புது விதிகள்.. பேங்க் பணம் அனுப்ப இதை செய்யனும்.. இல்லனா பணம் போகாது.. ஆர்பிஐ வெச்ச வேட்டு.. என்னென்ன மாறுது!
டிஜிட்டல் பேமெண்ட்களை (Digital Payments) செய்யும் ஒவ்வொரு பேங்க் கஸ்டமர்களும் (Bank Customers) ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா - ஆர்பிஐ (Reserve Bank of India - RBI) கொண்டுவரும் இரண்டு காரணி அங்கீகார (Two Factor Authentication) விதிகளை பற்றி தெரிந்துகொள்ளாமல் கடந்துபோக முடியாது. இல்லையென்றால், பணம் அனுப்புவது சிரமமாகிவிடும். ஒவ்வொரு டிஜிட்டல் பேமெண்ட்களின்போதும் இந்த விதிகளை பின்பற்றியே இனிமேல் பணம் அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். இந்த விதிகளை பற்றிய விவரங்கள் இதோ.
இப்போதெல்லாம், கையில் காசு எடுத்த செல்ல வேண்டிய அவசியம் ஏற்படுவது கிடையாது. பொட்டிக்கடைக்கு சென்றால் கூட கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற ஆப்களையே பயன்படுத்துகின்றோம். பேங்க் அக்கவுண்ட் மற்றும் மொபைல் பேங்கிங் இருந்தால் போதும் டிஜிட்டல் பேமெண்ட் செய்து கொள்ள முடிகிறது. ஆகவே, பேங்க் கஸ்டமர்களில் பெரும்பாலானோர் டிஜிட்டல் பேமெண்ட்களுக்கு மாறிவிட்டனர்.

இப்படிப்பட்ட நேரத்தில், பேங்க் கஸ்டமர்களுக்கு புதிய விதிகளை மத்திய அரசின் கீழ் செயல்படும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா கொண்டுவர இருக்கிறது. நேரடியாக டிஜிட்டல் பேமெண்ட் செய்யும்போதே இந்த விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்பதால், ஒட்டுமொத்த பேங்க் கஸ்டமர்களும் இந்த விதிகள் குறித்து கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.
அதாவது, பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து பணம் அனுப்பும் போது, எஸ்எம்எஸ் அடிப்படையிலான ஓடிபி (SMS-based OTP) வெரிபிகேஷன் செய்யப்படும். இது பேங்க் அக்கவுண்ட் உடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும். இதை கொடுத்தால், அந்த டிஜிட்டல் பேமெண்ட் வெற்றிகரமாக முடிக்கப்படும். இந்த வெரிபிகேஷனில் கூடுதல் அங்கீகரிப்பு காரணி (Additional Factor of Authentication) வர இருக்கிறது.
ஜூலை 31ஆம் தேதியில் ஆன்லைன் பரிவர்த்தனைகளின் போது கூடுதல் அங்கீகரிப்பு காரணியை கொண்டுவருவதற்கான வரைவு கட்டமைப்பை ஆர்பிஐ வெளியிட்டுள்ளது. இந்த புதிய கட்டமைப்பானது அனைத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கும் பொருந்தும். இருப்பினும், கார்டு மூலம் ரூ.5,000 வரையிலான காண்டாக்ட்லெஸ் பேமெண்ட்கள் மற்றும் ஆஃப்லைன் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு இது கிடையாது.
அங்கீகார காரணிகள் எப்படி? ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் வரைவு கட்டமைப்பை பொறுத்தவரையில் மூன்று அங்கீகார காரணிகள் இடம்பெற்றுள்ளன. முதலாவதாக பேங்க் கஸ்டமர்கள் ஒவ்வொரு முறையும் டிஜிட்டல் பேமெண்ட் செய்யும் போது ஓடிபி மட்டுமல்லாமல், பாஸ்வேர்ட்கள் (Passwords), பாஸ்ப்ர்ஸெஸ் Passphrases) அல்லது பின்கள் (PIN) ஆகியவற்றை கொடுக்க வேண்டி இருக்கும்.
இரண்டாவதாக ஏடிஎம் கார்டு அல்லது சாப்ட்வேர் டோக்கன்கள் போல பிசிகல் டிவைஸ்கள் (Physical Devices) அங்கீகார காரணியாக சேர்க்கப்படும். மூன்றாவதாக விரல்ரேகை (Fingerprints) அல்லது முக அங்கீகாரம் (Facial Recognition) போன்ற பயோமெட்ரிக் அடையாளங்களும் அங்கீகார காரணிகளாக வர இருக்கின்றன. இவற்றில் எவை அமல்படுத்தப்படும் என்பதை ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா தெரிவிக்கவில்லை.
இருப்பினும், ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் கேஒய்சி விதிகள் வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதால், அப்போது இந்த இரண்டு காரணி அங்கீகார விதிகளும் கொண்டுவரப்பட வாய்ப்புள்ளது. ஏனென்றால், ஓடிபி போல கூடுதல் அங்கீகார காரணிகளை சேர்க்க பேங்க் கஸ்டமர்களின் கேஒய்சி மிகவும் அவசியமானதாகும். இந்த கேஒய்சி ஆவணங்கள் தொடர்பான விதிகளே நவம்பரில் அமலாகின்றன.
இதில் அதிகாரப்பூர்வமாக செல்லுபடியாகும் ஆவணம் - ஓவிடி (Officially Valid Document- OVD) ஆவணங்களின் அடிப்படையில் பரிவர்த்தனைகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, ஆதார் கார்டு போன்ற பயோமெட்ரிக் அடையாளங்கள் கொண்ட ஆவணமானது, மேலே நாம் பார்த்த இரண்டு காரணி அங்கீகார விதிகளுக்கு பயன்படுத்தப்பட்டாலும் வியப்பதற்கு ஒன்றுமில்லை.
எப்படி பார்த்தாலும் நவம்பரில் பேங்க் கஸ்டமர்கள் புதிய விதிகளுக்கு உட்பட வேண்டி இருக்கும். இவை கூடுதல் சிரமத்தை கொடுப்பதாக தோன்றினாலும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேலும் பாதுகாப்பாக மாற்றும் என்பதில் சந்தேகமில்லை. அதேபோல பேங்க் அக்கவுண்ட்டின் கேஒய்சி விவரங்களை அப்டேட் செய்யுமாறு அறிவிப்புகள் வெளியாகவும் அதிக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








