Home
News

RBI புது ரூல்ஸ்.. ஜன.1 முதல் அமல்.. இனி 5,000 ரூபாயோ.. 10,000 ரூபாயோ.. 90 நாளுக்கு மேல் லாக்.. என்னென்ன வருது?

ஸ்மார்ட்போன், டேப்லெட், லேப்டாப் போன்ற ஸ்மார்ட் டிவைஸ்களை ஈஎம்ஐ ஆப்ஷனில் வாங்கிவிட்டு, 90 நாட்களுக்கு மேல் 5000 ரூபாயோ, 10,000 ரூபாயோ, எவ்வளவு தவணையாக இருந்தாலும் அதை கட்ட தவறினால், கடன் வழங்கிய நிறுவனங்கள் அந்த டிவைஸ்களை லாக் செய்துகொள்ள அனுமதிக்கும்படியான விதிகள் வருகிற ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலாகிறது.

இந்த ஈஎம்ஐ ஸ்மார்ட்போன் லாக் விதிகளை (EMI Smartphone Lock Rules) ஆர்பிஐ (RBI) என்று ஆர்பிஐ (RBI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா (Reserve Bank of India) ஆனது அமலுக்கு கொண்டுவருகிறது. ஆனால், இப்படி லாக் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா வைத்துள்ளது.

RBI புது ரூல்ஸ்.. ஜன.1 முதல் அமல்.. இனி 5,000 ரூபாயோ.. 10,000 ரூபாயோ!

ஆகவே, 2027 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் ஈஎம்ஐ ஆப்ஷனில் ஸ்மார்ட்போன், டேப்லெட், லேப்டாப் டிவைஸ்களை வாங்கும் முன்பாக இந்த விதிகளை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால், கடன் வழங்கிய நிறுவனங்கள் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீறி லாக் செய்தால், கஸ்டமர்களுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும்.

இந்த விதிகள் ஸ்மார்ட்போன், டேப்லெட், லேப்டாப் இன்டர்நெட் வசதி கொண்ட டிவைஸ்களுக்கு மட்டுமே பொருந்தும். ஏனென்றால், இதை மட்டுமே வெளியில் இருந்து லாக் செய்ய முடியும். குறிப்பாக ஈஎம்ஐ செலுத்த தவறினாலும், முழுமையாக இந்த டிவைஸ்கள் லாக் செய்யப்படாது. இன்டர்நெட் வசதி தொடர்ந்து கிடைக்கும்.

இன்கம்மிங் கால்களை (Incoming Calls) பெற்று கொள்ளலாம். அவசரக்கால உதவியை (SOS) நாடலாம். அரசு அறிவிப்புகளை எஸ்எம்எஸ்கள் வழியாகவோ அல்லது கால்கள் வழியாகவோ பெற்று கொள்ளலாம். இதில் எந்த தடையும் இருக்காது. இந்த விதிகளை லாக் செய்யும்போது, கடன் வழங்கிய நிறுவனங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

ஈஎம்ஐ ஆப்ஷனில் ஸ்மார்ட்போன், டேப்லெட் அல்லது லேப்டாப் வாங்கிய பிறகு 90 நாட்களாக தவணை செலுத்த தவறினால் மட்டுமே இந்த லாக் செய்யும் நடைமுறையை கடன் வழங்கிய நிறுவனங்கள் தொடங்க முடியும். இதற்கு முன்னதாக கஸ்டமர்களுக்கு பல்வேறு கட்ட நோட்டீஸ்களை கொடுத்து முன்கூட்டியே தெரிவித்திருக்க வேண்டும்.

அதாவது, 60 நாட்களுக்கு பிறகு தவணையை கட்டாதபட்சத்தில் முதலாவது நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும். இதில் தவணையை கட்ட அறிவுறுத்த வேண்டும். இந்த நோட்டீஸ் வழங்கப்பட்ட தேதியில் இருந்து 21 நாட்கள் காலஅவகாசம் கொடுக்க வேண்டும். இந்த தேதிக்குள் தவணையை செலுத்திவிட்டால், வழக்கம்போல கடனை பெற்று கொள்ள வேண்டும்.

ஒருவேளை செலுத்தாமல் போனால், 21 நாட்களுக்கு பிறகு இரண்டாவது நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும். இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டதில் இருந்து 7 நாட்கள் காலஅவகாசம் கொடுக்க வேண்டும். இந்த 7 நாட்கள் என்பது கடைசியாக கொடுக்கப்படும் அவகாசமாக இருக்கிறது. இதையும் தவறினால் மட்டுமே லாக் செய்யும் அதிகாரத்தை நிறுவனங்கள் பெற்று கொள்ளும்.

இப்படி லாக் செய்யப்படும் டிவைஸ்களில் இருக்கும் போட்டோக்கள், வீடியோக்கள், ஃபைல்கள் உள்ளிட்ட தனிப்பட்ட டேட்டக்களை கடன் வழங்கிய நிறுவனங்கள் அணுகவோ அல்லது எடுக்கவோ கூடாது. அதேபோல லாக் செய்த பிறகு தவணையை செலுத்திவிட்டால், அடுத்த 1 மணி நேரத்திற்குள் ஸ்மார்ட்போன் அன்லாக் செய்யப்பட வேண்டும்.

இதை செய்யாமல் போனால், தாமதமாகும் ஒவ்வொரு 1 மணிநேரத்திற்கும் ரூ.250 இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அதேபோல மேற்கண்ட விதிகளை பின்பற்றாமல் லாக் செய்யப்பட்டாலும், இழப்பீடு கொடுக்க வேண்டும். இந்த விதிகளையே ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா வருகிற ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு கொண்டுவர இருக்கிறது.

Best Mobiles in India

English summary
New RBI Rules Come into Effect from January 1 2027 EMI Smartphone To Locked For 90 Days Overdue
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X