புது ரூல்ஸ்.. அக்.1 முதல் அமல்.. EMI போன் கதை முடிந்தது.. RBI அதிரடி மாற்றம்.. இனிமேல் கடனில் வாங்கிய போன்கள்?
ஸ்மார்ட்போன் வாங்குவதற்காக வாங்கிய கடனில் (EMI) செலுத்த தவறினால், அந்தப் ஸ்மார்ட்போனின் சில குறிப்பிட்ட செயல்பாடுகளை மட்டும் முடக்குவதற்கு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு ஆர்பிஐ (RBI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) அளித்துள்ளது.
இது ஒட்டுமொத்த கடன்களுக்கும் பொருந்தாது. ஈஎம்ஐ முறையில் வாங்கிய ஸ்மார்ட்போனுக்கு மட்டுமே பொருந்தும். ஆகவே, கடன் வாங்கியவரின் மற்ற ஸ்மார்ட்போன்களின் செயல்பாடுகளை முடக்க அனுமதி கிடையாது. கடன் வசூல் நடைமுறைகளை முறைப்படுத்தவும், வாடிக்கையாளர்களைப் பாதுகாக்கவும் இந்த அதிரடி வரைவு விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்த புதிய விதிகள் அக்டோபர் 1 ஆம் தேதி 2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரவுள்ளன. எந்த போனை வாங்குவதற்காக கடன் வாங்கப்பட்டதோ, அந்த போனை மட்டுமே முடக்க முடியும். கடன் வாங்கிய 90 நாட்களுக்குப் பிறகே (90 Days Past Due) இந்த நடவடிக்கையை எடுக்க முடியும். அதற்கு முன்னதாக, தவணையை தவறி 60 நாட்கள் கடந்தவுடன் நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும்.
இது முதல் நோட்டீஸாக எடுத்து கொள்ளப்பட வேண்டும். ஆகவே, நிலுவை தொகையை செலுத்த 21 நாட்கள் அவகாசம் தர வேண்டும். அதன் பிறகும் செலுத்தவில்லை என்றால், மேலும் 7 நாட்கள் அவகாசம் அளித்து, அதற்கு இரண்டாவது நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இதையும் தவறினால் மட்டுமே வாடிக்கையாளர்களின் ஸ்மார்ட்போன் முடக்கப்படும்.
குறிப்பாக ஸ்மார்ட்போனை முழுமையாக முடக்கக் கூடாது என்று ரிசர்வ் வங்கியின் விதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இன்டர்நெட் வசதி, இன்கம்மிங் கால்கள் (Incoming calls), அவசரக்கால உதவி (SOS) மற்றும் அரசு அறிவிப்புகள் போன்ற அத்தியாவசிய சேவைகளை பெறுவதற்கு எந்தவொரு தடையும் இருக்கக்கூடாது என்பதும் விதிகளில் இருக்கிறது.
மேலும், ஸ்மார்ட்போனில் இருக்கும் எந்தவொரு தனிப்பட்ட டேட்டாக்களையும் (Personal Data) வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் எடுக்கவோ, சேமிக்கவோ கூடாது என்று தனியுரிமை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கடனை திருப்பி செலுத்திய ஒரு மணி நேரத்திற்குள் ஸ்மார்ட்போனுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும்.
தவறாக முடக்கப்பட்டாலோ அல்லது தாமதம் ஏற்பட்டாலோ, வாடிக்கையாளருக்கு 1 மணிநேரத்திற்கு 250 ரூபாய் வீதம் சம்பந்தப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இழப்பீடு வழங்க வேண்டும். கூடுதலாக கடன் வசூல் செய்யும் ஏஜென்சிகள் மற்றும் முகவர்களுக்கான (Recovery Agents) விதிகளையும் ரிசர்வ் வங்கி கடுமையாக்கியுள்ளது.
அனைத்து முகவர்களும் இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தால் (IIBF) சான்றளிக்கப்பட்டிருக்க வேண்டும். காலை 8 மணி முதல் இரவு 7 மணிக்குள் மட்டுமே வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொள்ள வேண்டும். வாடிக்கையாளர்களை அச்சுறுத்துவதோ, அவதூறான வார்த்தைகளை பயன்படுத்துவதோ, குடும்பத்தினரைத் துன்புறுத்துவதோ அல்லது சமூக ஊடகங்களில் அவமானப்படுத்துவதோ முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களின் புகார்கள் ஏதேனும் நிலுவையில் இருந்தால், அது தீர்க்கப்படும் வரை அந்த வழக்கை வசூல் முகவர்களிடம் ஒப்படைக்கக் கூடாது என்றும், வசூல் தொடர்பான அழைப்புகள் அனைத்தையும் 6 மாதங்களுக்குப் பதிவு செய்து வைத்திருக்க வேண்டும் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி விதிகளில் குறிப்பிட்டுள்ளது. ஆகவே, ஈஎம்ஐ முறையில் ஸ்மார்ட்போன் வாங்கும் போது கவனமுடன் இருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications