்கிறது? கஸ்டமர்களுக்கு என்ன நடக்கும்?

பேங்கில் இருக்கும் பணத்தை அனுப்ப யுபிஐ (UPI), ஐஎம்பிஎஸ் (IMPS), ஆர்டிஜிஎஸ் (RTGS) மற்றும் நெப்ட் (NEFT) ஆகிய பரிவர்த்தனைகள் இருக்கின்றன. இதில் யுபிஐ மற்றும் ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளில் பணத்தை பெறுபவரின் பெயர் (Beneficiary Name) இடம்பெற்றிருக்கும். இதன் மூலம் பணத்தை பெறும் நபரை எளிதாக அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது.

புது ரூல்ஸ்.. ஏப்.1 முதல் அமல்.. பணம் அனுப்ப புது வெரிபிகேஷன் வருது!

ஆனால், ஆர்டிஜிஎஸ் மற்றும் நெப்ட் பரிவர்த்தனைகளில் பணத்தை பெறுபவரின் பெயர் விவரங்கள் இடம்பெறாது. அக்கவுண்ட் நம்பர் மற்றும் ஐஎப்எஸ்சி கோட் இருந்தால் போதும், பணத்தை அனுப்பி கொள்ளலாம். ஆனால், ரூ.2 லட்சத்துக்கு அதிகமான பணத்தை அனுப்புவதற்கு ஆர்டிஜிஎஸ் மற்றும் நெப்ட் பரிவர்த்தனைகள் தவிர்க்க முடியாததாக இருக்கிறது.

இதில் நெப்ட் பரிவர்த்தனையில் ரூ.2 லட்சத்துக்கு குறைவான பணத்தையும் அனுப்பி கொள்ளலாம். இதற்கு எந்தவித கட்டணமும் பேங்க் கஸ்டமர்களிடையே கிடையாது. அதே நேரத்தில் பாதுகாப்பானதாகவும் இருக்கிறது. இதனாலேயே மொபைல் பேங்கிங் (Mobile Banking) மற்றும் நெட்பேங்கிங் (Internet Banking) மூலம் அதிகப்படியான பேங்க் கஸ்டமர்கள் ஆர்டிஜிஎஸ் மற்றும் நெப்ட் பரிவர்த்தனைகளை செய்து வருகின்றனர்.

இவர்களுக்கு வழங்கப்படும் சேவையிலேயே ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா ஆனது இப்போது புதிய வெரிபிகேஷன் விதிகளை கொண்டு வருகிறது. இந்த விதிகளின்படி, யுபிஐ மற்றும் ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளில் வழங்குவதை போலவே பேங்க் கஸ்டமர்கள் நெப்ட் மற்றும் ஆர்டிஜிஎஸ் மூலமும் பணத்தை அனுப்பும் போது, அதில் பெறுபவரின் பெயரை வெரிபிகேஷன் செய்யும் வகையில் காண்பிக்கப்பட இருக்கிறது.

ஒவ்வொரு பரிவர்த்தனையின் போதும், பேங்குகள் அல்லது பரிவர்த்தனை சேவைகள் வழங்கும் நிறுவனங்கள் இதை செய்ய வேண்டும் என்று ரிசர்வ் பேங்க் ஆப் இந்திய உத்தரவிட்டுள்ளது. ஆகவே, பேங்க் கஸ்டமர்கள் பணத்தை அனுப்பும் முன்பு பெறுபவரின் பெயரை வெரிபிகேஷன் செய்துவிட்டு அந்த பரிவர்த்தனைகளை செய்து முடிக்கலாம். இந்த வெரிபிகேஷன் சிஸ்டம் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதிக்குள் அமலாக இருக்கிறது.

ஏனென்றால், பேங்குகளுக்கு அந்த தேதி வரையில் மட்டுமே ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அவகாசம் வழங்கி இருக்கிறது. அதேபோல இந்த புது வெரிபிகேஷன் சேவையை வழங்குவதற்கு எந்தவித கட்டணங்களையும் பேங்குகள் வசூலிக்கூடாது என்றும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா உத்தரவிட்டு இருக்கிறது. இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் பேங்குகளுடன் இதை வழங்க இருக்கிறது.

ஆர்டிஜிஎஸ் மற்றும் நெப்ட் பரிவர்த்தனைகளை செய்யும்போது, பேங்க் அக்கவுண்ட் நம்பர் (Bank Account Number) மற்றும் ஐஎப்எஸ்சி (IFSC) விவரங்களின் அடிப்படையில், பெறுபவரின் பெயர் கொடுக்கப்பட இருக்கிறது. கோர் பேங்கிங் சொலூஷன் (Core Banking Solution) மூலம் இந்த விவரங்கள் பெறப்பட இருப்பதாக ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்து இருக்கிறது.

ஆகவே, இந்த புதிய வெரிபிகேஷன் விதிகள் மொபைல் பேங்கிங் மற்றும் நெட்பேங்கிங் பயன்படுத்தி ஆர்டிஜிஎஸ் மற்றும் நெப்ட் பரிவர்த்தனைகளை செய்யும் கஸ்டமர்களுக்கு மட்டுமே அமலுக்கு வர இருக்கிறது. ஏற்கனவே, இருக்கும் யுபிஐ மற்றும் ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளுக்கு எதுவும் கிடையாது. அதிக தொகையை பரிவர்த்தனை செய்யும்போது, இது பாதுகாப்பை உறுதி செய்ய இருக்கிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X