Home
News

ஏப்.1 முதல் புது ரூல்ஸ்.. பேங்க் அக்கவுண்ட் லிமிட்.. 7 முக்கிய மாற்றங்கள்.. ஏடிஎம், UPI க்கு வருது மாற்றங்கள்!

பேங்க் அக்கவுண்ட் வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு வருகிற ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. ஆர்பிஐ (RBI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா (Reserve Bank of India) இந்த விதிகளை அமலுக்கு கொண்டு வருகிறது. யாருக்கெல்லாம், இந்த விதிகள் பொருந்தும், டிஜிட்டல் பரிவர்த்தனைகள், ஏடிஎம் பரிவர்த்தனைகளில் என்னென்ன மாற்றங்கள் வர இருக்கின்றன.

இந்த விதிகள் ஒட்டுமொத்த பேங்க் கஸ்டமர்களுக்கும் பொருந்தாது. பிஎஸ்பிடிஏ (BSBDA) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பேசிக் சேவிங் பேங்க் டெபாசிட் அக்கவுண்ட் (Basic Savings Bank Deposit Account) வைத்து இருக்கும் கஸ்டமர்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த அக்கவுண்ட் ஆர்பிஐ விதிகளின்படி குறைந்தபட்ச பரிவர்த்தனைகளுக்காக கொடுக்கப்படுகிறது.

ஏப்.1 முதல் புது ரூல்ஸ்.. பேங்க் அக்கவுண்ட் லிமிட்.. 7 மாற்றங்கள்!

மினிமம் பேலன்ஸ் கிடையாது, ஆன்லைன் பரிவர்த்தனைகள் மற்றும் ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கு கட்டணங்கள் கிடையாது. எஸ்பிஐ (SBI), எச்டிஎப்சி (HDFC), ஐசிஐசிஐ (ICICI) உள்ளிட்ட எந்த பேங்கிலும் இந்த பேசிக் சேவிங் பேங்க் டெபாசிட் அக்கவுண்ட்டை ஓப்பன் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். பழைய சேவிங் அக்கவுண்ட்டையும் இதற்கு மாற்றி கொள்ளலாம்.

இப்படிப்பட்ட பேசிக் சேவிங் பேங்க் டெபாசிட் அக்கவுண்ட் வைத்து இருக்கும் கஸ்டமர்களுக்கே வருகிற ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. 7 முக்கிய மாற்றங்களை ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவானது அமலுக்கு கொண்டுவர இருக்கிறது. இதில் ஏடிஎம், டிஜிட்டல் பரிவர்த்தனை, செக் டெபாசிட் உள்ளிட்டவை விதிகளுக்குள் வருகிறது.

டிஜிட்டல் பரிவர்த்தனைகள், ஆன்லைன் பரிவர்த்தனைகள், செக் டெபாசிட் அல்லது கேஷ் டெபாசிட் போன்றவற்றின் வழியாக பணத்தை டெபாசிட் செய்து கொள்ளலாம். இதற்காக எந்த கூடுதல் கட்டணம் கிடையாது. அன்லிமிடெட் டெபாசிட் சலுகையை பேங்குகள் கொடுக்க வேண்டும். பேசிக் சேவிங் பேங்க் டெபாசிட் அக்கவுண்ட் அதிகபட்ச லிமிட்டுக்குள் இதை செய்யலாம்.

ஒவ்வொரு வருடமும் குறைந்தது 25 காசோலைகள் கொண்ட செக் புக் இலவசமாக கொடுக்கப்படும். இதில் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கும், புதிய செக் புக்குக்கும் எந்தவித கட்டணங்களும் வசூலிக்கப்படாது. மற்ற அக்கவுண்ட்களுக்கு வழக்கமாக விதிக்கப்படும் வருடாந்திர ஏடிஎம் கட்டணங்கள், இந்த பேசிக் சேவிங் பேங்க் டெபாசிட் அக்கவுண்ட்டில் வசூலிக்கப்படாது.

ஆகவே, ஏடிஎம் கம் டெபிட் கார்டை எந்த கூடுதல் கட்டணங்களும் இல்லாமல், கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இதில் டெபிட் கார்டு வழியாக செலுத்தப்படும் ஆன்லைன் பில்களும் பொருந்தும். அதேபோல ஏடிஎம் வழியாக பணத்தை எடுத்தாலும் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது. இந்த அக்கவுண்ட்டை வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு பேங்குகள் மொபைல், நெட்பேங்கிங் சேவைகளை வழங்கும்.

இதில் மொபைல் பேங்கிங் மற்றும் இன்டர்நெட் பேங்கிங் சேவைகளும் அடங்கும். இப்படி வழங்கப்படும் சேவைகளுக்கும் எந்தவித கட்டத்தையும் பேங்குகள் வசூலிக்காது. பேங்க் பரிவர்த்தனைகளின் விவரங்களை பாஸ்புக்கில் பதிவு செய்து கொள்ளலாம். மாதாந்திர கணக்கு அறிக்கைகளாக பெற்று கொள்ளலாம். இதற்கான பாஸ்புக் இலவமாக கொடுக்கப்படும். அதன் சேவைகளும் இலவசமாக கிடைக்கும்.

ஏடிஎம் கார்டு மற்றும் அதை வைத்து செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு குறைந்தபட்சம் 4 மாதாந்திர லிமிட் கொடுக்கப்படும். இது மினிமமாக கொடுக்கப்படும். இதற்கும் எந்த கட்டணங்களும் கஸ்டமர்களிடம் வசூலிக்கப்படாது. கூகுள் பே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு மாதாந்திர லிமிட் விதிக்கப்படாது. நெப்ட், ஆர்டிஜிஎஸ் உள்ளிட்ட பரிவர்த்தனைகளுக்கும் இது பொருந்தும்.

இந்த பேசிக் சேவிங் பேங்க் டெபாசிட் அக்கவுண்ட்டில் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டிய அவசியம் கிடையாது. ஓப்பன் செய்துவிட்டால் போதும், அவ்வப்போது பரிவர்த்தனைகளை செய்து செயலில் வைத்து இருந்தால் போதும், தொடர்ந்து பயன்படுத்தி கொள்ளலாம். இந்த அக்கவுண்ட்டை வைத்திருக்க அல்லது பயன்படுத்த எந்தவித கட்டணத்தையும் பேங்குகள் வசூலிக்காது.

Best Mobiles in India

English summary
New RBI Rules Come Into Effect From 2026 April 1 Every BSBD Account Customers Need To Know This
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X