Home
News

புது ரூல்ஸ்.. அக்.1 அமல்.. 1,000 ரூபாயோ.. 5000 ரூபாயோ.. EMI கட்டலனா மொபைல் லாக்.. 90 நாட்கள் கெடு வச்ச ஆர்பிஐ!

ஆர்பிஐ (RBI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா (Reserve Bank of India) ஆனது ஈஎம்ஐ செலுத்தும் கஸ்டமர்களுக்கு புதிய விதிகளை அமலுக்கு கொண்டுவருகிறது. இந்த விதிகள் கஸ்டமர்களின் ஸ்மார்ட்போனை லாக் செய்யும் அதிகாரத்தை கொடுக்கும். அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமல் செய்யப்பட உள்ளது.

ஒரு ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிடும் கஸ்டமர்களுக்கு மொத்த பணத்தையும் கொடுத்து வாங்கவும் ஆப்ஷன் இருக்கிறது. ஈஎம்ஐ முறையில் வாங்கவும் ஆப்ஷன் இருக்கிறது. இதில் ஈஎம்ஐ ஆப்ஷனில் வாங்க முன்னணி பேங்குகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கிரெடிட் கார்டு வழியாக பணத்தை தவணை முறையில் செலுத்த அனுமதி கொடுக்கின்றன.

புது ரூல்ஸ்.. அக்.1 அமல்.. 1,000 ரூபாயோ.. 5000 ரூபாயோ.. EMI கட்டலனா?

ஆனால், ஈஎம்ஐ ஆப்ஷனில் ஸ்மார்ட்போன்களை வாங்கிவிட்ட பிறகு தவணை செலுத்த தவறினால், அதை வசூல் செய்ய வரும் பேங்குகள், நிதி நிறுவனங்களின் ஏஜென்ட்கள் மற்றும் ஸ்மார்ட்போனின் உரிமையாளர்களுக்கு இடையே தேவையில்லாத வாக்குவாதங்கள் ஏற்படுகின்றன. இதை சரி செய்ய ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா, போனை லாக் செய்யும் விதிகளை அமல் செய்ய இருக்கிறது.

இந்த நடைமுறை வருகிற அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதனால், ஒட்டுமொத்த ஸ்மார்ட்போனும் லாக் செய்யப்பட்டுவிடும் என்று கஸ்டமர்கள் நினைக்க வேண்டாம். இதிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் பேங்குகள், நிதி நிறுவனங்களுக்கு இருக்கிறது. அதாவது, கடன் வாங்கி அதை செலுத்த தவறிய 90 நாட்களுக்கு பிறகே ஸ்மார்ட்போனை லாக் செய்ய அனுமதி கிடைக்கும்.

இந்த 90 நாட்களுக்கு முன்பாக பல்வேறு கட்ட நோட்டீஸ் கஸ்டமர்களுக்கு அனுப்பட வேண்டும். ஆகவே, 60 நாட்களாக தவணை கட்டாதபட்சத்தில் முதல் நோட்டீஸ் அனுப்பப்படும். இந்த நோட்டீஸ் அனுப்பட்டதில் இருந்து 21 நாட்கள் அவகாசம் கொடுக்கப்படும். இதையும் தவறினால் இரண்டாவது நோட்டீஸ் கொடுக்கப்படும். இந்த நோட்டீஸ் வந்த பிறகும் 7 நாட்கள் அவகாசம் கொடுக்கப்படும்.

இந்த அவகாசத்திலும் தவணையை கட்ட தவறும்பட்சத்தில் ஸ்மார்ட்போன் லாக் செய்யப்படும். ஆகவே, ஸ்மார்ட்போன் லாக் செய்யப்படும் என்பதை முன்கூட்டியே கஸ்டமர்களுக்கு தெரியப்படுத்த இந்த நோட்டீஸ் மற்றும் அவகாசம் கொடுக்க ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா விதிகளை கொண்டு வந்துள்ளது. இதிலும் சில தளர்வுகளை கஸ்டமர்களுக்கு கொடுக்கிறது.

அதாவது, ஸ்மார்ட்போன் லாக் செய்யப்படும் என்றால், ஒட்டுமொத்தமாக பயன்படுத்த முடியாமல் போகும் என்று நினைக்க வேண்டாம். இன்டர்நெட் சேவை முடக்கப்படாது. இன்கம்மிங் கால்கள் முடக்கப்படாது. அவசரக்கால உதவி (SOS) மற்றும் அரசு அறிவிப்புகள் தொடர்பான சேவைகள் தொடர்ந்து கிடைக்க அனுமதி கொடுக்கப்படும்.

தனிப்பட்ட விவரங்கள் (Personal Data) பேங்குகள் மற்றும் நிதி நிறுவனங்களால் கையாளப்படாது. ஆகவே, மற்ற சேவைகளில் முடக்கம் இருக்க வாய்ப்புள்ளது. இப்படி லாக் செய்யப்பட்ட ஸ்மார்ட்போனை மீண்டும் தவணை செலுத்தி விலக்கு பெற்று கொள்ளலாம். இப்படி விலக்கு பெறும்போது தாமதம் ஏற்பட்டால் 1 மணிநேரத்திற்கு 250 ரூபாய் வீதம் இழப்பீடு கிடைக்கும்.

இதை பேங்குகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கொடுக்க வேண்டும். அதேபோல விதிகளுக்கு அப்பாற்பட்டு ஸ்மார்ட்போன் லாக் செய்யப்பட்டது தெரியவந்தாலும் 1 மணி நேரத்துக்கு ரூ.250 இழப்பீடு வழங்கவும் விதிகளில் இடம் இருக்கிறது. இந்த விதிகளே வருகிற அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கின்றன. ஜூன் 1ஆம் தேதி முதல் பல்வேறு விதிகள் வந்துள்ளன.

இதில் கேஸ் சிலிண்டர் விதிகள், சோலார் பேனல் விதிகள் முக்கியமாக இருக்கின்றன. ஒரு வீட்டுக்கு ஒரு கேஸ் இணைப்பு என்கிற விதிகளுக்கு ஏற்ப எல்ஜிபி இணைப்பை சரண்டர் செய்ய விதிகளில் இடம் இருக்கிறது. இது பிஎன்ஜி கஸ்டமர்களுக்கு பொருந்துகிறது. இருப்பினும், டிரான்ஸ்பர் வவுச்சர் பெற்று கொண்டு, பிஎன்ஜி கிடைக்காத இடத்துக்கு மாறினால், எல்பிஜி பெற்று கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
New RBI Rules Effective October 1 2026 Customers Smartphones Will Be Locked If EMI Are Missed
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X